லகம் முழுக்க ஓர் ஆடை பெரும் விவாதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது மதங்களின் அடிப்படையில் பெண்கள் அணியும் பர்தா, ஹிஜாப், நிகாப், சடோர் போன்ற ஆடைகள்தான். அதனால்தான் அந்த ஆடையை பற்றி பல கேள்விகளும் விளக்கங்களும் பலராலும் முன் வைக்கப்படுகின்றது. இது மதங்களின் மரபுகளாக கத்தோலிக்கம் மற்றும் யூதத்தில் இன்று வரை பின்பற்றப்படுகிறது.
இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தில் ஒரு சிறிய நம்பிக்கை கொண்ட சமூகமாகத் தொடங்கியது. இந்த சமூகமானது கடவுளின் தூதுவராக இசுலாமியர்கள் போற்றும் முகமதுவால் (பொது ஆண்டு 570 – 632 ) நிறுவப்பட்டது. பின்னர், அங்கிருந்து அது மத்திய கிழக்கு வழியாக சஹாரா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் அரபிக் கடலைச் சுற்றியுள்ள பல சமூகங்களுக்குப் பரவியது.
படிக்க :
பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இஸ்லாம் நிறுவப்பட்ட பிறகு, அது ஐரோப்பாவிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினால் ஊடுருவியது.
ஏழாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் (இன்றைய சவுதி அரேபியா உட்பட) இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே எண்ணற்ற கலாச்சாரங்களில் பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில் ஒரு சிறிய ஆடை வழக்கத்தில் இருந்திருக்கிறது. பெண்களுக்கான தலைமறைப்பு ஆடை (துணி) தான் அது. ஆனால் அதற்கான காரணங்களும் பயன்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறாக இருந்திருக்கின்றன. அதன்பின் வாழ்ந்த மக்களால் தலைமறைப்பு ஆடை மரபுவழியாக கடத்தப்பட்டு யூத மற்றும் கத்தோலிக்க மதம் உள்ளிட்ட பல மதங்களில் பெண்களுக்கான ஆடைகளில் அது குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது.
இன்று உலக மதங்களில் ஒன்றாக இஸ்லாம் வளர்ந்து இருக்கிறது. இது மத்திய கிழக்கு வழியாக சஹாரா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் அரபிக் கடலைச் சுற்றியுள்ள பல்வேறு சமூகங்களுக்கு பரவியது. பல உள்ளூர் பழக்கங்களை இணைத்து அவற்றை மத வழக்கங்களாக மாற்றியது.
முஸ்லீம்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் பிரதானமானது, பெண்கள் புர்கா அணிவதை அவர்கள் விருப்பம் சார்ந்ததாக இல்லாமல் கட்டாயத்தின் பெயரில் வற்புறத்துகிறார்கள் என்பதே. ஒரு பக்கம் அப்படியென்றால், மற்றொரு பக்கம் முஸ்லீம்கள் அதிகமாக குடிபெயரும் மேற்கத்திய நாடுகளில் இதை அவர்கள் விரும்பி அணிந்தாலும் அதனை தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் தடை செய்வதும் நடக்கிறது.
ஆடையின் வகைகள் :
ஹிஜாப் என்பது தலைக்கவசங்களுக்குள் ஒரு வகை. இது மேற்கத்திய நாடுகளில் அணியும் மிகவும் பிரபலமான முக்காடு. இந்த முக்காடு தலை மற்றும் கழுத்தை மறைக்கும் ஒன்று அல்லது இரண்டு தாவணிகளைக் கொண்டுள்ளது. மேற்கிலிருந்த இந்த பாரம்பரிய முக்காடு வழக்கம், பிறகு அரபு நாடுகளிலும் அதற்கு அப்பாலும் உள்ள பெரும்பான்மை முஸ்லீம் பெண்களால் பின்பற்றப்பட்டது.
நிகாப், உடல் முழுவதும் மறைக்கப்பட்டு, முகத்தில் கண்கள் மட்டும் தெரியும் உடை. நிகாப்பின் இரண்டு முக்கிய பாணிகள் அரை-நிகாப் இது தலையை முழுமையாக மூடி முகத்திரை கண்கள் மற்றும் நெற்றியின் ஒரு பகுதி தெரியும். இந்த ஆடையை வளைகுடா நாடுகளில் பயண்படுத்துகின்றனர். ஆனால், இது ஐரோப்பாவிற்குள் நிறைய விவாதங்களை உருவாக்கியது. சமீபத்தில் பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகள் இதற்கு தடை விதித்தது. இது மக்களிடம் எளிதாக பேச இயலாத சூழ்நிலையை ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்துகிறது.
சடோர், என்பது உடல் முழுவதும் போர்த்தும் நீளமான சால்வை. கழுத்து மற்றும் கைகள் தைக்கப்பட்டியிருக்கும். இது தலை மற்றும் உடலை மறைக்கிறது. ஆனால், முகம் முழுமையாக தெரியும். சடோர் பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரானில் இதை பிரபலமாக பயன்படுத்துகின்றனர்.
பர்தா உடல் முழுவதும் போடப்படும் முக்காடு. அணிந்தவரின் முகமும் உடல் முழுவதும் மூடப்பட்டு கண்களுக்கு மட்டும் ஓரு மெல்லிய திரை மூலம் பார்க்க முடியும். இது பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் அணியப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் (1996-2001), அதன் பயன்பாடு கட்டாய சட்டமாக்கப்பட்டது. தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் இதை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
