PP Letter head

முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் : தமிழகத்தின் மீது இன்னொரு தாக்குதல் !

27.10.2021

பத்திரிகைச் செய்தி

மிழக – கேரள மாநில எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் உயரம் 155 அடி. 15.5 டி.எம்.சி., தண்ணீரை இதில் சேமித்து வைக்க முடியும். முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலதத்தில் இருந்தாலும், அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை, மிகவும் பழமையான அணை என்பதால், 152 அடி வரை நீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும் என்றும் இடுக்கி உட்பட 5 மாவட்டங்கள் முழுவதும் அழிந்து விடும் என்றும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை விட 4 மடங்கு பெரியதாக உள்ள இடுக்கி அணையால் எவ்வித பாதிப்பும் வராது என்று கூறுகிறது.

கேரள மாநிலத்தில் நீடித்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாகி விட்டன. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்ற பிரச்சனையை துவக்கி வைத்ததே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தான்.

மலையாள நடிகர் பிருத்விராஜ், எதுவாக இருந்தாலும் 125 ஆண்டு கால பழமையான ஒரு அணையை வைத்திருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்புகிறார். இவரைப் போலவே முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என, கேரள திரை உலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத் தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தனியார் எஸ்டேட்டுகளும் நட்சத்திர சொகுசு விடுதிகளும் இருப்பதால்தான் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று அந்த முதலாளிகளுக்கு ஆதரவாகவே கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான பிரச்சாரம் தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அமைத்த குழு 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்றும் அணை வலுவாகவே உள்ளது என்றும் பலமுறை தெரிவித்திருக்கிறது. இருந்தும் கேரளாவில் உள்ள ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு இந்தப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பொய்ப் பிரச்சாரத்தின் நோக்கமே மக்கள், விலங்குகள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையான முல்லைப்பெரியாறு அணையை இடிப்பதுதான்.
ஏற்கெனவே பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் நமது உரிமையை இழந்து நிற்கிறோம். மேக்கே தாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறுகிறது. மக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் முல்லைப் பெரியாறு அணை வலுவற்றது என்று கூறுகிறது கேரள அரசு.

தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராட வேண்டிய இந்தச் சூழலில் சாதியவாத, மதவாத, இனவாத பாசிச சக்திகள் மக்களை கூறு போட்டு வருகின்றன. இதற்கெதிராக முந்தைய காலங்களில் முல்லைப் பெரியாறு அணைக்காக தமிழகம் திரண்டெழுந்து போராடியது போன்று மீண்டும் ஒரு போராட்டத்தை கட்டி அமைப்பதுதான் ஒரே வழி.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க