பாரத் பயோடெக்கின் பொது நிதியளிக்கப்பட்ட கோவாக்சின் யாருடைய அறிவுசார் சொத்து ? இந்திய மக்கள் பதில்பெறத் தகுதியானவர்கள்தான்.

ICMR அல்லது அரசாங்கம் அந்த உரிமைகளை வைத்திருக்குமானால் ஒரு உலகத் தொற்று அபாயத்தின் போது, இவை எப்படி தங்களை மதிப்புயர்த்திக் கொண்டன என்பதைப் பற்றி அறிவதற்கான உரிமை இந்திய மக்களுக்கு உண்டு.

சமீபத்தில் பாரத் பயோடெக் மருந்து கம்பெனி அதிகாரப் பூர்வமாக கோவிட்-19 தடுப்பூசி மருந்து கோவாக்சின் விற்பனை விலையை அறிவித்தது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 எனவும் விலையை நிர்ணயித்து வெளியிட்டது. (கொள்ளை லாபத்தில் ரூ.100 குறைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது) சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா தயாரித்து வெளியிட்டிருக்கும் தடுப்பூசி கோவிசீல்டு-க்கு அது நிர்ணயித்திருந்த விலையை விட இது மிக அதிகமாக இருந்தது. விமர்சகர்கள் இந்த விலையேற்றத்தை பல்வேறு கேள்விகளுடன் பார்க்கின்றனர்.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு
♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

சீரம் இன்ஸ்டிட்யூட் தனது தரப்பில் ஸவிடிஸ்-பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராஸெனிகா-க்கு ராயல்டியாக நிதி தரவேண்டும். அதனிடமிருந்துதான் தடுப்பூசி தயாரிப்பதற்கான லைசன்ஸ் பெற்றுள்ளது. ஆனால், பாரத் பயோடெக் யாருக்கும் ராயல்டியாக நிதி கொடுக்க தேவையில்லை. கோவாக்சின் பெரிய அளவில் இந்தியாவின் இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற அக்கறையின்மை மற்றும் அப்பட்டமான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் சகித்துக் கொண்டு வாழ்வது கடினம்தான். அதுதான் உண்மையில் உள்ளது. பொது நிதியைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

கோவேக்சின் SARS-CoV-2 strain-ஐ அடிப்படையாக கொண்டது. புனேயில் உள்ள தேசிய இன்ஸ்டிடியுட் ஆப் வைராலஜி-யில் பிரித்தெடுக்கப் படுகிறது. இந்த நிறுவனம் இந்தியன் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ICMR இந்த ஸ்ட்ரெயினை பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வளர்ச்சி மற்றும் உற்பத்திக்காக மாற்றித் தருகிறது.

ICMR 10 மே, 2020-ல் விடுத்த ஒரு அறிக்கை இந்த கூட்டியக்கத்தை பின்வரும் வார்த்தைகளில் விளக்குகிறது.

“தடுப்பூசி மேம்பாட்டிற்கானப் பணி இரண்டு பங்குதாரர்கள் இடையே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ICMR-NIV தனது தொடர்ந்த ஆதரவை BBIL (பாரத் பயோடெக்)-ன் தடுப்பூசி மேம்பாட்டு பணிகளுக்கு வழங்கி வரும். ICMR மற்றும் BBIL தடுப்பூசி மேம்பாடு கூடுதலாக விலங்குகள் பற்றிய ஆய்வு மற்றும் தனிநபர் தடுப்பூசிக்கான மருத்துவ மதிப்பீடு ஆகியவற்றுக்கான பணிகளை துரிதபடுத்தும் விதமாக விரைவுவழி அனுமதியை கோரியிருக்கிறது”.

ஊடகங்களில் ஓரு ICMR அலுவலர் கூறும் போது “ICMR and BBIL ஆகிய இரண்டும் தடுப்பூசியின் முன்-மருத்துவ மற்றும் மருத்துவ மேம்பாட்டிற்காகக் கூட்டாக வேலை செய்கின்றன” என்றார். தடுப்பூசியின் மருத்துவ சோதனைகளுக்காக 12 இன்ஸ்டிடியுட்களை தேர்வு செய்திருப்பதாக ICMR அறிவித்துள்ளது.

ICMR மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலானக் கூட்டு வேலை பற்றி பொதுக் களத்தில் கிடைக்கும் விவரங்கள் இவை மட்டுமே. ஆனால், கோவாக்சின் இரண்டு நிறுவனங்களின் நெருக்கமானக் கூட்டுப் பணியின் விளைவுதான் என்று அவை விளக்குகின்றன.