இந்த முக்காடு அணியும் வழக்கம் எங்கிருந்து எதற்காக உருவாகியது? இதை அனைத்து முஸ்லீம் பெண்களும் அணிவது கட்டாயமா? இதை பல்வேறு இடங்களில் பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களில் பயன்படுத்துகிறார்ளே? அப்படியானால் அதன் தன்மைதான் என்ன? இதில், மேற்கத்திய நாடுகள் இதற்கு தடை கோரியிருப்பதை எப்படி பார்க்க வேண்டும்.
சமூகவியலாளர் கெய்ட்லின் கிலியன் விளக்குகிறார், “கடந்த காலத்தைப்போலவே, முக்காடு பாரம்பரியம் தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
முஸ்லீம் மத கோட்டுபாடுகள் பெண்கள் முக்காடு பற்றிய கேள்விக்கு முற்றிலும் தெளிவான பதில் இல்லை. தீர்க்கதரிசி முகமதுவின் எழுத்துகளில் அதற்கான தெளிவான சான்று ஏதுமில்லை. ஆனால் அவரின் கூற்றில், அவரின் மனைவி முக்காடு போன்று ஓரு ஆடையை பயண்படுத்திருக்கலாம் என்பதாக குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த கோட்டுபாடுகள் நபியின் மனைவிகளுக்கு மட்டுமா அல்லது அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் பொருந்துமா, இல்லை அனைத்து தரப்பினருக்குமானதா என்பது இன்றும் விவாதத்திற்குரியதே.
பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறிப்பிடப்பட்டியிருத்தாலும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதி என உடல் முழுவதும் மறைத்து முகம் மற்றும் கைகளைத் தவிர” முடப்பட்டியிருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடவில்லை. முக்காடு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் வேறுபடுவதற்கான ஒரு ஆடையாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆண், பெண் பாலியல் இச்சையை கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறையாகவும் இந்த ஆடை கையாளப்படுகிறது. பெண்களை போன்றே அரபு நாடுகளில் ஆண்களும் இடுப்புக்கு கீழே ஒரு பெரிய ஆடையை அணிக்கின்றனர்.
முக்காடு அணியும் வழக்கம் இஸ்லாத்திற்கு முந்தியது என்று பார்த்தோம். இது இன்ன பிற மதங்களை சேர்ந்த பெண்களால் நடைமுறையில் இருந்தது. இது பெரும்பாலும் வர்க்க நிலையுடன் இணைக்கப்பட்டது: பணக்கார பெண்கள் தங்கள் உடலை முழுமையாக மறைப்பது, ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. அதேசமயம் வேலை செய்யக்கூடிய ஏழைப் பெண்கள் இந்த முக்காட்டை அணியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய ஆடைகளின் பாணிகளில் உள்ளூர் மரபுகள் மற்றும் இஸ்லாமிய தேவைகளை சார்ந்த வெவ்வேறு விளக்கங்களை பிரதிபலிக்கின்றன.
உதாரணத்திற்கு, பிரான்சில் உள்ள முஸ்லீம் பெண்கள், வெவ்வேறு விதமான தலை கவசங்கள் மற்றும் ஆடைகளை அணிகின்றனர். பலர் முஸ்லீம்கள் என வேறுபடுத்திக் காட்டும் வகையில் எதையும் அணிவதில்லை. பல புலம்பெயர்ந்த முஸ்லீம் பெண்கள் தங்கள் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளவதுமில்லை. இன்னும் சிலர் பல வண்ணங்களிலான முக்காடுகளை பயன்படுத்தி முகத்தை மட்டும் மறைத்து கொள்கின்றனர். இன்ன பிற பெண்கள் அவர்களின் பாரம்பரிய உடையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மேற்கத்திய நாடுகளில் பெண்கள் முகத்தை மட்டும் மறைக்கும் முக்காடுகளுக்கு எதிரான கருத்துகளும் அந்நாடுகளில் நிலவுகிறது.
1970-களில் பிரான்சுக்கு குடியேறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே முஸ்லீம் பெண்களின் உடை தொடர்பான போராட்டம் தொடங்கியது. பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் முஸ்லீம் பெண்களின் முக்காடிற்கு தடைவிதித்து, ஐரோப்பிய பெண்களைப் பர்தாவிலிருத்து விலக்கியது.
இதற்கு எதிராக, அல்ஜீரியா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், முக்காடு தேசிய சின்னமாகவும், அது அவர்களின் அடையாளமாகவும் இடம் பிடித்தது. இதன்மூலம் இசுலாமிய நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு தனது எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.
திரைக்கு பின்னாலிருக்கும் உண்மை
“பர்தா இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல, ஆனால் முஸ்லீம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம்; இதில் உள்ள வேறுபாடு மிக முக்கியம்” என டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்லூரியின் போராசியர் ஃபரிதா கானம் கூறுகிறார்.
