1. லிபியா பெருவெள்ளம்

டந்த செப்டம்பர் 10 அன்று வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் கிழக்கு பகுதியை மத்தியதரைக் கடலில் உருவான டேனியல் புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு பெங்காசி, சூசா, பைடா, அல்-மார்ஜ் மற்றும் டொ்ணா ஆகிய நகரங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் வாடி டெர்ணா (Wadi Derna) ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரண்டு அணைகள் உடைந்தன; 4 பாலங்கள் இடிந்தன. அணைகள் உடைந்ததால் டொ்ணா நகரம் சுனாமி போன்றதொரு வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது.

லிபியா பேரழிவு: இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் நேட்டோவுமே முதல் குற்றவாளிகள்!

2. ஆப்கான் நிலநடுக்கம்

மேற்கு ஆப்கானிஸ்தானில் அக்டோபர் 7, சனிக்கிழமையன்று ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை பொதுமக்கள் 2400 பேர் வரை மரணமடைந்துள்ளனர். மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஜிந்தஜான் என்ற பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஏற்பட்ட எட்டு நில அதிர்வுகளில் அங்கு 20 கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

2400-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட நிலநடுக்கப் பேரிடர்: நிரந்தரத் துயரில் ஆப்கன் மக்கள்

3. மொராக்கோ நிலநடுக்கம்

ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (செப்டம்பர் 8) அதிகாலை 3.14 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

உலகையே உலுக்கும் மொராக்கோ நிலநடுக்கம் | படக்கட்டுரை

4. துருக்கி நிலநடுக்கம்

டந்த பிப்ரவரி 6-ஆம் தேதியன்று துருக்கி – சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 46,000-ஐ நெருங்கியுள்ளது. துருக்கியின் தெற்குப் பகுதியிலும், சிரியாவின் வடக்குப் பகுதியிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின. தற்போது வரை துருக்கியில் 39,672 பேரும் சிரியாவில் 5,800 பேரும் பலியாகியுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் முடிவுறாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!

5. சீன பெருவெள்ளம்

டோக்சூரி சூறாவளி காரணமாக வடக்கு சீனாவின் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெய்ஜிங்கிலும், ஹெபெய், தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சியிலும் இடைவிடாமல் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. அந்நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 580.9 மி.மீ வரை மழை பெய்தது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏறக்குறைய 8,50,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

6. இமாச்சலப் பிரதேசம் கனமழை – நிலச்சரிவு

லைப்பிரதேச மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் அம்மாநிலம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. சிம்லாவில் கோயில் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் உட்பட மழை பாதிப்புகளால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவு பாதிப்புகளின் சேத மதிப்பு ரூ.10,000 கோடி என்றும், இது ‘மாநிலப் பேரிடர்’ ஆக அறிவிக்கப்படுகிறது என்றும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.

7. தமிழ்நாடு – தென் மாவட்டங்களில் கனமழை – வெள்ளம்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | திருநெல்வேலி

8. தமிழ்நாடு – சென்னை மிக்ஜாம் புயல்

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: மனிதம் செத்துவிட்டதா? தி.மு.க. மறைத்துவிட்டதா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க