தேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு ? || தோழர் சுரேசு சக்தி முருகன்

கார்ப்பரேட்களின் நலன்களின் மீது எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மக்களும் ஜனநாயக சக்திகளும் அடக்கப்படுவதற்கே இது மாதிரியான மக்கள் விரோத சட்டங்கள் பயன்படும் என்பதை இந்த காணொளியில் விளக்குகிறார் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன்.

தேச துரோக சட்டம் 124-A என்பது இந்திய குடிமக்களுடைய வாழ்க்கையை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட இத்தகைய அடக்குமுறை சட்டங்கள், ஒரு போதும் இந்திய அரசால் நீக்கம் செய்யப்படாது.

இந்த அடக்குமுறை சட்டங்கள் மேலும் தீவரமடையத்தான் செய்யும். அரசின் செயல்பாடுகளால் மக்கள் பாதிக்கப்படும் போது அதை எதிர்த்து குரல் கொடுக்கவோ போராடவோ முற்பட்டால், அவர்கள் இந்த அரசால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

குறிப்பாக கார்ப்பரேட்களின் நலன்களின் மீது எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மக்களும் ஜனநாயக சக்திகளும் அடக்கப்படுவதற்கே இதுமாதிரியான மக்கள் விரோத சட்டங்கள் பயன்படும் என்பதை இந்த காணொலியில் விளக்குகிறார் வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க