“பொதுவாக பர்தா, புர்கா போன்ற ஆடைகள் இஸ்லாத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பர்தா, புர்கா போன்ற முஸ்லீம்களின் ஆடை, எந்தவிதத்திலும் இஸ்லாத்திலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல. இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் ஒரு மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது. புர்கா, பர்தா முஸ்லீம் நடைமுறை என்றால் ஒத்துக் கொள்ளலாம்; ஆனால், அது இஸ்லாத்தின் வழக்கம் என்றால், அது தவறு” என்கிறார் ஃபர்தா கானம். இஸ்லாம் குரானிலிருந்து வந்தது. மாறாக, முஸ்லீம் ஓரு குறிப்பட்ட கலச்சாரம் மற்றும் சமூக நிகழ்வால் முன்னெடுக்கப்பட்டது.
மொழியியல் வரலாற்றின்படி, பர்தா என்ற சொல் அரபில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே இருந்திருக்கிறது. அதாவது, ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அப்போது புர்கா என்ற சொல்லுக்கு சிறிய துணி என்று அர்த்தம். அது குளிர்காலத்தில் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஓர் ஆடை. இதையே அரேபிய அகராதில் லிசான்-அல்-அரபில் இந்த இருவேறு சொல்லாடலுடன் விவரிக்கிறது.
ஒன்று பர்தா குளிர்காலத்தில் விலங்குகளை காப்பாற்றவதற்கும், மற்றொன்று சடோர் என்ற சால்வையை கிராமத்து பெண்களும் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், இந்த சொற்கள் குரானில் இடம் பெறவில்லை.
வரலாற்றை சற்று பின் நகர்த்தினால் இஸ்லாம் பெர்சியாவில் கால் ஊன்றியதும் புர்கா என்ற சொல் வந்திருக்கலாம். அதன்பின் நிறைய மத சடங்களும் சொல்லாடல்களும் பெர்சியாவிலிருந்து வந்தது. எ-டு: “காட்டாக குதா” என்று சொல்லுக்கு அல்லா என்றும், நமாஸ்க்கு சாலத் என்ற வார்த்தையாக உருமாறியது. அதைப்போன்றே ஈரானின் கலாச்சார அழுத்தத்தின் காரணமாக புர்காவும் முஸ்லீம்களால் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது ஹிஜாப்க்கு இணையாக புர்காவை முஸ்லீம்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், குரானில் ஹிஜாப் என்றால் திரைச்சீலை என்றுதான் அர்த்தம். ஆனால், முஸ்லீம்கள் அச்சொல்லை பயன்படுத்தும் விதத்தில் குரானில் இல்லை.” என்கிறார் கானம்.
படிக்க :
பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
மாதவிடாயும்  சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா
இதைப்போன்றே புர்காவிற்கு இருவேறு பெயர்கள் உண்டு : ஜிலாப் மற்றும் கிமர். இதற்கு பெண்கள் உடல் முழுதும் அணியும் துப்பட்டா என்று அர்த்தம். ஆனால், முகத்தை மறைக்கும் ஆடையல்ல. இஸ்லாம் கோட்பாடுகளில் ஆண், பெண் இருவரும் இணைந்து சமூக மேம்படுத்தலை எடுத்து செல்ல வேண்டும் என்பதே. குறிப்பாக நபிகளின் காலத்தில் பெண்கள் விவாசாயம், தோட்டக்கலை மற்றும் சமூக பணியில் பணியாற்றி இருக்கின்றனர். அதே தருணத்தில் அவர்கள் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாக கருதப்பட்டியிருக்கின்றனர்.
இஸ்லாம் ஆண், பெண் இருவரையும் சமமாக நடத்துங்கள் என்கிறது. குரானில் “You are members one of another” (3:195). இதன் அர்த்தம் இயற்கை படைப்பு ஆண், பெண் என இரு வேறு பாலின பாகுபாடு இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவர் உதவுவதே நியதி என்கிறது. இப்படி பல்வேறு ஆய்வுகளும் இஸ்லாமில் ஆண் பெண் உரிமை குறித்தும் ஆடைகள் குறித்தும் நடந்து கொண்டு இருக்கின்றன.
எது எப்படியிருப்பினும் நாகரிக வளர்ச்சி நமது கையில் ஆடைகளைத் தந்துள்ளது. சமூக வளர்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் பல கோட்பாடுகளை பிரசவிக்கிறது.  கோட்பாடுகள் மதத்தையும், அவற்றின் பெயரில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் பிரசவிக்கின்றன. மத, இனம் என பல்வேறு அடையாளங்களையும் கட்டுப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆடை மற்றொரு தளத்திற்குச் சென்றது.
அது மதம், இனம், சாதி, பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு இட்டுச் செல்கிறது. சக மனித இனத்தை ஒடுக்க நினைக்கும் எதுவும் முன்னோக்கிய சமூகத்தை உருவாக்காது என்பது மட்டும்  உறுதியானது. அந்த வகையில், மனித சமூகத்தை பாகுபடுத்தும் கருத்தியல்களை முறியடிப்பது நம் முன் உள்ள முக்கியக் கடமையாகும்.
சிந்துஜா
சமூக ஆர்வலர்

