மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !
கடந்த 10 ஆண்டுகள் மராமத்து, வடிகால் பணி செய்யாமல் தமிழ்நாட்டை கொள்ளையடித்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட கிரிமினல் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் !
மூழ்கியது சென்னை : வடிகால் பணிக்கு ஒதுக்கிய ரூ.5000 கோடி எங்கே?
சென்னையில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியான மழை இருந்துவரும் சூழலில், அடுத்து வரவிருக்கும் நாட்களில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் பொழியவிருக்கும் கடும் மழையைக் கையாளும் நிலையில் சென்னையும் இல்லை, சென்னை மக்களும் இல்லை.
ஏரிகள் முறையாகத் தூர்வாரப்படுவது, நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுதல் மற்றும் வடிகால் வாரிய பணி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை முந்தைய அதிமுக அரசு செய்யாமல் கைவிட்டதுதான் இதற்குக் காரணம்.
கடந்த 10 ஆண்டுகள் மராமத்து, வடிகால் பணி செய்யாமல் தமிழ்நாட்டை கொள்ளையடித்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட கிரிமினல் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகைக்கான பணத்தை அதிலிருந்து வழங்கவேண்டும்.
அடிமை அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட விழுப்புரம் தளவானூர் தடுப்பணை இன்று இடிந்துவிட்டது. இதுதான் இந்த கொல்லைக் கும்பல் பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய இலட்சணம். கடந்த ஆட்சிக் காலத்தில் மராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படும் ரூ.5000 கோடிக்கு கணக்கு எங்கே ? முறையாக பராமரிப்புப் பணியை மேற்கொள்ளாமல் முறைகேடுகளை நடத்திய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் முதல் துறை சார்ந்த செயலர்கள் வரை அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது ஆற்றிய உரையின் காணொலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காணத் தவறாதீர்கள் ! பாருங்கள் ! பகிருங்கள் !
ஜெய்பீம் படத்தப் பத்தி ஒரு வார்த்தை கூட எழுத மனமில்லையா?