13.04.2022
அயோத்தியா மண்டபம் விவகாரம் :
ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன  கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திடுக !
தமிழ்நாடு அரசின் அதிகாரமா? பார்ப்பன பாசிஸ்டுகளின் அதிகாரமா?
எது உயர்ந்தது என்று முடிவு செய்வோம் !
தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும்
பார்ப்பன பாசிஸ்டுகளை தெருவில் இறங்கி முறியடிப்போம் !
பத்திரிகைச் செய்தி !
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்தில் தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன பாசிஸ்டுகள் தங்களுடைய நச்சுக் கருத்துக்களை பரப்பி வந்தனர். தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு தில்லை நடராஜர் கோயிலைப்போல மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களுக்கு அயோத்தியா மண்டபம் பார்ப்பன பாசிஸ்டுகளின் புகலிடமாகவும் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் மையமாகவும்  அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.
இப்படிப்பட்ட பார்ப்பன பாசிஸ்டுகளின் கூடாரமான இந்த அறக்கட்டளை பொதுமக்களிடம் நன்கொடை மற்றும் காணிக்கை பெற்றே செயல்பட்டு வருகின்றது. ஸ்ரீ ராம் சமாஜம் அறக்கட்டளை நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதன் முன்னாள் அறங்காவலர் உள்ளிட்ட பலர் புகார்கள் அளித்த நிலையில் அயோத்தியா மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.

படிக்க :

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !

அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

இதனை எதிர்த்து, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை கடந்த மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம். வேலுமணி, “இந்து சமய அறநிலையத்துறை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்தலாம் எனவும், ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
மேற்கண்ட தீர்ப்பு வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து ஏப்ரல் 13 அன்று அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சென்றபோது, ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன பாசிஸ்டுகள், ரவுடிகள் மற்றும் பொறுக்கிகளோடு கும்பலாக சேர்ந்துகொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளையும் போலீசையும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் போலீஸ் மீதும் அதிகாரிகள் மீதும் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
அயோத்தியா மண்டபத்தில் பூட்டி அதனுள்ளே யாரும் உள்ளே நுழைய முடியாதபடி அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த சென்ற அதிகாரிகளை தடுத்து அவர்களை தாக்கி உள்ளே செல்லவிடாமல் தடுத்தது என்பது அரசுக்கு எதிரான குற்றமாகும்.
இச்செயலில் ஈடுபட்ட உமா ஆனந்தன் கவுன்சிலர், கரு. நாகராஜன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக நிர்வாகிகள் 75 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்பொழுது போலீசுடன் தள்ளுமுள்ளுவில்  ஈடுபட்டால்  உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது.
ஆனால், பார்ப்பன பாசிஸ்டுகள் காலையில் கைது செய்யப்பட்டு நன்றாக சோறுபோட்டு மாலையில் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதுதொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தை பாஜக கட்சிக்கு தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பனக் கும்பலுக்கு எப்படி அயோத்தியா மண்டபத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமோ, அதைவிட அந்த அயோத்தியா மண்டபம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது முக்கியம்.
தமிழ்நாட்டில் யாருடைய அதிகாரம் உயர்ந்தது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, நிதி முறைகேட்டில் ஈடுபட்ட அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கைது செய்வதுடன் அயோத்தியா மண்டபத்தில் உடனடியாக இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வர வேண்டும்.
இப்பிரச்சினையை சாக்காக வைத்துக் கொண்டு தமிழகத்தில் கலவரம் நடத்த முயற்சி செய்த கோட்சேவின் பேத்தி என்று பெருமையாக பீற்றிக் கொண்ட உமா ஆனந்தன் கவுன்சிலர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன ரவுடிக் கும்பல் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன கும்பல் தெருவில் இறங்கிப் போராடுவது நீடித்தால் அதை முறியடிக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக, பெரியாரிய அமைப்புகளின் கடமையாகும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்,

தோழர் மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க