வெறுப்பு அரசியலை நிறுத்த மோடிக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !

அரசு என்பது ஆளும் வர்க்கத்தில் வன்முறை கருவி அதாவது, இந்த பாசிச மோடி அரசு ஜனநாயகத்தை கிஞ்சித்தும் மக்களுக்கு அளிக்க விரும்பாத அரசு.

0
சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள், வெறுப்பு பேச்சுக்கள் சமீப காலங்கலாக அதிகரித்து வருகிறது. “நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பெரும்பான்மையினருக்கு (இந்து மதவெறியர்களுக்கு) ஆதரவாக மாற்றப்படுவதை” பிரதிநிதித்துவப் படுத்துவதாக 100-க்கும் மேற்பட்ட முன்னாள் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு மோடி அரசும் முழுஆதரவாக செயல்படுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னாள் அரசு ஊழியர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், நாட்டில் தற்போது அரங்கேற்றப்படும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியல், அரசியலமைப்பையும் தாக்குவதாக கூறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில், டெல்லி முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் டி.கே.ஏ. நாயர் உள்ளிட்ட 108 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அசாம், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற பல பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான “வெறுப்பு வன்முறை” கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
படிக்க :
நியூஜே முகநூல் மூலம் தேர்தல்களின்போது பாஜகவிற்கு ஆதரவாக வெறுப்பு பிரச்சாரம் செய்த ரிலையன்ஸ் !
‘குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுப்புங்கள்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவிகள் !
நாடு முழுவதும் இந்துமதவெறிர்கள் கலவர சூழ்நிலைமைகளை உருவாக்கி, அதில் கல்லெறிந்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட சிறுபான்மை முஸ்லீம் மக்களின் வீடுகள் புல்டோசரால் இடித்து தள்ளப்பட்ட இந்த சூழ்நிலையில் தான் வந்துள்ளது இந்த கடிதம்.
இந்துமதவெறி கலவரங்கள், வெறுப்பு அரசியல் ஆகியவை அமைத்தும் பல ஆண்டுகளாக நடத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக புதிய இயல்புநிலையை அடைந்து வருகிறது. மிகவும் ஆபத்தானது என்னவென்றால், நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பெரும்பான்மைவாத (இந்துத்துவ) சக்திகளுக்கு அடிபணியச் செய்வதுதான். இதில் மோடி அரசு முழுமையான உடந்தையாக இருப்பதாகத் தோன்றுகிறது” “இத்தகைய அச்சுருத்தலுக்கு எதிரான உங்கள் மௌனம், காது கேளாதது போல் உள்ளது. ஆனாலும், பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அந்தக் கடிதம் கூறுகிறது.
சட்ட நிர்வாகம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கான கருவியாக இருப்பதற்குப் பதிலாக சிறுபான்மையினரை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்கும் வழிமுறையாக மாறியுள்ளது என்று கடித்தத்தில் குறிப்பிடுகிறார்கள் முன்னாள் அரசு அதிகாரிகள். சட்டத்திற்குட்பட்ட உங்கள் வேதனை நியாயமானதாக இருப்பினும் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை மோடியிடம் கெஞ்சிக் கேட்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
அரசு என்பது ஆளும் வர்க்கத்தில் வன்முறை கருவி அதாவது, இந்த பாசிச மோடி அரசு ஜனநாயகத்தை கிஞ்சித்தும் மக்களுக்கு அளிக்க விரும்பாத அரசு. இதில் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், விமர்சன சுதந்திரம் அனைத்து படிபடியாக பறிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் போராடிப் பெற்ற உரிமைகள் நசுக்கப்பட்டு வருகிறது. கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மேலும், முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அரச வன்முறையாக புதிய பரிணாமத்தை எடுத்து வருகிறது.
முன்னாள் அரசு அதிகாரிகளே மோடியை எச்சரிக்கும் அளவிற்கு பாசிசம் வெறியாட்டம் பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது அரங்கேறி வருகிறது என்றால், இந்த காவி  – கார்ப்பரேட் பாசிசம் நாடு முழுவதும் அறங்கேற்றப்படும் நாள் வெகுதொலையில் இல்லை. உழைக்கும் மக்கள் படை கட்டி பாசிசத்தை வீழ்த்துவதே நமது முதல் கடமை.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க