சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா.

பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.

ந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாள் (ஜனவரி 3) இன்று.  சமீபகாலங்களில் தான் அவரை நம்மில் பலருக்கும் தெரியவந்திருக்கிறது. மிகச் சமீபகாலங்களில் தான் அவரை பலரும் நினைவுகூருகிறார்கள்.
‘சாதி நல்லது’ என்றும் ‘சாதி அப்படியே தொடரவேண்டும்’ என்றும் சொன்ன இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் சாவித்ரிபாயை இத்தனை ஆண்டுகளாக நம்மில் பலருக்கும் தெரியாமலேயே நம் முன்னோர்கள் வைத்திருந்திருக்கிறார்களே, ‘அது ஏன்?’ என்று யோசித்துப் பார்த்தால் அவர் மறைக்கப்பட்டதற்கான காரணம் நமக்குப் புலப்படும்.
சாவித்ரிபாய் ஒரு பெண் என்பதால் தான் அவரது வரலாற்றை மறைத்தார்களா? என்று கேட்டால், “ஆம் அதுவும் ஒரு காரணம் தான். ஆனால் அது மட்டுமே ஒரேமுக்கியமான காரணமல்ல”.
படிக்க :
பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !
நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி கற்கமுடியும் என்கிற பார்ப்பனிய ஒடுக்குமுறையினால், வேறு எந்த சாதியினரும் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பள்ளிகள் உருவாவதற்கு முன்னர் இருந்த குருக்குலங்களிலும் கூட பார்ப்பனர் அல்லாத எவருமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதிலும், பார்ப்பன ஆண்கள் மட்டுமே கல்வி கற்கிற உரிமையினைப் பெற்றிருந்தார்கள்.
இப்படியான சூழலில் தான் சாவித்ரிபாய் புலேவைத் திருமணம் செய்திருந்த ஜோதிராவ் புலே, தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுத்தார். அதுகுறித்து கேள்விப்பட்டதும், பார்ப்பனர்கள் தங்களது படைசூழ ஜோதிராவ் புலேவின் வீட்டுவாசலில் வந்து நின்று, ஜோதிராவ் புலேவின் அப்பாவிடம் சண்டையிட்டு, ஜோதிராவ் புலேவையும் அவரது மனைவியான சாவித்ரிபாய் புலேவையும் வீட்டைவிட்டே விரட்டவைத்தனர். அதாவது, சொந்த மகனையும் மருமகளையுமே வீட்டைவிட்டு துரத்தும் அளவிற்கு ஜோதிராவ் புலேவின் அப்பாவிற்கு பார்ப்பனர்கள் நெருக்கடி கொடுத்தனர். எதற்காக? பார்ப்பனர்கள் அல்லாத ஒரு பெண் படிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக.
இந்த ஒரு புள்ளி தான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையை மாற்றியது என்று சொல்லலாம். இதுதான் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அது கொடுத்த கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் தான் சாணியைக் கரைத்து ஊற்றியபோதிலும், சேரை வாரி இறைத்தபோதிலும், மேலும் பல கொடூரமான தாக்குகள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.

இந்த உண்மைகள் எவருக்குமே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் சாவித்ரிபாய் புலேவின் வரலாற்றை இத்தனை ஆண்டுகளாக சொல்லிவிடாமல் மறைத்தும், பள்ளிப்பாடத்திட்டத்தில் இடம்பெறாமல் தடுத்தும் வருகிறார்கள் சாதி மேலாதிக்கவாதிகள்…
இன்றைக்கு எல்லா சாதியைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் ஒன்றாக இணைந்து ஒரே பள்ளியில் படிக்கமுடிகிறதென்றால், அது தானாக வந்ததில்லை. பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக சாவித்ரிபாய் புலே போன்ற எண்ணற்ற மறைக்கப்பட்டவர்களின் சாகசகங்களாலும் கடும் போராட்ட வாழ்க்கையினாலும் தான் சாத்தியமாகி இருக்கிறது.
இதனை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்… சாவித்ரிபாய் புலேவைப் பற்றி எங்கு பேசினாலும், இதையும் இணைத்தே தான் பேசவேண்டும்…
சாவித்ரிபாய் புலே குறித்து பேசுகையில், நான்கு முக்கியமான கோரிக்கைகளை நாம் தொடர்ந்து வைக்க வேண்டும்.
1. சாவித்ரிபாய் புலே குறித்து 107 எப்பிசோடுகளைக் கொண்ட தொடர் நாடகத்தை இந்தியில் தூர்தர்சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதனை அப்படியே யூட்யூபிலும் கூட தூர்தர்சன் முழுவதுமாக வெளியிட்டிருக்கிறது. அந்தத் தொலைக்காட்சித் தொடரை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து, இந்தியாவின் அனைத்து மாநில தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்ப வேண்டும், யூட்யூபிலும் பதிவேற்ற வேண்டும்.
2. சாவித்ரிபாய் துவங்கிய பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளியின் நிலை இன்று படுமோசமாக இருக்கிறது. அதனை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து, முழுவதுமாக சரிசெய்து, சீரமைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும்.
3. இந்தியா முழுக்க உள்ள அனைத்து பாடத்திட்டங்களிலும் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்.
4. சாவித்ரிபாய் புலேவின் பிறந்தநாளை “சமத்துவ ஆசிரியர் தினம்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆண்டுதோறும் நாடுமுழுவதிலும் கொண்டாடப்பட வேண்டும்.
முகநூலில் : Chinthan E P
disclaimer

1 மறுமொழி

  1. சாவித்திரிபாயுக்கும், புலோ விற்கும் சாதிக்கு அப்பால் கல்வியியின்ஸ் அவசியம் எனும் ஞானம் எங்கிருந்து வந்தது எனக் கொஞ்சம் தேடிப்பார்க்கவும் வேண்டுமல்லவா. அப்படித்தேடிப்பார்த்தால் அது அரேபிய பாலைவனத்தில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி என்றே பதில் வரும்.

    இந்தியாவில் சாதி சமத்துவமும் பெண் விடுதலையும் மாத்திரமல்ல, ஐரோப்பியர் (பிரான்ஸ் மக்கள்) “சட்டத்தின் முன் யாவரும் சமம் எனும்” ஜனநாயக விழுமியத்தைக் கற்றுக்கொண்டதும் அரேபிய பாலைவனத்தில் ஏற்பட்ட புரட்சியின் பயனாகத்தான் அல்லவா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க