னித நேயத்துக்கு எதிரான சாதியம், சாதி முறையின் தீண்டாமை கொடுங்கோன்மை செயற்கை நுண்ணறிவுக் காலகட்டமான நவீன டிஜிட்டல் யுகத்திலும் இந்தியா எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.  இந்திய சமூக அமைப்பில் வரலாற்றுக் களங்கமாக உள்ள சாதி சமூக அமைப்பை வேரறுத்து, சமத்துவ விடுதலை நோக்கி பயணிப்பதற்கான ஒரு சித்தாந்த உருவாக்கத்திற்கு இந்திய சமூகத்தின் இழிவாகத் திகழும் சாதிய கட்டுமானத்தைப் பற்றிய ஆய்வுகள் இங்கு அவசியமாக இருக்கின்றன. 
அத்தகையதொரு ஆய்வுக்கான முன்னெடுப்பாகவே “சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் ” எனும் நூலை எழுதியிருக்கிறார் தோழர் சங்கையா.
இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு (14.11.2021) அன்று மாலை 4:30 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி ஹால் அரங்கில் நடைபெறவுள்ளது.
விசிக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் இரவிக்குமார், நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுவார்.  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மேனாள் இலக்கணத்துறைத் தலைவர் முனைவர் அ.சீனிவாசன் முதல் நூலை பெற்றுக் கொள்ளவிருக்கிறார். இந்த நிகழ்வை வாசிப்போர் களம் நடத்துகிறது.
படிக்க :
நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்
நூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. சங்கையா | காமராஜ்
நூல் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள்
ஆசிரியர் : தோழர் மு. சங்கையா
பதிப்பகம் : சிந்தன் புக்ஸ் 
பக்கம் : 288
விலை : ரூ. 300
கிடைக்குமிடம் : 327 /1 திவான் சாகிப் தோட்டம்,
டிடிகே சாலை, ராயப்பேட்டை,
சென்னை 14.
தொடர்புக்கு : 9445123164
தகவல் : வாசிப்போர் களம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க