பெட்ரோல் விலை உயர்வை குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளரை கடுமையாக மிரட்டியுள்ளார் பாபா ராம்தேவ்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பாஜகவிற்கு ஆதாரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பெட்ரோல் விலையை ரூ.40க்கு கொண்டுவரும் கட்சிக்குதான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார் கார்ப்பரேட் சாமியார் ராம்தாவ்.
அதை தொடர்ந்து 2018-ல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணக்காரர்களுக்கு வரிவிதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். “அரசு, வரியை சற்று குறைத்து எனக்கு பெட்ரோல் விற்பனைக்கு அனுமதி வழங்கினால் நான் இந்தியாவிற்கு பெட்ரோல், டீசலை லிட்டருக்கு 35-45 ரூபாய்க்கு தர முடியும். மக்களின் பாக்கெட் காலியாகி வருவதால் பெட்ரோல், டீசலை ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி என்ற 28 சதவீத வரியின்கீழ் கொண்டுவரக்கூடாது.” பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க அரசு தயக்கம் காட்டுவது குறித்து கேள்வியெழுப்பிய ராம்தேவ், “வருவாய் இழப்பு ஏற்பட்டால் இந்தியா செயல்படுவதை நிறுத்தாது, பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பதன்மூலம் இழப்பை மீட்டெடுக்க முடியும்” என்றார்.
படிக்க :
♦ ‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !
♦ மோகன் பாகவத் : ஆடுகளுக்காக அழும் ஓநாய் – பின்னணி என்ன ?
தற்போது 2022 மார்ச் 31 அன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டு கடந்த ஒன்பது நாட்களில் மொத்த விலையும் லிட்டருக்கு ரூ.5.60 உயர்ந்துள்ளது. இதைபற்றி, அரியானா மாநிலம் கர்னாலில் நடந்த நிகழ்ச்சியின்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.40-க்கும் சமையல் எரிவாயு லிட்டருக்கு ரூ.300-க்கும் வழங்குவதை உறுதி செய்யும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ராம்தேவ் கூறிய பழைய கருத்தை மீண்டும் கூறி கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர், தற்போதைய ஏரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலையை பற்றி ராம்தேவிடம் கருத்து கேட்டார்.
Yoga Guru Ramdev was seen on camera losing his cool and threatening a journalist, who asked him about his comments in the past on reducing petrol price. @ndtv pic.twitter.com/kHYUs49umx
— Mohammad Ghazali (@ghazalimohammad) March 30, 2022