செய்தி ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

disclaimer

6 மறுமொழிகள்

 1. கம்யூனிஸ்ட் சீனா அரசு முண்டியடித்துக்கொண்டு முதல் ஆளாக தாலிபான் அரசை அங்கீகரித்துள்ளது.. முற்போக்கு, பாலியல் சமத்துவம், சமூகநீதி, மதவெறி, பகுத்தறிவு என்று வாய் கடவாய் வரை கிழியும் படி பேசும் கம்யூனிஸ்டுகள் இதற்கு என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதை அறிய ஆவல்.

 2. அருமையான கட்டுரை.
  “முஸ்லீம்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் பிரதானமானது, பெண்கள் புர்கா அணிவதை அவர்கள் விருப்பம் சார்ந்ததாக இல்லாமல் கட்டாயத்தின் பெயரில் வற்புறத்துகிறார்கள் என்பதே. ஒரு பக்கம் அப்படியென்றால், மற்றொரு பக்கம் முஸ்லீம்கள் அதிகமாக குடிபெயரும் மேற்கத்திய நாடுகளில் இதை அவர்கள் விரும்பி அணிந்தாலும் அதனை தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் தடை செய்வதும் நடக்கிறது.”

  நடுநிலையான கட்டுரை தரவேண்டும் என்ற உங்கள் நோக்கம் வெளிப்படுகிறது, ஆனால் ஹிஜாப் ஏன் அணியவேண்டும் என்ற வாதம் சரியாக எடுத்து வைக்கவில்லை. நான் பல இஸ்லாமிய அறிஞர்கள் YouTube வீடியோ பார்த்துள்ளேன், அவர்கள் குரானிலிருந்தும் ஹதிஸித்திலிருந்தும் சான்றுகள் செடுத்து வைத்துள்ளார்கள்.

