சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் வணிகப் பரிவர்த்தனை செய்யவோ அல்லது அவர்களுக்கு தங்கள் நிலத்தை விற்கவோ கூடாது என உறுதிமொழி எடுப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அந்த வீடியோ ஜனவரி 2-ம் தேதி குந்திகாலா கிராமத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வீடியோவில், “இன்று முதல் இந்துக்களாகிய நாங்கள் முஸ்லீம் கடைக்காரர்களிடம் எந்தப் பொருட்களையும் வாங்க மாட்டோம் என்றும் அவர்களுக்கு எதையும் விற்க மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம். முஸ்லீம்களுக்கு எமது நிலங்களை விற்கவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ மாட்டோம் என உறுதியளிக்கிறோம். இந்துக்களாகிய நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு வரும் விற்பனையாளர்களிடம் அவர்களின் மதத்தை உறுதிப்படுத்திய பின்னரே வாங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். அவர்களுக்கான பணியாளர்களாக நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று உறுயளிக்கிறோம்” என உள்ளூர் பழங்குடி மக்கள் உறுதிமொழி எடுக்க தூண்டப்பட்டுள்ளனர்.
படிக்க :
♦ உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
♦ இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
இந்த வீடியோவின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகிய இந்துத்துவ அமைப்புகளின் மிகப்பெரிய தூண்டுதல் இருக்கிறது என்பது போலீசின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரா கிராமத்தின் இளைஞர்கள் புத்தாண்டைக் கொண்டாட (சுற்றுலாவிற்காக) சர்குஜா மாவட்டத்தில் உள்ள குந்திகாலா கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கும் உள்ளூர் இளைஞர்களுக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அடிதடி சண்டையாக மாறியுள்ளது.
அடுத்த நாள் குந்திகாலாவில் வசிக்கும் ஒருவர் ஆரா கிராமத்தைச் சேர்ந்த (குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த) ஆறு பேருடன் சேர்ந்து பிரேந்திர யாதவ் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரையும், அவரது மருமகளையும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு அன்றே உள்ளூர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
This video is from Surguja in Chhattisgarh where some Hindutva people are taking oath.
We Hindus will not buy goods from any Muslim shopkeeper.
We Hindus will not sell or rent our land to any Muslim.
We hindu will not work with Muslims. Is Tarah se nafrat failayi ja rahi hai pic.twitter.com/rvekkMdnGD
— Rubina Afaque (@RubinaAfaqueIND) January 6, 2022