ழலின் ஊற்றுக்கண் முதலாளித்துவ சமூகமே. கார்ப்பரேட்டுகளின் நலன் பொருட்டும் சொத்து சேர்ப்பதன் பொருட்டும் ஊழலைக் கட்டிக்காப்பது ஆட்சியில் இருக்கின்ற அரசியல்வாதிகள்+துணை போகும் அதிகார வர்க்க கூட்டணிதான். சகாயம் போன்றவர்கள் தம் பதவிக்காலத்தில் லஞ்ச லாவண்யங்களுக்கு அடிபணியாமல் நேர்மையாக இருந்திருக்கலாம்.

அப்துல்கலாம் என்ற தனி மனிதர் கூட அப்படித்தான் இருந்தார். மக்கள் பணத்தில் ஊதியம் பெற்ற, நேர்மையான ஒரு அரசு அதிகாரியாக இருந்த வரை எல்லாம் சரிதான். அவருடைய அந்த க்ளீன் அடையாளத்தை மக்கள் மத்தியில் தனக்கான முதலீடாக்கி ஆர்.எஸ்.எஸ். கும்பல் (ஜனாதிபதி தேர்தலில்) அரசியல் சித்து விளையாட்டை நடத்த முற்பட்டதை புரிந்துக்கொள்ள முடியாத ஒரு மனிதராக அவர் இருந்தது எதை காட்டியது?

படிக்க :
அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!
சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !

கனவு காண சொன்னார். 2020-ல் இந்தியா வல்லரசு நாடாகும் என்றார். தம் சொந்தப் பணத்தை எடுக்க ஏ.டி.எம் முன்னால் மணிக் கணக்கில் நின்ற மக்களை போலீஸ் அடித்து விரட்டியதையும் கொரோனா காலத்தில் 1,000 – 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தம் கிராமங்களுக்கு செருப்பு இல்லாமல் பட்டினி வயிற்றுடன் மக்கள் நடந்து செத்ததையும்தான், இந்த தேசம் கண்டது.

வெறும் தொழிநுட்ப அறிவும் புத்தக அறிவும் மட்டுமே அறிந்த ஒருவர், மாத ஊதியம் பெறும் ஒரு அரசு ஊழியராக மட்டுமே இருக்க தகுதி படைத்தவர், அவ்வளவே. ஒரு விஞ்ஞானி என்பவனுக்கு சமூகம் குறித்த அறிவும் சமூக அறிவியல், பொருளாதாரம், வர்க்க அரசியல் குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும், இல்லையேல் அவன் வெறும் தொழிநுட்பாளன், பொறியாளன், அவ்வளவே.

சகாயத்துக்கும் இது பொருந்தும். கலாம், சகாயம் போன்றவர்கள், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளின் வரலாற்றை ஊன்றிப் படிக்க வேண்டும். வாய்ப்பந்தல் வேலைக்கு உதவாது. பேரழிவை உண்டாக்க வல்ல ஒரு புதிய ஆயுதத்தை அமெரிக்கா கண்டுபிடித்து இருப்பதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் சோவியத் ரஷ்யாவின் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகின்றார். அது என்ன ஆயுதம் என்று வெட்ட வெளிச்சம் ஆக்க வேண்டும் என வலியுறுத்தி ஐன்ஸ்டீன், ருதர் போர்ட், டால்டன், ஃபெர்மி, வானவர் புஷ் ஆகிய மகத்தான விஞ்ஞானிகள் ட்ருமனுக்கு கடிதம் எழுதுகின்றனர். அணு ஆயுதங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

மாத ஊதியம் பெற்று வந்த அப்துல்கலாம், அணு ஆயுதங்களின் காதலராக மட்டுமே இருக்கும் அளவுக்குத்தான் அவர் சிந்தனை மட்டம் இருந்தது. அதற்கு மேல் சிந்திக்க வல்லமை இல்லாமல் இருந்ததால்தான், எரிந்து புகைந்துக் கொண்டு இருந்த, சாமானிய மக்களின் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்த குஜராத்துக்கு சென்று ஒரு வார்த்தையும் பேசாமல் விருது வாங்கிக்கொண்டு திரும்ப முடிந்தது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று பேச வைத்தது.

வரலாறு குறித்த அறிவும் சமூக விஞ்ஞானம் பற்றிய அறிவும் இல்லாமல் போனதால்தான் காந்தியின் உருவப்படத்துக்கு நேர் எதிராக சவர்க்காரின் படத்தை திறந்து வைக்கும்போது மனதில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல் இருக்க முடிந்தது. வரலாறும் சமூக விஞ்ஞானமும் அறிந்து இருந்ததால்தான் சவர்க்காருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை கே.ஆர்.நாராயணன் அவர்களால் குப்பையில் எறிய முடிந்தது.

அணுகுண்டு இருந்தாப்போதும், நாடு வல்லரசு ஆகிவிடுமென்று கலாம் சொன்னது எவ்வளவு கேலிக்குறியதோ அதேபோல்தான் ‘ஊழலுக்கு எதிராக’ என்று கிளம்புவதும். இந்தியன் படத்தில் ரேஷன் கடை ஊழியர்களையும் ஆர்.டி.ஓ. ஆபீஸ் ஏஜெண்டுகளையும் வர்மத்தில் முறுக்கி வாயை கோணலாக்கி ஸ்பெஷல் கத்தியால் குத்தி சங்கரின் சேனாபதி ஊழலை ஒழித்த கதைக்கும், அம்புலிமாமாவில் சர்க்கார் மேஜிக் கதைக்கும் கலாம் சகாயம், அன்னா ஹசாரே போன்றோர் வெறும் வாயில் சுடும் வெத்து வேட்டு வல்லரசு வடைக்கும் பெரிய வேறுபாடு ஒண்ணும் இல்லை.

படிக்க :
♦ அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

♦ அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

அன்னா ஹசாரேயின் ‘ஊழலுக்கு எதிரான’ போரில் அவர் மேடையில் தேசியக்கொடியை கையில் ஏந்தி வீசிக்கொண்டு இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு கவர்னர் பதவி கொடுத்தது யார் என்பதையும், பதவிக்கு வந்த பின் மேற்படி ஜனநாயகம் அவர் கையில் சிக்கி என்ன பாடுபட்டது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

முகநூலிலிருந்து : Iqbal Ahamed

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க