வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. பல விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியின் வீதிகளில் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றன விவசாய சங்கங்கள்.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23 அன்று அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சின்னமலை அருகே ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் அகில இந்திய விவசாயிகளின் போராட்ட  ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள், ஜனநாயக சக்திகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்துக்கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
9176801656.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க