மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!

மத்திய – மாநில பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்தியா: மோடி மீதான கேள்வி என்ற பிபிசியின் ஆவணப்படத்தை பட்டிதொட்டியெங்கும் பரப்பவேண்டியது அவசியம்.

0

“இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற பிபிசி ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக் கழக வளாகத்தில் திரையிட உதவியதாகக் கூறி, லோகேஷ் சோவ் மற்றும் சட்ட மாணவர் ஒருவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஓராண்டு தடை விதித்துள்ளது.

“டெல்லி பல்கலைக் கழகத்தின் பதிவாளர் மானுடவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற லோகேஷ் மற்றும் சட்ட மாணவர் ரவீந்தர் ஆகியோர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை. அவர்கள் இக்குறிப்பாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது துறைத் தேர்வு அல்லது தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று மார்ச் 10 ஆம் தேதி நிர்வாகம் வெளியிட்ட குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட குறிப்பாணையில், டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் பிபிசி-யின் இந்தியா: மோடி மீதான் கேள்வி என்ற ஆவணப்படம் பல்கலையில் தடை செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தைக் காண்பிப்பதில் பங்கேற்பது லோகேஷ் சோவ்-கின் ஒழுக்கமின்மை செயலாகும்” என்று குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்க : மோடியின் முகத்திரையை கிழிக்கும் பிபிசி ஆவணப்படம் | தோழர் அமிர்தா வீடியோ

2023 ஜனவரி 27 அன்று பிபிசி ஆவணப்படம் பல்கலையில் திரையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவை டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்துள்ளது.

விசாரணைக்குழுவின் பரிந்துரையிகளின் அடைப்படையில் ஒருங்குமுறை ஆணையம் லோகேஎஷ் சோவ்-ன் ஒழுக்கமின்மை செயலுக்காக அவரை ஒரு ஆண்டிற்கு பல்கலைக்கழகம்-கல்லூரி-துறைத் தேர்வுகளில் இருந்து தடைசெய்யும் தண்டனையை விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் மாணவர் ரவீந்தருக்கும் இதேபோல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிபிசி ஆவணப்படத்தை தடை செய்வதை பற்றி நீதிமன்றங்கள் ஏதும் தீர்ப்பு வழங்கவில்லை. இருப்பினும் தான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளேன். ஆனால் தடை ஏதும் இல்லை என்பதால்நான் தவறு செய்யவில்லை என்று சோவ் தனது ட்விட்டர் கணக்கின் மூலம் கூறினார்.

NSUI-ன் தேசிய செயலாளரான சோவ், திரையிடல் சம்பவம் நடந்த அன்று அவர் கலைஅரங்கில் இல்லை என்றும் அங்கு ஆவணப்படம் தடை செய்யப்படவில்லை என்றும் கூறினார். “ஜனநாயகத்தில், மாணவர்கள் தேர்வுக்கு வருவதைக் கட்டுப்படுத்துவது -சட்டவிரோதமானது- கண்டிக்கத்தக்க செயல்” என்று NSUI ட்வீட் செய்துள்ளது.

படிக்க : “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!

கடந்த 2023 ஜனவரியில் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்ட பிறகு, மோடி அரசு அந்த ஆவணப்படத்தை தடைசெய்ய உத்தரவிட்டது. ஆனால், பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மோடியின் முகத்திரையை கிழிக்கும் இந்த ஆவணப்படத்தை திரையிட்டு பரப்பினர். பாஜகவின் செய்தித் தொடர்பாளர், “பிபிசி உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு” என்று கூறியிருந்தார். மேலும் பாஜகவினர் பிபிசி பிரிட்டீஸ் என்பதால் இப்படி மோடியை சித்தரிக்கிறார்கள் என்று மாபெரும் ஊருட்டுகளை அரங்கேற்றினர். கடந்த பிப்ரவரி மாதம், பிபிசியின் டெல்லி அலுவலகம் இந்திய வரி அதிகாரிகளால் வருமான வரி சோதனைக்குட்படுத்தப்பட்டு அடக்குமுறை ஏவப்பட்டது.

மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற 2002 குஜராத் கலவரம் தொடர்பான உண்மைகள் அடங்கிய பிபிசி ஆவணப்படத்தை கண்டு காவிக்கும்பல் அச்சமடைந்து வெற்றுக்கூச்சல் போட்டுவருகிறது.

மத்திய – மாநில பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்தியா: மோடி மீதான கேள்வி என்ற பிபிசியின் ஆவணப்படத்தை பட்டிதொட்டியெங்கும் பரப்பவேண்டியது அவசியம்.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க