என்றாலும், SARS-CoV-2 திரட்டை பிரித்தெடுத்தல் மற்றும் இதுதொடர்பான குறுக்கீடுகள் பற்றி இதுவரை நமக்கு எதுவும் தெரியாது. தடுப்பூசியை வடிவமைத்தல் மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட மொத்த நிதியில் பொது நிதி முதலீட்டின் அளவை எவராலும் அளவிட முடியாது.

ஆனால், தடுப்பூசியை மேம்படுத்துவதில் ICMR-ன் ஈடுபாடு மற்றும் கட்டுபாடும் உண்மையில் கணிசமானது என்பதை வேறுசில குறிகாட்டிகள் தெரிவிக்கின்றன. முதலில் ஜீலை 3-ல் மருத்துவ சோதனைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு ICMR இயக்குநர் பல்ராம் பார்கவா எழுதியிருந்தக் கடிதத்தின் அம்சங்கள் – பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஒரு நகல் என குறிப்பிடப்பட்டிருந்தது – செய்திகளில் வந்திருந்தன.

அந்த கடித்ததில் “அனைத்து மருத்துவ சோதனைகளும் முடிந்த பிறகு, பொதுச் சுகாதாரப் பயன்பாட்டிற்கான தடுப்பூசியை ஆகஸ்ட் 15, 2020-க்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. BBIL (பாரத் பயோடெக் இன்டர்நேசனல் லிமிடெட்) இந்த இலக்கை அடைவதற்காகவே துரிதகதியில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. என்றாலும், இறுதி விளைவு இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ சோதனைத் தளங்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது.” என்றிருந்தது.

அந்த கடிதம் மேலும், எச்சரித்திருந்தது. “குறிப்பிட்டதற்கு மாறாக நடந்துக் கொள்வது மிகுந்த கண்டனத்துக்குரியதாகப் பார்க்கப்படும் என்பதை அன்புடன் கவனிக்கவும். எனவே, இந்த திட்டத்தை அதி உயர்ந்த முக்கியத்துவம் கொடுத்து எந்தவிதக் காலவிரயமும் இல்லாமல் கொடுக்கப்பட்ட கால அளவுகளை கடைபிடிக்க வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தப் படுகிறீர்கள்” என்றிருந்தது.

மிக தெளிவாக இந்திய அரசு கோவாக்சினை எந்த வகையிலாவது  2020 சுதந்திரதினத்தன்று அடிப்படை மருத்துவச் சோதனைகளை முடிக்கும் முன்னரே  வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதில் மிகுந்த அவசரம் காட்டியது. தனது தோழமை நிறுவனங்களுக்கும் பாரத் பயோடெக் உட்பட ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னாலேயே அவர்களது பணியினை முடிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது.

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ICMR-ன் இயக்குநர் ஜெனரல் இப்படியொருக் கடித்ததை எழுதினார் ? நிச்சயமாக தடுப்பூசி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நடைமுறைகள் மீது ICMR சில கட்டுப்பாட்டை  பெற்றிருக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டின் சரியான தன்மை என்ன ? துரதிர்ஷடவிதமாக நமக்கு தெரியாது.

இரண்டாவதாக, இந்த ஆண்டு ஏப்ரல்-17 இந்திய அரசு மும்பையிலிருக்கும் ஹாஃப்கின் (Haffkine) உட்பட மூன்று புதிய நிறுவனங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதியளித்தது. எந்த அதிகாரத்தின் பேரில் இந்திய அரசு பாரத் பயோடெக்கின் கோவாக்சினை தயாரிக்க இந்த நிறுவனங்களுக்கு லைசன்சுகளை வழங்கியது ? அரசின் சாதாரண நிர்வாக அனுமதியா அல்லது தடுப்பூசியின் அறிவுசார் சொத்துரிமையின் உரிமையாளர் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட அனுமதி கடிதமா ?

நிச்சயமாக இந்திய அரசு இப்படிப்பட்ட அனுமதியைக் கொடுப்பதற்கான சில அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, கட்டாய உரிமம் வழங்கும் எந்த ஏற்பாடுகளையும் செய்திருக்காதபோது. அது என்ன அதிகாரம்? துரதிர்ஷடவிதமாக நமக்கு தெரியாது.

