றந்துபோனவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டதாக கணக்குக் காட்டும் படலத்தை மோடி  அரசு தொடர்ந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தொடரும் இத்தகைய கேலிக்கூத்துகள் இந்தியாவின் 100 கோடி தடுப்பூசி கொண்டாட்டத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது.
மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள மொராரில் வசிக்கும் அக்‌ஷய் பட்நாகர், தனது சகோதரர் பிரசாந்தின் தொலைபேசிக்கு டிசம்பர் 8-ம் தேதி மதியம் 1.22 மணிக்கு அவரது இரண்டாவது டோஸ் கோவிஷீல்டைப் பெற்றதாகவும், அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் செய்தி வந்ததாக அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். மார்ச் 24, 2021 அன்று பிரஷாந்த் (50) தனது முதல் டோஸ் கோவிஷீல்டைப் பெற்றுள்ளார். இருப்பினும் ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் கொரோனா வைரலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மே 21, 2021 அன்று காலமானார். அவரது மொபைல் எண்ணிற்குத்தான் கடந்த டிசம்பர் 8-ம் தேதி இந்தக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது.
படிக்க :
இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 70 சதவிதம் பேர் !
இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !
“முதலில் இது ஒரு வகையான பிராங் (Prank) என நாங்கள் நினைத்தோம். ஆனால் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து செய்தி வந்திருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதில் “அன்புள்ள பிரசாந்த் பட்நாகர் 8.12.21 அன்று மதியம் 01.22 மணிக்கு கோவிஷீல்டு மூலம் உங்களின் 2-வது டோஸ் தடுப்பூசியை வெற்றிகரமாகச் செலுத்திக் கொண்டீர்கள். சான்றிதழ் தரவிரக்கம் செய்தி கொள்ளலாம்” என கூறப்பட்டிருந்தது என்று அக்‌ஷய் கூறினார்.
“இது எப்படி நடந்தது என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். ஏனெனில் தடுப்பூசிக்கான முன்பதிவு ஒரு செயலி மூலமாகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போது ஆதார் அட்டை போன்ற அடையாள ஆவணங்களை வழங்க வேண்டும், அப்படியானால் கூடுதல் டோஸ் எடுப்பதற்காக யாராவது பிரசாந்த் வேடம் போட்டார்களா? அல்லது அதிக தடுப்பூசி விகிதத்தைக் காட்டுவதற்காக தரவு டிங்கர் செய்யப்படுகிறதா?” என்று கேள்வியெழுப்புகிறார் அக்‌ஷய்.
இதேபோன்று, மத்தியப் பிரதேசத்தில் உள்ள அகர் மால்வா மாவட்டத்தில் கொரோனாவினால் இறந்த வித்யா ஷர்மாவின் குடும்பத்தினருக்கு அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக கடந்த செப்டம்பர் 17 அன்று செய்தி வந்துள்ளது.
அதுவரை மத்தியப் பிரதேசம் கிட்டத்தட்ட 2.51 கோடி அளவிலான கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற புகார்கள் வருவது இது முதல் முறை அல்ல. பீகார், உ.பி.யில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மாதம் பீகாரின் முசாபர்பூர் மற்றும் ஷேக்புரா மாவட்டங்களில் இறந்தவர்கள் இரண்டாவது டோஸ்களைப் பெற்றுள்ளனர் என்ற குறுஞ்செய்திகள் வந்துள்ளன.
உ.பியில் உள்ள காசியாபாத்தில் மே 2021-ல் இறந்த 78 வயது முதியவரின் குடும்பத்திற்கு அக்டோபர் 18 அன்று அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றதாக குறுஞ்செய்தி வந்தது.
மற்றவர்கள் கூட இதுபோன்ற அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். உதாரணமாக, கடந்த அக்டோபர் 16 அன்று,  முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்ட பிறகு இறந்த ஒருவரின் தொலைபேசி எண்ணிற்கு ஆறுமாதங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸையும் அவர் பெற்றுக்கொண்டதாக குறுஞ்செய்தி வந்தது. இறந்தவரின் மகன் வினோத் அஹ்லாவத் இதனை பொதுவெளியில் தெரிவித்து, தடுப்பூசிக்கான சான்றிதழை சொர்க்கத்திற்கு அனுப்ப உதவும்படி கேட்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
மோடி அரசின் ஒருநாளில் ஒருகோடி தடுப்பூசி என்ற பல்வேறு பித்தலாட்டங்களை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். அப்போதும் தடுப்பூசி போடாதவர்கள், இறந்தவர்கள் என பலருக்கும் இஸ்டம் போல தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டியது அம்பலமாகியது. அம்பலமான பின்னும் இந்த மோசடி முறையில் போலிக் கணக்கு காட்டுவதை நிறுத்த மோடிக்கு மனம் வரவில்லை போலும் !
சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க