கடந்த அக்டோபர் 22-ம் தேதி மதுரையில் ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அக் கருத்தரங்கில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் குருசாமி வரவேற்புரையாற்றினார். “சமூக பிரச்சனைகளில் இருந்து தான் மட்டும் எப்படி தப்பிப்பது என மக்களில் ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது அனைத்து பிரச்சனைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளையே காரணம் என்பதை இந்த ஆவணப்படம் சொல்கிறது” என்று தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
அடுத்தாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் கூட்டத்திற்குத் தலைமையேற்று, தலைமையுரையாற்றினர். தனது உரையில், “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற அடிப்படையில் ம.க.இ.க தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. நாம் பல்வேறு கலை வடிவங்களில் மக்களுக்கான அரசியலை எடுத்துச் செல்கிறோம் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.
ம.க.இ.க. கடந்துவந்த பாதையில், பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, தமிழ் மக்கள் இசை விழா, விடுதலைப் போரின் வீர மரபு எனும் மாபெரும் நிகழ்ச்சி, தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடும் போராட்டம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் போராட்டம் என பல முன்னனி போராட்டங்களை ம.க.இ.க. நடத்தியுள்ளது.
படிக்க :
♦ ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” || ம.க.இ.க.
♦ விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?