பத்தான புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக மைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு மார்ச் மாதத் தொடக்கத்தில் எச்சரித்திருக்கிறது. ஆனால், இந்த எச்சரிக்கைகளை மைய அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என்றும் எவ்விதக் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தவில்லை என்றும் அந்த குழுவைச் சேர்ந்த 4 அறிவியலாளார்கள் கூறியுள்ளனர்.

பல்வேறு மத ஒன்று கூடல்கள், தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தைக் கடுமையான அளவிற்கு முடுக்கிவிட்டன.  மோடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றக் கூட்டங்களில் பல இலட்சக்கணக்கான மக்கள் முகவுறைக் கூட அணியாமல் கலந்துக் கொண்டது கொரோனாவின் வீச்சைக் கடுமையாக்கிவிட்டது.

படிக்க :
♦ கும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்

♦ கும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்

இந்திய சார்ஸ்-கோவிட்-19 மரபியல் கூட்டமைப்பு (Indian sars-cov-2 genomics consortium) இந்திய அரசாங்கத்தால் 2020 டிசம்பர் மாதத்தில் 10 தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. இந்தியாவில் கோவிட்-19 வைரஸின் புதிய பிறழ்வுகளை ஆய்ந்தறிவதுதான் அதனுடைய முதன்மையான பணி.

இதன் அடிப்படையில் புதிய மாறுபாடடைந்த பிறழ்வுகளான E484Q மற்றும் L452R கண்டறிந்ததுடன் இரண்டுக்கும் “மிகுந்த கவனம் தேவை” என்றும் அது குறித்த தகவல்களை மார்ச் 10-ம் தேதி அன்றே சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திடம் பகிர்ந்துள்ளது.  அதன் பிறகு, அதன் ஆய்வு அறிக்கைகளை சுகாதாரத் துறைக்கும் அனுப்பபட்டது. ஆனால், அமைச்சகம் பதிலேதும் சொல்லவில்லை.  அதிகம் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிராவில் ஆய்வு செய்ததில் புதிய வகை வைரஸ் 15 முதல் 20 விழுக்காடு வரை இருந்ததாக அதனுடைய அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தது.

குறிப்பாக, E484Q பிறழ்வு மிகவும் பொதுவான ஆண்டிபாடிகளை எதிர் கொள்ளக் கூடிய திறன் பெற்றிருக்கிறது என்றும், L452R குறிப்பாக அதிகப் பரவலுக்கும் நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்புவதற்கும் காரணமாக இருப்பதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, இந்த பிறழ்வுகள் எளிதில் மனித உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கக் கூடிய தன்மைக் கொண்டது என்று வரையறுத்தனர்.

ஆனால், இந்த அறிக்கைகையை 2 வாரங்களுக்கு பின்புதான் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த அறிவிப்பில் அறிவியலாளர்கள் குழு எச்சரித்த “மிகுந்த கவனம் தேவை” என்ற சொற்கள் இடம்பெறவில்லை.  வெறுமனேப் பிறழ்வுகளுக்குத் தேவையானத் தனிமைப்படுத்தலும் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக மட்டுமே கூறியது.

ஆனால், ஏன் அந்த எச்சரிக்கையை மோடி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. அதிக கவனம் கொடுக்கவில்லை?. அதாவது, மக்கள் அதிகம் கூடுவதை ஏன் தடுக்கவில்லை என்ற கேள்விக்கு குழுவின் தலைவர் ஷாஹித் ஜமீல் கூறுகிறார் “நாங்கள் கண்டறிந்த சான்றுகளுக்கு அதிகாரிகள் கவனம் கொடுக்கவில்லை.  கொள்கைகள் சான்றுகளால் வகுக்கப்பட வேண்டும். கொள்கைகளை வகுப்பதற்கு அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று நான் அஞ்சுகிறேன். ஆனால், என்னுடைய அதிகாரம் எதுவரை என்பது எனக்கு தெரியும். அறிவியலாளர்கள் சான்றுகளை ஆய்ந்து கொடுப்போம். அதன் அடிப்படையில் கொள்கைகளை வகுப்பது அரசாங்கத்தினுடையக் கடமை” என்று அவர் கூறினார்.

அறிவியலாளர்கள் குழு தங்களது அறிக்கையை மோடியிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபாவிடம் அனுப்பியதாகவும் ஆனால், பதிலேதும் கிடைக்கவில்லை என்றும் கூறியது. அதன் பிறகானக் காலங்களில் சமய கூட்டங்கள், தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் எவையும் மோடி அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை. மாறாக பல இலட்சக்கணக்கான இந்து பக்தர்கள் கலந்துக் கொண்ட கும்பமேளாவை அனுமதித்தது மட்டுமல்லாமல் கங்கா மாதா கொரோனாவிடமிருந்து கும்பமேளா பக்தர்களைக் காப்பாற்றுவார் என்றெல்லாம் கூறியிருந்தார்.

படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு
♦ கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டிருந்தால் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கும். மேலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் குறைந்திருக்கும். ஆனால், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளா, நாட்டு மக்களின் நலனா, என்றால் முன்னதைதான் மோடி தேர்வு செய்துள்ளார். அது பாசிஸ்டுகளின் மனநிலை.


ஆறுமுகம்
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க