ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்

ஹிஜாப் பிரச்சினையில் காவி பாசிச கும்பல் துளியும் நேர்மையற்ற அரசியலை செய்து வருகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஹிஜாப் தீர்ப்பின் முழுபின்னணியை இக்காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

யோத்தி – சபரி மலை தீர்ப்புகளை நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கிய நீதிமன்றம், ஹிஜாப் பிரச்சினையை மட்டும் சட்ட வரம்பிற்குள் வைத்து தீர்ப்பு வழக்குகிறது. மேலும் ஹிஜாப் பிரச்சினையில் காவி பாசிச கும்பல் துளியும் நேர்மையற்ற ஆதாரம் இல்லாத வகையில் காவி அரசியலை செய்து வருகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால் நீதிமன்றம் அதைகுறித்து பேசாமல் மௌனம் சாதிக்கிறது. தீர்ப்பை அரசியல் சாசனப்படிதானே இருக்கிறது எனறாலும் கூட இது சிறுபான்மையினரின் நம்பிக்கையின் மீதான தாக்ககுதலாக அமைகிறது. இப்பிரச்சினையை நாட்டில் உள்ள அனைத்து முற்போக்காளர்களும் இசுலாமிய அமைப்பிகளும் கண்டித்து பேசி வருகின்றனர். ஆனால் ‘பெரும்பான்மை’ இந்து சமூகம் இப்பிரச்சினையை பற்றி பேசுவதில்லை. ஏன் பேசுவதில்லை. காவி பாசிச கும்பல் இந்து சமூகத்தின் பெயரில்தான் இந்த ஹிஜாப் பிரச்சினையை செய்து வருகிறது. எனவே பெரும்பான்மை மக்கள் இந்த ஜனநாயக விரோத தீர்ப்பை பற்றி பேசவேண்டும் என்ற வகையில் ஹிஜாப் தீர்ப்பின் முழுபின்னணியை இக்காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க