மொத்தத்தில் பாரத் பயோடெக் குடனான ICMR-ன் உறவைச் சுற்றி இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் ஒளிஊடுருவ இயலாநிலையைக் குறிக்கிறது. கோவாக்சினின் அறிவுசார் சொத்துடமையின் உரிமையை யார் வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் பொதுக்களத்தில் இல்லை. இந்த தலைப்பிலான ஒரு முக்கியமானக் கட்டுரையில் அனுப்பிரியா தோன்சக் மற்றும் அனிக் பாதுரி ஆகியோர் இந்த மையமானக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் பொதுநிதி விதிகள் 2017-ல் இருக்கும் வழிமுறைகளை உதவிபெறும் திட்டங்களுக்கோ அல்லது செயல்பாடுகளுக்கோ நிதி அளிப்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்கள். அந்த விதிகள் இந்த திட்டங்கள் நிறைவேறியவுடன் “இந்த மாதிரியான விசயங்களில் ஒரு நிபந்தனைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். அந்த மாதிரியான நிதிகளில் உருவாக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட பௌதீக மற்றும் அறிவுசார் சொத்துகளின் உரிமையாளர் பற்றி ஸ்பான்ஸரில் காட்டப்பட வேண்டும்” என்கிறது. ICMR-க்கும் பாரத் பயோடெக்கிற்கும் இடையிலான ஒப்பந்தத்திலிருக்கும் நிபந்தனை என்ன ? துரதிஸ்டவசமாக நமக்கு தெரியாது.

தடுப்பூசியை மேம்படுத்துவதற்கான ஆய்வில் பொதுநிதி ஈடுபடுத்தப் பட்டிருக்கிறதா என்பதை அறிய இங்கு ஒரு மாற்று வழி உள்ளது. தடுப்பூசி சம்பந்தமாக வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வுக் கட்டுரைகளில் இதுவரை நிதி ஆதரவுக் குறித்து கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை நம்மால் ஆய்வு செய்ய முடியும். பாரத் பயோடெக் கூற்றுப்படி இன்று வரை கோவாக்சின் மீதான ஆறு சர்வதேச மதிப்பாய்வு இதழ் வெளியீடுகள் இருக்கின்றன. கீழே இருக்கும் அட்டவணையில் ஆறு வெளியீடுகள் மற்றும் நிதி ஆதாரசீட்டுகள் பற்றிய சுருக்கமான வடிவம் உள்ளது.

ஒன்று சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் அல்லது புனேயிலிருக்கும் தேசிய இன்ஸ்டிடியுட் ஆப் வைராலஜி அல்லது ICMR ஆகியவற்றிலிருந்து நிதி உதவிப் பெற்றிருப்பதை தனது ஆறு கட்டுரைகளில் நான்கில் தெளிவாக அங்கீகரித்திருப்பதை நாம் அறிந்து கொண்டோம். அந்த ஆறு ஆய்வுக் கட்டுரைகளும் பாரத் பயோடெக் மற்றும்  ICMR/National Institute of Virology ஆகியவற்றிலிருந்து ஸ்காலர்ஸ் இணைந்து எழுதப்பட்டவை. ஆறு கட்டுரைகளில் ஐந்தில் ICMR Director General பலராம் பார்கவா ஒரு இணை ஆசிரியர்.

இந்த ஆறு கட்டுரைகளும் நிதி உதவியின் அளவு குறித்து எந்த விவரங்களையும் தரவில்லை. என்றாலும், தடுப்பூசியின் வெற்றிகரமான உருவாக்கத்திற்குக் காரணமாயிருந்த ஆய்வுகளுக்கு பொதுநிதி உண்மையில் செலவிடப் பட்டிருப்பதைப் பற்றி மறுக்க முடியாத ஆதாரங்களை தருகிறது. (பார்க்க ஆங்கில மூலக்கட்டுரை)

இந்திய மக்களில் வரிக் கட்டுவோரின் பணம் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடுத்தப் பட்டிருந்தால் மத்திய அரசு இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வைப்பதுதான் பொருத்தமானது. அரசு அல்லது ICMR கோவாக்சினின் அறிவுசார்சொத்துடமை உரிமையை வைத்திருப்பது உண்மையாக இருந்தால் இன்னொரு கேள்வி எழுகிறது. அறிவுசார் சொத்துரிமை பொது உரிமையாக இருக்கும் போது பாரத் பயோடெக் என்ற ஒரு கம்பெனிக்கு மட்டும் தயாரிப்புக்கானப் பிரத்யோகமான உரிமம் வழங்கப் பட்டிருப்பது ஏன்? தடுப்பூசி தயாரிப்பதற்கான பிரத்யோகமற்ற உரிமங்களை பல உற்பத்தியாளர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை.

