த்திரப் பிரதேசத்தில் அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதுமில்லை என்று கூறிய உ.பி முதல்வர் ஆதித்யநாத், இதற்கு எதிராக ‘புரளி’ பரப்பும் சமூக விரோதிகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் மூலம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

“உ.பி-யில் அரசாங்க மற்றும் தனியார் கோவிட் மருத்துவமனைகள் எதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. பதுக்கலும் கள்ளச் சந்தையும்தான் சிக்கலாக இருக்கின்றன. இது கடுமையாக கையாளப்படும். ஆக்ஸிஜன் தேவையை கண்காணிக்க ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.எம் லக்னோ மற்றும் ஐ.ஐ.டி பி.எச்.யூ (IIT-BHU) ஆகியவற்றுடன் இணைந்து ஆக்ஸிஜன் தணிக்கை நடத்த உள்ளோம்.

படிக்க :
♦ கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

ஆக்ஸிஜன் தேவை, வழங்கல் மற்றும் பகிர்மானம் ஆகியவற்றை நேரடியாக கண்காணிக்கும் முறை செயல்படுத்தப்படும்” என்று மெய்நிகர் உரையாடலின் போது ஆதித்யநாத் கூறினார். ரெம்டேசிவிர் உள்ளிட்ட மருந்து பற்றாக் குறையும் உ.பி-யில் இல்லை என்று மேலும் அவர் கூறினார்.

ஆனால், கோவிட் – 19 தொற்று நோய் சிகிச்சையளிக்கப் போதுமானப் படுக்கை வசதிகள் உ.பி-யில் இல்லை என்றும் பல நோயாளிகள் மருத்துவமனைகளால் திருப்பியனுப்பட்டதாகவும் பல்வேறு செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. கோவிட்-19 சிகிச்சைக்காக லக்னோ மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்த 96 தனியார் மருத்துவமனைகளின் அழைப்பு எண்கள் பயன்பாட்டில் இல்லை.

மருத்துவமனையில் இடம் கிடைக்க கோவிட்19-க்கான ஆணையம் அல்லது தலைமை மருத்துவ அதிகாரியிடமிருந்து பரிந்துரை வேண்டும் என்று சில மருத்துவமனைகள் கூறுவதாக இண்டியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

ஏப்ரல் 21-ஆம் தேதி “கடுமையானப் பாதிப்பிலிருக்கும் நபர்களைத்” தவிர வேறு தனி நபர்களுக்கு ஆக்சிஜன் வழங்கக் கூடாது என்று ஆதித்யநாத் அரசாங்கம் ஆணையிட்டிந்தது.   தனியார் பதுக்கலைக் கட்டுப்படுத்தற்காக ஆக்சிஜன் உருளைகளைப் பெறுவதற்கு மருத்துவரின் மருந்துச்சீட்டு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

உ.பி-யில் படுக்கை வசதி இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் இருக்கு கொரோனா நோயாளிகள்.

ஆனால், எதார்த்தத்தில் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் கடுமையான பாதிப்பிலிருக்கும் நபர்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டு சேர்ப்பதில் ஆதியநாத்தின் இந்த ஆணை பெரும் தடையாக இருக்கிறது.  லக்னோவில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் ஆக்சிஜனை உருளையில் நிரப்பி கொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களிடம் பரிந்துரை கடிதங்கள் பெற்று வந்தவர்கள் கூட இதனால் திருப்பியனுப்பட்டுள்ளனர்.

“கிட்டத்தட்ட 500 நபர்கள் ஆக்சிஜன் நிரப்ப வந்திருக்கின்றனர். அவர்களது கையறு நிலை எங்களுக்குப் புரிகிறது. மருத்துவமனைகள் அவர்களை அனுமதிக்கவில்லை. அரசாங்கமும் வீட்டு தனிமைப்படுதலில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உருளைகள் கொடுக்க விரும்பவில்லை.” என்று முராரி ஆக்சிஜன்  உற்பத்தி ஆலையில் ஆக்சிஜன் நிரப்புவதற்காக நின்றிருந்தவர்களை கைது செய்ய வந்திருந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

“நாங்கள் கையறு நிலையில் இருக்கிறோம். ஆக்சிஜன் உற்பத்தி ஆலைக்குள் அவர்களை நுழைவதைத் தடுக்கவே எங்களுக்கு ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.” என்று அவர் மேலும் கூறினார்.  மக்களுக்காக சேவை செய்யவே போலீஸ் என்ற கூற்று எவ்வளவு மோசடியானது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்தான் இது.

கோரக்பூர் மருத்துவமனையில், 2017-ஆம் ஆண்டில் ஆக்சிஜன் இல்லாமல் 60 குழந்தைகள் பலியானார்கள். அன்று முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காகப் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மருத்துவர் கஃபீல்கான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

படிக்க :
♦ புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

இன்று மூலை முடுக்கெல்லாம் கொரோனா பேரவலத்தாலும் அரசாங்கத்தின் அக்கறையற்றப் போக்கினால் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் மக்கள் மாண்டு போகின்றனர். மக்களின் துயர்துடைக்கவும், ஆதித்யநாத் அரசாங்கத்தை அம்பலப்படுத்தவும் செய்யும் கஃபீல்கான்கள் மீது தேசப் பாதுகாப்பு சட்டமும் குண்டர் சட்டமும் பாய இருக்கின்றன.


ஆறுமுகம்
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க