மிழகம் முழுவதும் அக்டோபர் 25, வடகிழக்கு பருவமழை துவங்கியது. சென்னையில் மழை தொடங்கிய 5 நாட்களில் பெய்த அதீத மழையிலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் 24 மணிநேரம் தொடர்ச்சியாக பெய்த மழையாலும் மூழ்கி சென்னை நகரமே தத்தளிக்கிறது.
கடந்த 2019 ஆண்டு தமிழ்நாடும் குறிப்பாக சென்னை, குடிநீர் தட்டுப்பாட்டால் திண்டாடியது. தற்போது அதீத மழையால் தத்தளித்து கொண்டிருக்கிறது. நகரமே வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கிறது. ஒரு நாள் கனமழை பெய்தாலே சென்னையில் படகில் செல்லவேண்டிய பரிதாபநிலை தான் உள்ளது. மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பால் தட்டுபாடு உள்ளிட்டு க்களுடய இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
இதற்கு காரணம் ஏரிகள், கால்வாய்கள் நீர்வழிதடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், வடிகால் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், பாதாளச்சாக்கடை முறையாக இல்லை போன்றவை தான் காரணம் எனவும், இன்னொருபுறம் அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த பல கோடி ஊழல் தான் காரணம் என திமுக சொல்கிறது.
படிக்க :
ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !
மழை வெள்ளத்தால் நிரம்பிய நீராதாரங்கள் கையாளப்பட்ட விதமும் வெள்ள வடிகால்களில் கைவிடபட்ட பாராமரிப்பு பணிகளும், நீர்நிலைகள், குப்பைகள் மற்றும் திடக்கழிவுகளால் சீரழிந்து கிடப்பது என்பது உண்மைதான், ஆனால் சென்னை வெள்ளத்திற்கு இது மட்டும்தான் காரணமா?
இங்கு கவனிக்க வேண்டிய பிரதான பிரச்னை, பருவநிலையில் கடந்த பத்தாண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம் ஏன்? என்பது தான்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் தொடர்ச்சியான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 2011 தானே புயல், நிலம் புயல், 2015 சென்னை பெரு வெள்ளம், 2016 வர்தா புயல், 2017 ஒக்கி புயல், 2018 கஜா புயல், 2019 சென்னையில் கடும் தண்ணீர் வறட்சி, 2020 நிவர் புயல் என அடுக்கு அடுக்காக பாதிப்புகளை சந்தித்திருக்கிறது தமிழகம். தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் இந்தப் பத்தாண்டுகளில் இத்தகைய பாதிப்புகள் அதிகரிக்கக் காரணம் என்ன ?
climate_change_1உலகமயமாக்கலின் காரணமாக உலகம் முழுக்க தொழிற்சாலைகளிருந்து வெளிவரும் கரியமில வாயு, கார்பன் வாயு அதிகரிப்பு, காடுகள் அழிப்பு, கடல் மாசுபாடு வாகன உற்பத்தி, இயற்கை வளங்களை வரைமுறை இன்றி வெட்டி எடுப்பது போன்றவை, ஏகாதிபத்தியங்கள், தரகுமுதலாளிகள், (கார்ப்பரேட்) லாபவெறிக்காக தினந்தோறும் நடத்தபட்டு வருகின்றன. இவற்றின் விளைவு தான் அனைத்திற்கும் காரணம். இன்னும் அதிகபடுத்தியிருக்கும் மீத்தேன் ஹைட்ரோகார்பன், திட்டங்கள், நிலக்கரி எடுப்பு திட்டங்கள், போன்றவற்றால் மேலும் நெருக்கடிகள் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கவே செய்யும்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஐ.நா சார்பாக பருவநிலை மாற்ற உச்சி மாநாடு‘ (12.11.2021 வரை) நடந்துவருகிறது. இதில் 120 நாடுகள் பங்கேற்று கரியமில வாயு உமிழ்வு பூஜ்ஜியமாக்கப்படுவது பற்றி விவாதித்து வருகின்றன. ஏகாதிபத்திய நாடுகள், அதன் சார்பு நாடுகள், அவற்றால் சுரண்டப்படும் நாடுகள் என அனைத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்கின்றன. இந்த நாடுகள் தத்தமது நாட்டின் கார்ப்பரேட்களின் நலனைப் பாதுகாத்துக் கொண்டே எப்படி சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது என்பது குறித்துப் பேசுகின்றன.
