கணவன்கள் தங்களின் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் செய்தியை சில நாட்களாக பத்திரிகைகளும், பல்வேறு ஊடகங்களும் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சில ஊடகங்கள் ரசித்து வர்ணித்தும் கொண்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக பார்க்கும்போது அவை தமது “அதிர்ச்சிகளை” வெளிப்படுத்தி வருகின்றன. இதில் நாம் இரண்டு விசியங்களை பரிசீலிக்க வேண்டியது அவசியம், ஒன்று இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளானவர்களின் மனநிலை அல்லது அதற்கான அடிப்படை, இரண்டாவது இப்பிரச்சினையை இச்சமூகமும், ஊடகங்களும் அணுகும்விதும்.
முதலில் இதில் சிக்கியுள்ள தம்பதிகளின் மனநிலையை ஆராய்வோம். கேரளாவில் ஒரு மனைவி, தமது கணவன் மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துகிறார் என்று போலீசிடம் புகார் தெரிவிக்கிறார். அதன் பரிமாணம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கிட்டதட்ட 1000 தம்பதிகள் வரை இதில் ஈடுபட்டுள்ளதாக செய்திகளில் தகவல்கள் வருகின்றன.
பெண்ணை தமது உடைமையாக பார்க்கும் ஒரு ஆண் எப்படி தமது மனைவியை இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துகிறான். வெறும் பணத்திற்காக என்று மட்டும் இதை கடந்துவிட முடியுமா?
படிக்க :
♦ செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !
♦ டிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா ? || மனுஷ்யபுத்திரன்
இன்று சமூகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் நுகர்வு கலாச்சார வெறி மக்களின் மனநிலையை தீர்மானிப்பதாக உள்ளது. பலர் சொல்வதுபோல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரச்சினையின் பரிமாணத்தை கூட்டுகிறதே தவிர அவை பிரச்சினையின் அடிப்படையாக அமையவில்லை. வாட்ஸ்ஆப், ஸேர்சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல செயலிகள் இப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தது என்று சொல்லலாம். ஆனால் அடிப்படை இவற்றின் பின்னால் இருக்கும் நுகர்வுவெறி கலாச்சாரம் தான்.
ஏகாதிபத்தியங்களும், தரகு அதிகார முதலாளித்துவமும் தமது சந்தை நலனுக்காக, இலாபவேட்டைக்காக மக்களின் மனநிலையை தயார்செய்கின்றன. ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஜியோ தமது சந்தையைக் கைப்பற்ற, மக்களை கொள்ளையடிக்க முதலில் இலவசமாக டேட்டா சேவையை வழங்கியது. பலரையும் இதில் விழவைத்தது, பலரையும் இணையத்தளங்களில் மூழ்கவத்தது. இவ்வாறு மக்கள் நுகர்வுவெறியில், நுகர்வு போதையில் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பது ஆளும்வர்க்கத்தின் அல்லது இன்றைய பொருள் உற்பத்தியின் தவிர்க்க முடியாத விதி.
அன்றாடம் மாறிவரும் புதிய புதிய செல்போன்களை உடனடியாக மாற்ற வேண்டும், அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றில் தினந்தோறும் ஆடைகள், அழகுசாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அத்தனையையும் வாங்கிக் குவிக்க வேண்டும், தேவை இருக்கிறதோ இல்லையோ வார இறுதியில் ஷாப்பிங் செல்ல வேண்டும், புதிய புதிய உணவுகளை சுவைக்க வேண்டும், எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் வரம்பற்ற நுகர்வை பண்பாடாக்குகின்றனர், அது போதையாக மாறி நுகர்வுவெறியாகிவிடுகிறது. (இவை சில உதாரணங்கள் மட்டுமே)

மனிதர்கள் மனிதர்களாக வாழ இஸ்லாம் மட்டுமே உறுதுணை
மனிதர்கள் மனிதர்களாக வாழ இஸ்லாம் மட்டுமே உறுதுணையா?
ஆளும் வர்க்கத்தின் லாப வெறி, உழைப்பு சுரண்டல், நுகர்வு வெறி, இன்னும் பல விசயங்கள் இது போன்ற பிரச்சினைகளுக்கு அடிப்படையாக உள்ளது என்று கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
அதைப்பற்றி சிறுதும் பரிசீலிக்காமல் ‘இஸ்லாமிய போதனையை’ திணிக்க முற்படுவதேன்?
உங்கள் கூற்றுப்படி பார்த்தால் கூட மத்திய கிழக்கு நாடுகள் பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள் தான், ஆனால் அந்த இஸ்லாமிய நாடுகளுக்குள்ளயே சண்டை நடந்து பல்லாயிரகக்கான இஸ்லாமிய மக்கள் கொல்லப்படுவது ஏன்?
அடிமை சமுதாயம் நிலவிய காலகட்டத்தில் அரேபியர்கள் தங்களுக்குள் காண்டுமிராண்டிகளாய் சண்டையிட்டு மாண்டு போவதை தடுக்கவும், மக்களை ஒன்றுபடுத்தவும் இஸ்லாமிய மார்க்கம் தேவையாய் இருந்தது.
அதற்கு பிறகு நிலபிரபு-பண்ணையடிமை சமுதாயம், முதலாளித்துவம்(நவீன யுகம்), ஏகபோகம் என்று அடுத்த அடுத்த கட்ட சமுதாயங்களை கடந்து வந்துள்ளோம்.
சோசலிசம் என்பது, இந்த சமுதாயத்தை சுரண்டலற்ற ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதின் அறிவியல். அதாவது சமூகத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வது, என்னென்ன பிரச்சினைகள், காரணங்கள், தீர்வுகள் ஆகியவற்றை அறிவியல் பூர்வமாக அனுகுவது. இந்த சமூக அரசியல் அறிவியலை உழைக்கும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது.
இன்னும் பல…
விவாதிப்போம்.