ந்து ராஷ்டிரத்தை உருவாக்க “போரிடுவோம், சாவோம் மற்றும் கொல்வோம்” என்று பள்ளி சிறுவர்கள் உறுதிமொழி எடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஓர் தனியார் பள்ளியில் டிசம்பர் 28-ம் தேதியன்று எடுக்கப்பட்ட ஓர் காணொளியில், மெருன் கால்சட்டை மற்றும் வெள்ளைச் சட்டை மற்றும் சாதாரண உடையில் உள்ள சிலர் உட்பட்ட பள்ளிச் சீருடையில் சிலர் என 24 சிறுவர், சிறுமிகளுக்கு ஒருவர் உறுதி மொழியை எழுப்புகிறார். முன்பக்கத்தில் சில சின்னஞ்சிறு குழந்தைகள் நிற்கிறார்கள்.
குழந்தைகள் தங்கள் வலது கையை முன்னோக்கி நீட்டி இந்தி மொழியில் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறார்கள். “இந்த நாட்டை இந்து ராஷ்டிரமாக்குவதற்கும், எந்த விலை கொடுத்தாலும் அதை முன்னேற்றுவதற்கும் எங்கள் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை போராடவும், சாகவும், தேவைப்பட்டால் கொல்லவும், எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருப்போம் என்று உறுதிமொழி கொடுக்கிறோம். ஒரு கணம் கூட பின்வாங்க மாட்டோம். எங்கள் குருதேவ், எங்கள் குல் தேவதா (குடும்பக் கடவுள்), எங்கள் கிராம தேவதா (கிராமக் கடவுள்) எங்கள் முன்னோர்கள் மற்றும் பாரத மாதா எங்களுக்கு வலிமையையும் வெற்றியையும் தரட்டும்” என்று உறுதிமொழி எடுக்கின்றனர் மாணவர்கள்.
படிக்க :
சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்
பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !
உத்தரப் பிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்கஞ்சில் உள்ள விம்லா இன்டர் கல்லூரி எனும் தனியார் பள்ளியின் மேலாளர் ஜிதேந்திர சிங், சுதர்சன் எனும் செய்தி ஊடகத்தில் இருந்து தாங்கள் வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு குழுவினர் பள்ளியிலிருந்து சிறுவர்களை அருகிலுள்ள பூங்காவிற்கு ஓர் விவாதம் நடத்த அழைத்து செல்வதற்கு கேட்டதாகக் கூறினார்.
“டிசம்பர் 28 அன்று மதியம் பள்ளி மூடப்படும் நிலையில் பள்ளி வாயிலில் சிலர் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன். என்ன நடக்கிறது என்று கேட்டேன். அவர்கள், தாங்கள் சுதர்சன் நியூஸ் சேனலை சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள். மேலும் மாணவர்களை ராஷ்டிர தர்மம், தேசிய கடமை பற்றிய விவாதத்திற்காக அருகிலுள்ள சாச்சா நேரு பூங்காவில் கூட வேண்டும் என்று அழைத்தனர். தொலைக்காட்சி நிருபர்கள் என்று கூறியவர்கள் மக்களிடம் நேர்காணல் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். எனவே மாணவர்களிடன் விவாதிப்பதாக கூறியதை நான் தடுக்கவில்லை. பின்னர், எங்கள் பள்ளியைச் சேர்ந்த ஐந்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களும், ஐந்து பதினோராம் வகுப்பு மாணவர்களும் பூங்காவில் இருப்பதாக தகவல் வந்தது” என்கிறார் ஜிதேந்திர சிங்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பள்ளியின் முதல்வர் ஷிவ் நாரயண் லால் கூறியதாவது, “இதுபோன்ற வன்முறை சித்தாந்தத்தை ஆதரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. எங்கள் மாணவர்கள் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது எங்களுக்குத் தெரியும் ஆனால் செய்தி சேனலைச் சேர்ந்தவர்கள் மாணவர்களை இதுபோன்று உறுதிமொழி எடுக்க வைப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை புகார் கொடுக்காததால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது சோன்பத்ரா மாவட்ட போலீசு.
நாடு முழுவதும் இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவிக் கும்பல் பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்க முயற்சிக்கிறது. இதுபோன்ற காணொலிகளை திட்டமிட்டு எடுத்து மக்களிடையே கொத்தளிப்பான மனநிலையை உருவாக்கி உ.பி தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பாசிச பாஜக-வின் உடனடி நோக்கமாக உள்ளது.

சந்துரு
செய்தி ஆதாரம் : Telegraphindia, Hindutamil

1 மறுமொழி

  1. இது போல் இன்னும் பல சட்ட விரோதமான செயல்கள் செய்பவர்கள் தான் இந்துத்துவவாதிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க