கரியமில வாயு அதிகரிப்பது கார்ப்பரேட்களின் லாபவெறிதான் எனும் போது, எப்படி அவர்களின் நலனைப் பாதுகாத்துக் கொண்டே புவி வெப்பமாவதிலிருந்து தடுத்து நிறுத்த முடியும். “பாம்புக்கும் நோகாமல், தடிக்கும் நோகாமல்” சுற்றுப்பபுறச் சூழலை பாதுகாக்கும் இவர்களின் திட்டங்கள் அனைத்தும் கண் துடைப்பு நாடகமே. 
சீனா அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாதான் அதிகப்படியான கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. பிரிட்டன் ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான cop-26 உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக, பசுங்குடில் வாயு (Green House Gas) வெளியேற்றதை குறைக்கும் தனது திட்டதை இந்தியா அறிவித்தது. இதனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்ற கரியமில வாயு வெளியேற்றாத வாகனங்களை உருவாக்குவது, 2005ல் இருந்து 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு தீவிர இலக்கு 60%லிருந்து 35% சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா கூறியிருக்கிறது.
அறிவிப்புகள் பிரமாதமாக இருந்தாலும், அதற்கான குறிப்பான திட்டம் என்று ஏதும் இல்லை என்பதோடு, இந்தியாவில் பல சமூக, சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த சுற்றுச் சூழல் மசோதா, கடல் வள மசோதா ஆகியவற்றை நடைமுறைப் படுத்தத் துடிக்கும் மோடி அரசு, அந்த மாநாட்டில் அறிவித்திருப்பது வெரும் கண் துடைப்பு நாடகமே என்பதை உலகமே அறியும்.
அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்ற குழுவான ஐபிசிசி, நாடுகள் வெளியேற்றும் மொத்த பசுங்குடிகளின் வாயுக்களின் வெளியேற்றும் அளவை 2050-ம் ஆண்டிற்குள் பூஜ்ஜியமாக கொண்டுவந்தால் புவியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் கீழ் வைத்திருக்க உதவும் என்கிறது.
இந்த இலக்கை அடைவோம் என 130 நாடுகள் வெளிபடையாக உறுதி அளிதுள்ளன என்பதை, ஏற்கெனவே 2016-ல் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையழுத்திட்ட 190 நாடுகளும் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
புவி வெப்பமயமாதல் விளைவாக மழை பொழிவிலும் வானிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் . தமிழநாட்டில் கடலோர பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு சுமார் 0.1 முதல் 0.2 டிகிரி வரை எனும் வீதத்தில் வெப்பநிலை உயருகிறது. வட இந்தியாவின் சில பகுதிகளை விட இது குறைவாக இருந்தாலும், இதே போக்கில் தொடர்ந்தால் சிக்கல் ஏற்படும்.
வட மாநிலங்களை போல தென் இந்தியாவில் இதுவரை கடும் வெப்ப அலைகள் வீசியதில்லை. ஆனால் பருவ நிலை மாற்றத்தின் விளைவாக 21-ம் நூற்றாண்டின் இறுதிக்குள் தென்னிந்தியாவிலும் கடும் வெப்ப அலைகள் வீசத்தொடங்கும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
உலகிலேயே வேகமாக கடலில் மூழ்கி வரும் நகரம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்தா. இந்நகரம் ஆண்டுக்கு சாசரியாக 10 செ.மீ கடலில் மூழ்கி வருகிறது. அதைப்போல் புவி வெப்பமயமாதலின் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி பறவை இனங்களும் அழிகின்றன.
இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஒன்பது ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என ஐ.நா பருவநிலை மாற்றத்திறக்கான குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. புவி வெப்பம் அடைவதால் மனிதகுலம் பேராபத்துகளை சந்திக்க இருக்கிறது என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, துருக்கி, பொலீவியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் கட்டுக்கு அடங்காத காட்டுத் தீ, சீனாவில் பெருவெள்ளம், வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் நாடுகள், பருவம் தவறிய மழை இப்படி உலக நாடுகளில் வழக்கதிற்கு மாறான இத்தகைய நிகழ்வுகளுக்கு புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றமும் தான் காரணம் என்கிறனர் விஞ்ஞானிகள். பூமிப் பந்தையே தமது லாபவெறிக்காக முதலாளித்துவம் சூறையாடிக்கொண்டிருக்கின்றது.
பருவநிலை மாறுபாடுகளுக்கு காரணம் மனித செயல்பாடா? கார்ப்பரேட்டுகளின் செயல்பாடா?
பருவநிலை மாற்றத்திற்கான அடிப்படையான காரணமாக அமையும் கட்டுக்கடங்காத முதலாளித்துவ இலாபவெறியை மறைக்க, மனிதச் செயல்பாடுகள் தான் இயற்கையை அழித்து பருவநிலை மாறுபாடுகள் ஏற்படக் காரணம் என்று அனைத்து மக்களின் மீதும் பழி போடுகின்றனர், ஆளும் வர்க்கத்தின் எடுபிடி பத்திரிகைகளும், ஊடகங்களும்.
தமது லாபவெறிக்காக இயற்கை வளங்களை சூறையாடும் கார்ப்பரேட்களையும், இத்தகைய சூறையாடலை எதிர்த்து போராடும் மீததேன் திட்ட எதிர்ப்பு போராட்டங்கள், மீன்வள மசோதா எதிர்ப்பு போராட்டங்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள், சுரங்கங்கள், காடுகள் அழிப்புக்கு எதிரான பழங்குடிகள் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. இதே போல உலகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். 
படிக்க :
முதலாளித்துவம் : இரக்கமற்ற சுரண்டல் பேய் || கருத்துப்படம் !
முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?
முதலாளித்துவ இலாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராடும் சாதாரண உழைக்கும் மக்களையும் ஒரு சேர இணைத்து. பருவநிலை மாற்றத்திற்கு மனித செயல்பாடுகள்” தான் காரணம் என பொத்தாம் பொதுவாக பேசுவது, கார்ப்பரேட்டுகளை பழியிலிருந்து காப்பாற்றுவதற்குத் தானே தவிர வேறெதிற்கும் இல்லை.
உலக ஏகாதிபத்தியங்களும், அதன் சார்பு மற்றும் அதன் கீழுள்ள பிற நாடுகள் அனைத்தும் முதலாளிகளின் இலாபவெறிக்காக, பூமிப் பந்தை அழித்துக் கொண்டிருக்கின்றன. ஆளும் வர்க்கமான முதலாளித்துவ, நிதியாதிக்கக் கும்பலின் நலனுக்காகச் செயல்படும் அரசுகள், பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகக் கூறினால், அது கேப்பையில் நெய் வழிந்த கதைதான்.
முதலாளித்துவ இலாப வெறியை ஒழித்துக் கட்டி, உற்பத்தியை திட்டத்திற்குட்பட்டதாக்கி, அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற உழைக்கும் மக்களின் அரசான சோசலிச, புதிய ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கப் போராடுவதே தீர்வு பருவநிலை மாற்றத்திற்கு நிரந்தரத் தீர்வு தர முடியும். அது மட்டுமே பூமிப் பந்தை காப்பதற்குக்கான ஒரே தீர்வு.
கந்தசாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க