நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
ஆர்.எஸ்.எஸ். எனும் நச்சுப் பாம்பு எப்படி நம் கால்களைச் சுற்றி நம் தலையை விழுங்கும் நிலைக்கு வந்து நிற்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் வெளிவந்திருக்கின்றன இந்த இரு நூல்களும். வாங்கிப் பயனடையுங்கள்
ஏ. ஜி. நூரானி அவர்கள் எழுதிய – RSS : A Menace to India – என்ற ஆங்கில நூலினை தமிழில் “ஆர்.எஸ்.எஸ் – இந்தியாவிற்கு அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம்.
ஆங்கிலத்தில் ஏ.ஜி.நூரணி எழுதிய இந்த நூலை பிரண்ட்லைன் ஆசிரியர், விஜய்சங்கர் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார். காவி கார்ப்பரேட் பாசிசம் ஏறித் தாக்கி வரும் சூழலில், ஆர்.எஸ்.எஸ். – சங்கப் பரிவார பாசிசக் கும்பலை அடையாளம் காணவும், அக்கும்பலின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும் அனைவரும் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது.
வரலாற்றுரீதியான தரவுகளுடன், ஆர்.எஸ்.எஸ்.-இன் அபாயம் குறித்து புரிந்து கொள்ள இந்த நூலைப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்போது முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நூலை வாங்குவதற்கான முன் பதிவு நடந்து வருகிறது.
18-01-2022 தேதிக்குள் (இன்று) முன் பதிவு செய்பவர்களுக்கு ரூ. 625 + ரூ.50 (அஞ்சல்) என்ற விலையில் முன்பதிவு செய்யப்படுகிறது.
முன் பதிவுக்கு:
பாரதி புத்தகாலயம் : 044 – 24332424
முன் வெளியீட்டு விலை : ரூ.625 + ரூ.50(அஞ்சல்) (18.01.2022 வரை)
விலை : ரூ.890 G-Pay, Phone Pay, Paytm, Whastapp மூலம் பணம் செலுத்த :94449 60935
0-0-0
ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை
நம்மில் ஒருவராக தம்மைக் காட்டிக் கொண்டே நம்முள் புகுந்து சாதிய சனாதனத்தின் அடிப்படையை நம்மை ஏற்கச் செய்து நம்மை அடிமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதி வெளியிட்ட நூல் : ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை.
சுயமுன்னேற்றம் ஆன்மிகம், யோகா, விளையாட்டுப் பயிற்சி, கல்விப் பயிற்சி, ஒழுக்க வகுப்பு என்று பல முகங்களாக காட்டிக்கொண்டு நம்முள் புகுந்து அதன் ஊடாகவே தமது நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தும் பணியைச் செய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இவ்வழியில் மக்கள் மத்தியில் நுழையும் சங்க பரிவாரத்தின் நூற்றுக்கணக்கான அமைப்புகள் தங்களை மறைத்துக் கொண்டு படிப்படியாக, நம் மத்தியில், தலித்திய வெறுப்பு, இசுலாமிய வெறுப்பு, கிறித்துவ வெறுப்பு ஆகியவற்றை வளர்க்கின்றன.
சாதியரீதியாக நம்மை இவ்வளவு காலமாக அடக்கிவைத்த கூட்டம் இன்று கலவரம் செய்வது முதல் அதற்கு ஆள்பிடிப்பதுவரை எப்படி செய்கிறது என்பதையும், அது எந்தெந்த வழியில் செயல்படுகிறது என்பதையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது.
விவேகானந்தரை எப்படி தனக்குச் சாதகமான வழியில் பயன்படுத்தி, இளைஞர்களை மூளைச் சலவை செய்கிறது என்பதையும், இந்து ஒற்றுமை என்று கூறும் இந்த சங்க பரிவாரக் கும்பலின் அடித்தளம் எப்படி சனாதன தர்மத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்தக் கும்பல், எப்படி காலத்திற்குத் தகுந்தாற்போல, பிற்படுத்தப் பட்டோருக்காக தாம் போராடியது போல வேடம் போட்டு ஏமாற்றுகிறது என்பதையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது.
மேலும் டாலர் உண்டியல் எனும் தலைப்பில் ஒரு கட்டுரையில் எப்படி ஆர்,எஸ்,எஸ், அமைப்பு மேற்கத்திய நாடுகளின் நிதியை ஏழைகளை வாழ்விப்பதற்கான நிதியாகப் பெற்று அதனை மத முனைவாக்கத்திற்காக செலவிடுகிறது என்பதைஉயும் அம்பலப்படுத்துகிறது,. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாகப் பெற்று அதனை தனது இந்து ராஷ்டிரக் கனவுக்காக செயல்படுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ். எனும் நச்சுப் பாம்பு எப்படி நம் கால்களைச் சுற்றி நம் தலையை விழுங்கும் நிலைக்கு வந்து நிற்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது இந்த நூல்.
வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆசிரியர் : கி. வீரமணி விலை ரூ. 160
தேசத்துரோகிகள் RSS ஐ எதிர்ப்பார்கள். சுதந்திர தினத்தை துக்கதினம் என்ற ராமசாமி நாயக்கனின் அடிவருடிகளும், மாற்றுமத கும்பலின் காசுக்கு குரைப்பவர்களும் இப்படிதான் புத்தகம் எழுதுவர்.
வெள்ளைக்காரனின் காலை நக்கிய RSS கயவர்களெல்லாம் தந்தை பெரியாரை சாதிப் பெயர் கொண்டு அழைக்க விளைகின்றனர். அம்பேத்கரை தின்று செரிக்க முற்படுகிறவர்களுக்கு தந்தை பெரியாரின் பெயர் கூட எட்டிக்காயாய் கசக்கிறது..!
தேசத்துரோகிகள் RSS ஐ எதிர்ப்பார்கள். சுதந்திர தினத்தை துக்கதினம் என்ற ராமசாமி நாயக்கனின் அடிவருடிகளும், மாற்றுமத கும்பலின் காசுக்கு குரைப்பவர்களும் இப்படிதான் புத்தகம் எழுதுவர்.
வெள்ளைக்காரனின் காலை நக்கிய RSS கயவர்களெல்லாம் தந்தை பெரியாரை சாதிப் பெயர் கொண்டு அழைக்க விளைகின்றனர். அம்பேத்கரை தின்று செரிக்க முற்படுகிறவர்களுக்கு தந்தை பெரியாரின் பெயர் கூட எட்டிக்காயாய் கசக்கிறது..!