 3. முதலில் கட்டுரையாளர் வரலாறை சரியாக படிக்கவேண்டும், இஸ்லாம் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் தோன்றியது அல்ல, முதல் மனிதன் ஆதம் அலை தொட்டு இஸ்லாம் உள்ளது.
  இஸ்லாத்தின் படி ஆணும் பெண்ணும் கண்ணியமாக உடை அணியவேண்டும், தன அவயங்களை மற்றவரிடம் காண்பிப்பது கூடாது, அடுத்த ஆண்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அரைகுறை ஆடை அணியலாம்,

  இஸ்லாமும் முஸ்லிம்களும் ஒன்றுதான், வேறு வேறு இல்லை. இஸ்லாத்தை பின்பற்றினால் தான் முஸ்லீம். கட்டுரையாளர் இரண்டும் வேறு வேறு என்று குழப்புகிறார்.

  ஹிஜாப், புர்கா போன்றவைகள் வார்த்தைகளே தவிர உடையின் பெயர்கள் அல்ல,. கண்ணியமாக அணியும் எல்லா உடைகளுக்கும் பெயர் ஹிஜாப் தான், புர்கா தான்.

  இஸ்லாம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் இஸ்லாமியனாக இருக்கவேண்டும் என்றால் இஸ்லாத்தை பின்பற்றவேண்டும் என்று குரான் தெளிவாக கூறுகிறது. இன்று முஸ்லிம்கள் செய்வதல்ல இஸ்லாம். இஸ்லாத்தை சரியாக பின்பற்றாதது முஸ்லிம்களின் தவறே. மாறாக இஸ்லாத்தின் தவறல்ல.

 4. முஸ்லீம்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் பிரதானமானது, பெண்கள் புர்கா அணிவதை அவர்கள் விருப்பம் சார்ந்ததாக இல்லாமல் கட்டாயத்தின் பெயரில் வற்புறத்துகிறார்கள் என்பதே.

  மாட்டுக்கறி சாப்பிடுபவன் தன்னை சைவம் என்று சொல்வது போல உள்ளது. கண்ணியமாக உடலை மறைக்கக்கூடிய வகையில் கட்டாயம் உடை அணியவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது, முடியாது என்றால் எப்படி அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியும்?

 5. //நிறைய மத சடங்களும் சொல்லாடல்களும் பெர்சியாவிலிருந்து வந்தது. எ-டு: “காட்டாக குதா” என்று சொல்லுக்கு அல்லா என்றும், நமாஸ்க்கு சாலத் என்ற வார்த்தையாக உருமாறியது.//

  மரியாதை மிகு எழுத்தாளர் அவர்கள் ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது அந்த மதத்தின் கலாச்சரங்களைப் பற்றியோ எழுதுவதற்கு முன் அதை பற்றி சரியான தரவுகளுடன் அல்லது வரலாறுகளை சரியாக படித்துவிட்டு எழுத முன்வரவேண்டும்.

  எங்கையோ கிடந்த குப்பைகளை வாரிக்கொண்டுவந்து தூசி தட்டி ஒரு மதத்தின் பெயரால் இங்கு கொட்டுவது அழகல்ல.

  அதற்கு சிரிய உதாரணம் நான் மேலே சுட்டிக்காட்டியுள்ள வரிகள். குதா என்ற சொல் உருது மற்றும் பார்சி மொழி இந்த உருது மற்றும் பார்சிக்கு முந்தைய மொழி, அரபி மொழி அதே போன்று நமாஸ் என்ற சொல்லும் உருது மொழிச் சொல்லாகும் சலாத் என்ற சொல் அரபி மொழிச் சொல்.

  இதிலிருந்தே உங்களின் புலமை எப்படி என்று புலப்படுகிறது.

  இஸ்லாமியர்களாகிய நாங்கள் ஒரு கொள்கையை பற்றி விமர்சிக்கும் போது அதன் முழு வரலாறுகளையும் படித்தபின்பே விமர்சிக்க முன் வருகிறோம். ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்க வருபர்கள் யாரும் அதன் உண்மைத்தன்மையை ஆதாரப்பூர்வமான வரலாறுகளை படிக்காமல் யூகத்தின் அடிப்படையில் எழுதுகிறார்கள்? விமர்சிக்கிறார்கள்?

Leave a Reply to raak பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க