கொரோனா முதல் அலையில் நோயாளிகளை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருத்து செயற்கையாகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரூ.4 ஆயிரத்திற்கு விற்ற இம்மருந்து தனியார் மருத்துவமனைகளில் ரூ.14 ஆயிரம் வரை சென்றுள்ளது. கள்ள சந்தைகளில் ரூ.40 ஆயிரம் வரை அதிகமாக விற்கப்படுகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி கொரோனா தொற்று பரவல் இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு உயிர் இழப்புகள் நிகழ்ந்தது அனைவரும் அறிந்தது.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

♦ கொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்

ரெம்டெசிவிர் என்ற மருந்து இந்தியாவில் வைரஸ் நோய்களான பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா வைரஸ்களை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அனைத்து வகையான வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியது இந்த ரெம்டெச்வர் மருந்து.

கொரோனா முதல் அலையில் இந்த தடுப்பு மருந்து கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்தியதில் நல்லப் பலன் கிடைக்கிறது. அலர்ஜி இல்லாத உடல்களின் உடனே குணமடைய செய்கிறது என்றும் கூறப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களின் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என்ற காரணத்தால், பணம் படைத்தவர்கள் தனியார் மருத்துமனையை நாடிச் செல்கிறார்கள். ஏழை நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகிறார்கள், அங்கு இடம் இல்லை என்றால் உயிரிழக்கும் அவலநிலைதான் உள்ளது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருத்து செயற்கையாகத் தட்டுப்பாடு ஏற்படுத்தப் படுகிறது என்று மருத்துவர்கள் கூறுக்கிறார்கள்.

கொரோனா நோயாளிகளை நுரையீரல் பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்கு இந்த ரெம்டெசிவிர் பயன்படுகிறது. ஒரு நோயாளிக்கு 6 டோஸ் வரை போட வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

சென்ற மார்ச் மாதம் மத்திய அரசு ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அம்மருந்தை பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, லாபமீட்டி வருகிறது. ரெம்டெசிவிர் 100 மில்லி கிராம் குப்பி ரூ.900 முதல் அதிகபட்சம் ரூ.4,800 வரை இருந்தது. ஆனால், தற்போது தனியார் மருத்துவமனைகளில் ரூ.14 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. கள்ள சந்தையில் இதன் விலை ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே அதிக கொரோனா நோயாளிகள் வந்தால் அவர்களை பராமரிக்கவும் சிகிச்சை அளிக்கவும் போதுமான படுக்கைகள், மருத்துவர்கள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை. பணம் படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்று இந்த ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலை கொடுத்து வாங்கி தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் ஏழை, நடுத்தர மக்கள் எங்கே போவார்கள். எப்படி தங்களை உயிரை கொரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்வார்கள். அரசு மருத்துவமனைகள் கைவிரித்து விட்டால் அவர்களுக்கு செத்துப்போவதை தவிர வேறுவழி இல்லை. அரசு மருத்துவத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கும் நோக்கம் இல்லாமல், தனியார் மருத்துவமனைகளை அனுமதித்ததே இந்த அவலநிலைக்கு காரணம்.

மருத்துவ துறையில் தனியார் மயத்தை ஒழித்து மக்களுக்கு மருத்துவத்தை சேவையாக செய்ய அரசு முன்வரவில்லை என்றால், கொரோனா பெரும் தொற்றில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்றுவது எந்த காலத்திலும் முடியாது.

படிக்க :
♦ புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

எனவே கொரோனா எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் மருந்தை அரசே கையகப்படுத்தி மக்களுக்கு இலவசமாக செலுத்த வேண்டும். செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தும் நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை உடனே தடை செய்ய வேண்டும். கட்டணக் கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்க வேண்டும்.


சந்துரு
செய்தி ஆதாரம் : தினகரன் 25.4.21

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க