இலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்

பிரஃபுல் படேல் மூலம் தனது கார்ப்பரேட்-காவி பாசிசத்தை இலட்சத்திவில் மோடி அரசு அரங்கேற்றுவது பற்றி கடந்த ஜூன் 14 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் முகநூல் பக்கத்தில் தோழர் சுரேசு சக்தி முருகன் ஆற்றிய உரை !

இலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் !

குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் படேலை தற்போது இலட்சத்தீவில் நிர்வாகியாக நியமித்துள்ளது இந்திய ஒன்றிய அரசு.

இலட்சத்தீவு விலங்குகள் பராமரிப்பு ஒழுங்குமுறை விதியின்படி பசு, காளைகள், கன்றுகள் போன்றவற்றை கொல்வதற்கு தடை விதித்துள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதைத் தடுக்க பஞ்சாயத்து ஒழுங்குமுறை விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இலட்சத்தீவு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பின் மூலம், இலட்சத்தீவில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும் என்று மாற்றி கார்ப்பரேட் கும்பல் இலட்சத்தீவைக் கொள்ளையிட வழிவகை செய்துள்ளது.

இலட்சத்தீவு சமூகவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் குண்டர் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இலட்சத்தீவில் ஒரு கோவிட் நோயாளிகூட கிடையாது என்ற நிலை இருந்தது. பிரஃபுல் படேல் பொறுப்பேற்ற பின்பு, கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இப்படி, பிரஃபுல் படேல் மூலம் தனது கார்ப்பரேட்-காவி பாசிசத்தை இலட்சத்தீவில் மோடி அரசு அரங்கேற்றுவது பற்றி கடந்த ஜூன் 14 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் முகநூல் பக்கத்தில் தோழர் சுரேசு சக்தி முருகன் ஆற்றிய உரை !

காணொலியை பாருங்கள் !! பகிருங்கள் !!


தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க