உழைக்கும் மக்களது தற்கொலையும்! ; கார்ப்பரேட்டுகளது வீக்கமும்!
 • 2020-ல் 1.53 இலட்சம் இந்தியர்கள் வறுமை – வேலையின்மையால் தற்கொலை!
 • இந்த தற்கொலைகளில் ஏறக்குறைய பாதி எண்ணிக்கை தினக்கூலி மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள்!
 • உலக நாடுகள் பட்டினிப் பட்டியலில் 101-வது இடத்தில் இந்தியா!
 • விவசாயிகள் தற்கொலையும் குறைந்தபாடில்லை. மராட்டியத்தில் மட்டும் 4006 விவசாயிகள் தற்கொலை !
 • 100 நாள் வேலைத்திட்டத்துக்கு பயன்படுத்த 21 மாநிலங்களிடம் பணம் இல்லை. ஒதுக்கப்பட்ட நிதியைத் தாண்டி செலவு செயதுள்ளது. இதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
 • கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்கிற வாய்ச்சவடால் பொய்த்துப் போனது
 • கொரோனா காலத்தில் ஒட்டுமொத்தமாக வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 2 கோடிகள். அதே நேரத்தில் அதில் பாதிப்பேருக்குத்தான் மீண்டும் வேலை கிடைத்திருக்கிறது.
 • வேலையை தக்க வைத்துக் கொண்டவர்களில் 97% பேர் வருவாய் குறைந்திருக்கிறது. மற்றொருபுறத்தில் செலவுகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
நாணயத்தின் இரண்டாவது பக்கம்….
 • பெட்ரோல் விலை உயர்வு மூலமாக கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு சம்பாதித்த பணம் ரூ.23 இலட்சம் கோடிகள்…!
 • ஜி.எஸ்.டி மூலமாக ஒன்றிய அரசு மாதந்தோறும் சராசரியாக திரட்டியது ரூபாய் ஒரு இலட்சம் கோடிகள்!
 • பொதுத்துறை பங்கு விற்பனை மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.3,90,052 கோடிகள்! நடப்பு நிதியாண்டு இலக்கு ரூ.1.75 இலட்சம் கோடிகள்!
 • 6 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட (கார்ப்பரேட்) வாராக்கடன் ரூ.6,83,388 கோடிகள்! ஆனால், வருவாய் பற்றக்குறை என்கிறது மோடி அரசு!
 • பில்லியன் டாலர்கள் சொத்துடைய பணக்காரர் அடங்கிய நாடுகளது பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்! (பட்டினிப் பட்டியலில் 101-வது இடம் என்பதை நினைவில் கொள்க.)
 • ராகேஷ் & ரேகா ஜூன்ஜூன்வாலா & கோ என்கிற பங்குச்சந்தை புரோக்கர் நிறுவனம் அக்டோபர் 7 அன்று 10 நிமிடங்களில் சம்பாதித்த பணம் ரூ.850 கோடிகள்!
 • ஒரு un-skilled தொழிலாளி தன்னுடைய வாழ்நாளில் பத்தாயிரம் மணிநேரம் உழைத்தால்தான் அம்பானியின் ஒரு மணிநேர வருமானத்தை ஈட்ட முடியும். அந்த அளவுக்கு அம்பானியின் வருமானம் பெருகிக் கிடக்கிறது!
 • அதானியின் வருமானம் ஒரே ஆண்டில் 261% உயர்ந்திருக்கிறது. அவர்களது ஒரு நாள் வருமானம் ரூ.1000 கோடிகள்!
 • அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.7.2 இலட்சம் கோடிகள். அதானியின் சொத்து மதிப்பு ரூ.5.1 இலட்சம் கோடிகள்… டாடா, பிர்லா, ஷிவ் நாடார் வகையறாக்கள் அடுத்தடுத்து வருகின்றனர்!
 • வறுமை, வேலையின்மை, பட்டினி, தற்கொலைகள் பெரும்பான்மை மக்களது துயரம் ஒருபுறம்! வரம்பற்ற இலாபத்தில் கொழிக்கும் சிறுபான்மை முதலாளிகள் மறுபுறம்!
அரசு என்பது யாருடைய சேவகன் என்று இப்போது புரிகிறதா?
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
தொடர்புக்கு : 8056386294
நன்றி : புதிய தொழிலாளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க