டந்த மார்ச் (2022) மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகப் படியான வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஏப்ரல் 3 அன்று வெளியிட்ட அனல் காற்று முன்னறிவிப்பு எச்சரிக்கைக்கான அறிக்கையில் கூறியுள்ளது.
வழக்கத்திற்கு மாறான காற்றின் வடிவங்கள் மற்றும் மழையின்மை ஆகியவை இந்த அனல் காற்றை உருவாக்கக் கூடும் என்றும், இது புவி வெப்பமடைதலின் விளைவு என்றும் புனேவில் உள்ள ஐ.எம்.டி.யின் காலநிலை கண்காணிப்பு மற்றும் கணிப்புக் குழுவின் தலைவர் ஓ.பி.ஸ்ரீஜித் இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார்.
சமீப காலமாக இந்தியாவில் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இத்தகைய அதிக வெப்பநிலை மனித ஆரோக்கியத்தை பாதிக்கும்.
படிக்க :
♦ பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் !
♦ ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
ஐ.எம்.டி.யின் படி, ஒரு இடத்தில் வெப்பநிலை இயல்பிலிருந்து 4.5 டிகிரி முதல் 6.4 டிகிரி வரை விலகும்போது அனல் காற்று உருவாகிறது. வெப்பநிலை இயல்பிலிருந்து 6.4 டிகிரிக்குமேல் மாறினால், அப்பகுதியில் ‘கடுமையான’ அனல் காற்று வீசும் என்று கூறுகிறது.
ஏப்ரல் 2-ம் தேதி வரை, ராஜஸ்தான், மத்திய மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் உட்பட இந்தியாவின் வடமேற்கின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி முதல் 42 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு ராஜஸ்தானில் வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி முதல் 8 டிகிரி அதிகமாக இருந்தது. அரியானா, டெல்லி மற்றும் கிழக்கு ராஜஸ்தான் உட்பட பல பகுதிகளில் 4 டிகிரி முதல் 6 டிகிரி அதிகமாக வெப்ப நிலை பதிவானது.
ஏப்ரல் 3 அன்று, மேற்கு ராஜஸ்தானில் நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை 43.6 டிகிரி பதிவாகியுள்ளது. கிழக்கு உத்தரப்பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயாவில் உள்ள பல இடங்களில் இயல்பு நிலையைவிட  1 டிகிரியிலிருந்து 3 டிகிரியாக வெப்பநிலை உயர்ந்துள்ளது.
டெல்லி, தெற்கு அரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 7-ம் தேதி வரை தொடர்ந்து வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்கிறது. அதற்குபின் நிலைமை என்ன என்பதை பற்றி ஆய்வுகள் முடிவுகள் இல்லை.
Climate Change melting-glaciersகடந்த ஆண்டு (2021) பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் பருவநிலை மாற்ற ஆராய்ச்சிக்கான மையத்தின் விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்தியாவில் அனல் காற்றின் வடிவங்கள் மாறிவிட்டதாகவும், வடமேற்கு, மத்திய மற்றும் தென்-மத்திய இந்தியாவில் அனல் காற்று வீசுவது அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் மத்தியப் பிரதேசம் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. 1978-1999 இல் 5,330 இறப்புகள் பதிவாகி, 2003 இல் 3,054 இறப்புகளாகவும், 2015 இல் 2,248 இறப்புகளாகவும், வெப்பம் தொடர்பான இறப்புகளின் அதிகரிப்பையும் ஆய்வில் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் அதிக வெப்பம் இருக்கும் என்று கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் காலநிலை அறிக்கை எச்சரித்தது. UN அமைப்பான காலநிலை குழுவின் (IPCC) மூன்று பகுதி ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் (AR6) முதல் அறிக்கை, வெப்பநிலை உட்பட இந்தியா அடிக்கடி தீவிரமான வானிலை மாற்றங்கள் நிகழும் என எச்சரித்தது.
கடந்த பிப்ரவரி 2022-ல் ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில், தெற்காசியாவில் அதிக வெப்ப நிலை அடிக்கடி மற்றும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும், வறண்ட பகுதிகளில் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறது.
உலக வெப்பமயமாதலின் மூலக்காரணமாக இருக்கு கார்ப்பரேட் பரகாசுர கம்பெனிகள் தங்களின் பல்வேறு இயற்கை வள சூறையாடல்களை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையேல் உலகம் பல்வேறு பருவநிலை மாற்றங்களால் பாதிப்படையும், இதனால் மனித இனம் பேரழிவை சந்திக்கும் என்பது உறுதி.

புகழ்
செய்தி ஆதாரம் : Science the wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க