அன்பார்ந்த மாணவர்களே, பேராசிரியர்களே !!
தமிழகத்தின் தாய்ப் பல்கலைக் கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயிலும் மெரினா வளாக முதுகலை மாணவர்கள் விடுதியில் உணவகத்தை இழுத்து மூடி விட்டு, மாணவர்களை பட்டினியில் தள்ளி உணவகத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தையும் மாணவர்களையே கட்டச் சொல்லும் நிர்வாகத்தின் வழிப்பறிக் கொள்ளை அரங்கேறி வருகிறது.
மேலும், 2020 மார்ச் மாதம் பாதியிலிருந்து கொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்பட்டு இணைய வழியில் கல்வி நடந்து வந்த சூழலில், பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் அனைவரும் சொந்த ஊரில் இருந்த நிலையிலும், ஏப்ரல் முதல் தற்போதைய நவம்பர் 2020 வரையிலான உணவக தொழிலாளர்களுக்கான சம்பளத்தை மாணவர்களையே கட்டச் சொல்லி விடுதி நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
மேலும், ஜனவரி 2020 – லேயே விடுதியை காலி செய்துவிட்டு சென்ற ஒரு மாணவரின் கணக்கில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரை ரூபாய் 8500 பில் போட்டிருக்கிறார்கள்.
படிக்க:
♦ பாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !
சென்னை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமாக தரமணி, கிண்டி, மெரினா வளாகம் ஆகிய மூன்று இடங்களிலும் உணவுடன் கூடிய விடுதியில் மாணவர்கள் தங்கிப் பயின்று வருகிறார்கள். இதில் சுமார் 35 மாணவர்களை உள்ளடக்கிய மெரினா வளாகத்தில் தற்போது ஆய்வியல் மாணவர்கள் உட்பட 27 மாணவர்கள் தற்சமயம் பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு நடைபெறும் நேரடி வகுப்புகளின் காரணமாக விடுதியில் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவை வழங்க மறுக்கும் நிர்வாகம், விடுதி தொழிலாளர்களுக்கான சம்பளத்தை மட்டும் மாணவர்கள் பாக்கெட்டிலிருந்து தட்டிப் பறிக்கிறது. தற்போது மேனேஜராக நிர்வாக பொறுப்பிலிருக்கும் ஆதி கண்ணன் அவர்களிடம் கேட்டால் அனைத்தும் பதிவாளர் சொல்லித்தான் செய்கிறேன் என்கிறார்.
இந்நிலையில் விடுதியில் தண்ணீர் வரவில்லை என்று கூறியபோது “ஃபீஸ் கட்டினால் சரிசெய்வோம்” என்கிறார். ஒரு அடிப்படை பிரச்சனைக்கும், ”பணத்தை கட்டு.. தீர்க்கலாம்” என்று நடைமுறையில் தனியார் நிர்வாகமாகவே மாறி நிற்கிறார்கள்.
எங்கள் பிரச்சனைகளை தீர்க்க பல்கலைக்கழகத்தின் பதிவாளரை பலமுறை விடுதி மாணவர்கள் சந்திக்க முயன்றும் இதுவரை எங்களை ஒருமுறைகூட அனுமதிக்கவில்லை. கடிதங்கள் அளித்து வெறுத்துப் போனதுதான் மிச்சம்.
இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் இருந்து கீழ்க்கண்ட கோரிக்கைகள் அடிப்படையில் போராட்டத்தை துவக்கினோம். ஆனால், பதிவாளர் தரப்பு முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை துறைத் தலைவர்களை வைத்து மிரட்டுகிறார்கள். தொடர்ந்து நாங்கள் பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நேற்றைய இரவைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் நாளாக தொடர்நது நடைபெற்று வருகிறது.
கோரிக்கைகள் :
*விடுதி உணவகத்தை உடனடியாக திறந்து மாணவர்களுக்கு உணவளி !
* ஊரடங்கு காலத்தில் செயல்படாத விடுதிகபோடப்பட்டிருக்கும் போட்டிருக்கும் விடுதி கட்டணத்தை ரத்து செய் !
* ஊரடங்கில் விடுதி ஊழியர்களுக்கான சம்பளத்தை மாணவர்களிடமிருந்து பறிப்பதை தடுத்து நிறுத்தி நிர்வாகமே வழங்கு !
எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து எங்கள் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
படிக்க :
வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !
கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
மேலும் இந்த கட்டணக் கொள்ளை என்பது எங்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவாகவே இந்த ஊரடங்கில் அரசு பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் வரவில் எத்தகைய நெருக்கடியும் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். அதற்கு மாணவர்களின் தலையை உருட்டுகிறார்கள்.
உதாரணமாக சிதம்பரம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முடிவதற்குள்ளாகவே அடுத்த செமஸ்டருக்கான கட்டணத்தை கட்ட சொல்லியிருக்கிறார்கள். குறிப்பிட்ட தேதியை அடுத்து தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கு ரூ. 25 ஃபைன் கட்ட வேண்டும் என்றிருக்கிறார்கள். இவ்வாறு அரசு மற்றும் தனியார் கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகங்கள் தங்களது நெருக்கடிக்கு மாணவர்களிடம் தீவிரக் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
எனவே எங்களின் கோரிக்கைகளுக்காக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென்று இதன் வழியாக கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இப்படிக்கு
மெரினா வளாக விடுதி மாணவர்கள்
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு : சிவப்பிரகாசம் – 96001 62343