தடுப்பூசிகள் பற்றாகுறை மற்றும் அதன் இமாலய விலை ஆகியவற்றுக்கு இவை முக்கியமான காரணமாகும். குறிப்பிட்ட இரு நிறுவனங்கள் மட்டும் இந்திய மக்களின் சோதனையானக் காலத்தில் கொள்ளை லாபம் அடிக்க மோடி அரசு சேவை செய்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?

பின்னதாக, Ocugen ஆகுஜென் போன்ற பல  நிறுவனங்களுடன் அமெரிக்காவில் 100 மில்லியன் டோஸ்ஸ் கோவாக்சின் தடுப்பூசியை வழங்கிட பாரத் பயோடெக் தனது பிரத்யோகமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாரத் பயோடெக் இந்த மாதிரியான ஏற்பாடுகள் மூலம் பெற்றிருக்கும் லாபத்தில் அறிவுசார் சொத்துரிமையில் பங்குகள் வைத்திருக்குமானால் ICMR தனதுப் பங்கினைப் பெற்றுக் கொள்கிறதா? துரதிஸ்டவசமாக நமக்கு தெரியாது.

உண்மையில் ICMR மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் அனுபவங்கள் Oxford-AstraZeneca ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகள் இங்கிலாந்தில் பொது உரிமையாக இருந்து தனியார் உரிமையாக மாறியதை நினைவுப் படுத்துகிறது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி தயாரிக்க தேவைப்படும் நிதியில் 97 சதவீதம் இங்கிலாந்து அரசு துறைகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருக்கும் அறிவியல் நிறுவனங்கள் ஐரோப்பியன் கமிசன் மற்றும் பலவேறு அறக்கட்டளைகள் ஆகியவற்றின் மூலமே வந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆயினும், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தடுப்பூசிகளுக்கு திறந்த வகை உரிம்மேப் பராமரிக்கப்படும் என்று உறுதியளித்ததிலிருந்து பின்வாங்கியது. அஸ்ட்ரா ஜெனிகாவுடன் பிரத்யோகமான ஒரு உரிமத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நன்கு அறிந்தபடி அஸ்ட்ரா ஜெனிகா அதே தடுப்பூசிக்காக சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியாவுடன் மற்றொரு பிரத்யோகமான ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது அதன்படி கோவிஷில்டு என்ற பெயரில் இந்தியாவில் விநியோகிக்கப்படும். பொது நிதியில் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி தனியார் நிறுவனங்களின் லாபமீட்டும் கருவியாக மாறிவிட்டது.

இந்தியா இதே விதியை கோவாக்சினுக்கு அனுமதிக்கக் கூடாது அப்படி நீடித்தால் இன்றிருக்கும் இதே மோசமான நிலைதான் இந்திய மக்களுக்குத் தொடரும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இந்தியா உடனடியாக செய்ய வேண்டியது கோவாக்சின் தடுப்பூசி சம்பந்தபட்ட அனைத்து உடன்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ICMR மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் இந்த விசயத்தில் முன்கையெடுக்க வேண்டும்.

ICMR அல்லது இந்தியா அரசாங்கத்துக்கு கோவாக்சினின் அறிவுசார் சொத்துரிமை, உரிமையானதாக இருந்தால் இந்த உலக தொற்று அபாயகரமான நிலைமையில் இந்த அறிவுசார் சொத்துரிமை பொது மக்களின் நலனுக்கு அந்நியமானது பற்றி அறிந்துக் கொள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது மட்டுமல்ல, அதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலம் தடுப்பூசி பற்றாக்குறையை முற்றிலும் போக்க முடியும்.

படிக்க :
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி
♦ கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ

இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற அக்கறையின்மை மற்றும் அப்பட்டமான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் சகித்துக் கொண்டு வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம்.

ஏற்கனவே, மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்காக வீதிகளில், அடிக்கும் வெயிலில் வரிசைகளில்தான் நிற்கிறோம். அதை கலைத்து அப்படியே நம்மை ஏமாற்றி கார்ப்பரேட்களின் கையாளாக செயல்படும் மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டமாக மாற்றுவோம். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகமில்லை. விளைவுகளோ மலையளவு மாற்றங்கள் நமது வாழ்வில்.


மூலக்கட்டுரை : R. Ramakumar is Professor, Tata Institute of Social Sciences, Mumbai.
தமிழாக்கம் : மணிவேல்
செய்தி ஆதாரம் :
Scroll.in