மோடியின் முகத்திரையை கிழிக்கும் பிபிசி ஆவணப்படம் | தோழர் அமிர்தா வீடியோ

மோடி அரசு ஏன் இந்த ஆவணப்படத்தை தடை செய்திருக்கிறது? 2002ல் நடந்த குஜராத் கலவரத்தைப் பற்றி எடுக்கப்பட்ட படம் ஏன் இப்பொழுது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது? ஏனென்றால் அதில் கூறப்பட்டுள்ள அனைத்துமே உண்மையின் சாட்சியமாக அமைந்திருக்கிறது. இந்த ஆவணப்படம் குறித்து ஜே.என்.யூ மாணவர்கள், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், கேரளா தமிழ்நாட்டு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது உண்மையின் சாட்சியமாக இருப்பதால் ஜனநாயக சக்திகள் இதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். ஜே.என்.யூ மாணவர்கள் இந்த படத்தை விடுதியில் பார்க்க முயற்சித்த போது அங்கிருந்த ஜனநாயக சக்திகளான மாணவர்கள் மீது ஏபிவிபி மாணவர்கள் கல் எரிந்துள்ளனர்.

மோடி கும்பலை அம்பலப்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த பிபிசி ஆவணப்படத்தை நாம் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதே போல, இருக்கக்கூடிய தொழிற்சாலைகளிலும் ஒவ்வொரு வீதிகளிலும் கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முகத்திரையை கிழிப்பதற்கு இந்த ஆவணப்படத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

  1. காணொலி கேட்டதில் சிந்தனையில் உதித்த கருத்துக்கள்.
    தீண்டாமை, சுரண்டல்- சொத்துக்குவிப்பு, வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், பெண்களின் பாதுகாப்பற்ற சூழல், கட்டற்ற போதை, ஆபாசம், சீரழிவு இவற்றை பாதுகாக்கும் இந்த அரசு கட்டமைப்பு மக்களுக்கானதல்ல… காந்தி படுகொலை தொடங்கி குஜராத் இனப்படுகொலை வரைக்கும் இந்த அரசிடம் போராடாமல் நீதி கிடைக்காது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க