லக மகிழ்ச்சி அறிக்கை 2022-ல் பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மகிழ்ச்சியான நாடாக உள்ளது. இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின் தங்கிய நிலையில் 136வது இடத்தில் உள்ளது.
டென்மார்க் இரண்டாவது இடத்திலும், ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும் சுவிட்சர்லாந்து நான்காவது இடத்திலும் நெதர்லாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளது. லக்சம்பர்க், நார்வே, இஸ்ரேல் மற்றும் நியூசிலாந்து ஆகியவை முதல் 10 இடங்களுக்குள் எஞ்சிய நாடுகள் ஆகும்.
மறுபுறம் மிகவும் மகிழ்ச்சி குறைனான நாடுகளாக கடைசி இடங்களில் லெபனான் (145வது), ஜிம்பாப்வே (144வது) ருவாண்டா (143வது) மற்றும் போட்ஸ்வானா (145வது) ஆகியவற்றை தொடந்து ஆப்கானிஸ்தான் 146வது இடத்தில் உள்ளது.
படிக்க :
லான்செண்ட் அறிக்கை : கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவில்தான் அதிக மரணம் !
ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
இந்த ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. அகநிலை நல்வாழ்வின் அறிக்கையின் அளவீடுகள் வாழ்க்கை மதிப்பீடுகள், நேர்மறை உணர்ச்சிகள், எதிர்மறை உணர்ச்சிகள் என மூன்று முக்கிய நல்வாழ்வு குறிகாட்டிகளை அடிப்படையாக கொண்டது. மகிழ்ச்சி தரவரிசை, மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மிகவும் நிலையான – அளவீடாக – வாழ்க்கை மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும், உலக மகிழ்ச்சி அறிக்கை 2022-ல் கொரோனா, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை எவ்வாறு மாறியுள்ளது என்பதை சிறப்பாகக் கண்காணிக்க குறிப்பிட்ட, தினசரி உணர்ச்சிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.
முதல் பத்து நாடுகளுக்குப் பிறகு பின்வரும் ஐந்து நாடுகள் ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜெர்மனி மற்றும் கனடா. மற்ற முதல் 20 இடங்களில் அமெரிக்கா 16வது இடத்திலும் (கடந்த ஆண்டு 19வது இடத்திலிருந்து) யுனைடெட் கிங்டம் 17வது இடத்திலும், செக்கியா 18வது இடத்திலும், பெல்ஜியம் 19வது இடத்திலும், பிரான்ஸ் 20வது இடத்திலும் உள்ளது.
“கடந்த பத்து ஆண்டுகளில் வாழ்க்கை மதிப்பீடுகள் 15 நாடுகளில், 0 முதல் 10 அளவில் ஒரு முழுப்புள்ளிக்கு மேல் உயர்ந்துள்ளது. 8 நாடுகளில் 0 முதல் 10 அளவில் ஒரு முழுப்புள்ளிக்கு கீழ் குறைந்துள்ளது” என்று அறிக்கை கூறியது.
அறிக்கையின்படி, 2008 – 2012 முதல் 2019 – 2021 வரை அதிக இலாபம் ஈட்டிய பத்து நாடுகள், செர்பியா, பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி, டோகோ, பஹ்ரைன், லாட்வியா, பெனின், கினியா மற்றும் ஆர்மேனியா ஆகும். லெபனான், வெனிசுலா, ஆப்கானிஸ்தான், லெசோதோ, ஜிம்பாப்வே, ஜோர்டான், ஜாம்பியா, இந்தியா, மெக்சிகோ மற்றும் போட்ஸ்வானா ஆகிய பத்து நாடுகள் மிகப்பெரிய விழ்ச்சியை அடைந்துள்ளது.
தனியார்மய தாராளமய உலகமய கொள்கையின் அடிப்படையில் உலகின் அனைத்து ஏழைநாடுகளும் கார்ப்பரேட் இலாப வேட்டையில் சிக்கி உழைக்கும் மக்களை வறுமையில் பிடியில் தள்ளுகிறது. இதுவே பல்வேறு நாடுகளில் மகிழ்ச்சி குறியிடுகள் தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம். குறிப்பாக கொரோனா பெறும் தொற்று இந்த பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நிலைக்கு மாறவேண்டும் என்றால் உலகம் சோசலிச கட்டுமானத்திற்கு மாறவேண்டும் என்பதே ஒரே தீர்வாக இருக்க முடியும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : Livemint

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க