ந்திர மாநிலத்தை சேர்ந்த பழங்குடி கூலி தொழிலாளி, இறந்த தன் மகனை 90 கிலோ மீட்டர் பைக்கில் தூக்கிச் சென்ற அவலம்! ஏழைகள் பிறப்பிலிருந்து இறப்புவரை கண்ணியமற்ற முறையில் நடத்தப்படும் கொடுமை!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது பழங்குடி சிறுவன் கல்லீரல் பாதிக்கப்பட்டு திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ராம்நரேய் ரூயா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி கடந்த ஏப்ரல் 25 அன்று உயிரிழந்தான்.
அவனுடைய தந்தை நரசிம்லு மாம்பழத் தோட்டத்தில் தோட்டவேலை செய்யும் கூலி தொழிலாளி. அவருக்கு மாதம் ரூ.4000 தான் சம்பளம். மருத்துவனையில் உயிரிழந்த தன் மகனை எடுத்து செல்ல அரசு மருத்துவமனை நிர்வாகம் அரசு அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தராததால் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வாடகைக்கு கேட்கிறார் நரசிம்லு. அந்த ஓட்டுனர் ரூ.20,000 தருமாறு கேட்கிறார். அந்தளவு பணம் இல்லை. தொகையை குறைத்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடி பார்க்கிறார். ஓட்டுநர் பிடிகொடுக்கவில்லை. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் தன் மகனை தோளில் தூக்கி கொண்டு 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன் ஊருக்கு வந்துள்ளார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது.
படிக்க :
♦ இறந்தவர்களுக்கும் தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டும் மோடி அரசு !
♦ அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !
ஆந்திரா என்றால் ஹைடெக் சிட்டி என்று சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் பேசப்பட்டது. ஆனால் அது ஏழைகளுக்கானதா என்பதுதான் கேள்வி. ஆந்திரத்திலும் ‘மஹா பிரஸ்தனம்’ என்ற பெயரில் இலவச அரசு ஆம்புலன்சுகள் உள்ளன. இந்த அரசு மருத்துவனைக்கும் மூன்று இலவச ஆம்புலன்சுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி வைரலான பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது அங்கு எந்த ஆம்புலன்சும் இல்லை. இதற்கு நான்கு பேர்தான் பொறுப்பு என்று நால்வரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது அரசு நிர்வாகம். இந்த அவலத்திற்கு இவர்கள் மட்டும்தான் பொறுப்பா?
விவசாயம், சிறு தொழில் அழிந்து ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பும் வருமானமும் குறைந்து வருகிறது. மறுபுறம் விலைவாசி உயர்வால் வாழமுடியாத நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு முறையான மருத்துவ வசதி கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைதான் கதி என்று 100, 150 தொலைவில் இருந்தாலும் கூட அரசு மருத்துவமனையை நாடிவருகின்றனர். ஆனால், அங்கு மருத்துவர்கள், மருந்து மாத்திரைகள், செவிலியர்கள், பராமரிப்பு என அனைத்தும் சீர்குலைந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளோ இலாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால் ஏழைகளுக்கு உயிரை காப்பதற்கும் வழியில்லை. உடலை கண்ணியமான முறையில் அடக்கம் செய்யவும் வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் வடமாநிலங்களில் இறந்த உடலை தோளில் தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர்கள் நடந்தே சென்ற அவலம் நிகழ்ந்திருக்கிறது.
கோ சாலை என்ற பெயரில் பசுவை பாதுகாக்கும் கொட்டடிகள், மருத்துவ வசதிகள் செய்யப்படுகிறது. ஆனால் ஏழை எளிய மக்கள் நாடு முழுவதும் கேட்கநாதியற்ற அரசு மருத்துவமனை நிர்வாகத்தாலும் அரசு நிர்வாகங்களாலும் கேவலமாக நடத்தப்படுகின்றனர்.
இதற்கு காரணம் என்ன? ஆசியாவிலேயே முகேஷ் அம்பானிக்கு பிறகு, இரண்டாவது பெரிய கோடிஸ்வரன் கெளதம் அதானிதான். அம்பானியின் சொத்துமதிப்பு 2021-ல் 24 சதவீதம் உயர்ந்து அவருடைய சொத்துமதிப்பு 7.80 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே ஆண்டில் கெளதம் அதானியின் சொத்துமதிப்பு 153 சதவீதம் உயர்ந்து 6.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் ஏழைகளோ மேலும் மேலும் ஏழைகளாகி பஞ்சை பராரிகளாகி வருகின்றனர்.
படிக்க :
♦ கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !
♦ சென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச் செல்லத் தயாராகுங்கள் || செய்தித் தொகுப்பு
இவ்வாறு முதலாளிகளுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று நாடு இரண்டாக பிளவுபட்டுவிட்டது. ஆனால் இதை மறைக்கும் பாசிச மோடி அரசு ஒரு நாடு, ஒரே கொள்கை, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம் என்று காவி பாசிசத்தை தீர்வாக முன்வைத்து மக்களை ஏய்த்து வருகிறது.
மக்களிடையே நிலவும் இதுபோன்ற அவலங்களுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம் முதலாளித்தும். இந்த முதலாளித்துவ கொள்கைதான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம். இதுதான் மத்திய, மாநில அரசுகளின் ஆட்சியாளர்களின் கொள்கையும். முதலாளித்துவமும் அதன் கொள்கைகளும் நடைமுறைபடுத்தப்படும் வரை ஏழைகளுக்கு இதுதான் நிலை.

முத்துக்குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க