ந்துராஷ்டிரம் அமைக்க இந்துக்கள் அனைவரும் நான்கு குழந்தைகளை பெற்று அதில் இரண்டு குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுப்புமாறு பெண் சாமியார் சாத்வி ரிதாம்பரா கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பெண் சாமியாராக வலம் வருபவர் சாத்வி ரிதாம்பரா. சங் பரிவார கும்பலின் தீவிர செயல்பாட்டாளரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லக்னோவில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் குறைந்தது நான்கு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதில், இரண்டு குழந்தைகளை இந்தியாவில் இந்துராஷ்டிரம் அமைக்க ஆர்.எஸ்.எஸ் போன்ற சங் பரிவார அமைப்புகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் பயிற்சி பெற வைக்க வேண்டும் என்று கூறினார்.
படிக்க :
♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
♦ அமித்ஷா கருத்தை விமர்சித்த மணிப்பூர் வழக்கறிஞர் மீது தேசத்துரோக வழக்கு!
அனுமன் ஜெயந்தி அன்று டெல்லி ஜஹங்கீர்புரியில் நடந்த கலவரம் குறித்து அவர் பேசும்போது நமது பாரத நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த முன்னேற்றத்தை விரும்பாதவர்கள்தான் அனுமன் ஜெயந்தி அன்று டெல்லியில் மிகப்பெரிய கலவரத்தை திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள். இதுபோன்ற அரசியல் பயங்கரவாதத்தை நாட்டில் ஏற்படுத்தி இந்து சமுதாயத்தை பிளவுப்படுத்த சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் தவிடுபொடியாக்கப்படுவார்கள் என்று காவி பயங்கரவாதிகளுக்குரிய திமிர் தனத்தோடு பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத் தஸ்னா கோயிலின் தலைமை சாமியார் நரசிங்கானந்தும் இதே கருத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியாவில் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம் அமைக்கப்படும் என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, விஷ்வ இந்து பரிஷத் போன்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் இதுபோன்ற கருத்தை தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இந்துக்கள் அனைவரும் நான்கு குழந்தைகளை பெற்று அதில் இரண்டு குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுப்புமாறு கூறிய பெண் சாமியார் சாத்வி ரிதாம்பரா
ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புங்கள் என்று கூறும் இவர்களின் நோக்கம், அந்த குழந்தைகளை சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கு எதிராக இந்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான். இவர்கள் கூறும் நாடு என்பது அனைத்து சமூக மக்களை உள்ளடக்கிய இந்திய நாட்டை அல்ல. மனுதர்மம் சட்டமாக இருக்கும் இந்துராஷ்டிரத்தை கொண்ட இந்தியாவைத்தான்.
பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், ஷாகின்பாக், உன்னாவ் தாக்குதல்கள், மாட்டுக்கறி வைத்திருந்தவர்களை படுகொலை செய்வது, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபவர்கள், அறிவியல் கருத்துக்களை பேசுபவர்கள், பா.ஜ.க அரசிற்கு எதிராக பேசுபவர்கள், மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை படுகொலை செய்வது போன்ற செயல்களைதான் இந்த காவி கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது.
பல்வேறு ஜிகாத் என்ற பெயரில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காவி கும்பல் செய்து வருகின்றனர். இதேபோல் சிறுபான்மையினர் மற்றும் தலித் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது போன்றவை சங் பரிவார கும்பலின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று. இதுபோன்ற கொடூரங்களை தொடர்ந்து செய்யவும், மேலும் தீவிரப்படுத்தவும்தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புங்கள் என்று சார்மியார்கள், இந்துத்துவ அமைப்பின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
2024–ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் உரிமைகள் பறிப்பு, கலவரம், படுகொலைகள், கூட்டு பாலியல் வன்கொடுமைகள், அரசின் அதிதீவிர அடக்குமுறைகள் எல்லாம் அதிகரிக்கும். அதுபோன்ற கொடூரங்களை செய்ய இவர்களுக்கு ஆட்கள் தேவை. அதற்காகவே இந்த காலிகளின் வேண்டுகோள்கள்.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க