த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் ஓர் நிகழ்ச்சியின்போது “இந்திய நிலப்பரப்பிற்கு” ​​எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும், இம்பாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சனோஜம் ஷியாம்சரண் சிங்-ஐ மணிப்பூர் போலீசுத்துறையால் ஏப்ரல் 12 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் 10-ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்ற ஷாவின் அறிக்கையை விவாதித்த டி.வி சேனலின் நிகழ்ச்சியில் ஏப்ரல் 9-ம் தேதி நடந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் வழக்கறிஞர் சனோஜம் ஒருவர். அவர் ஷாவின் கூற்றுக்கு கடுமையாக விமர்சனைத்தை பதிவுசெய்துள்ளார்.

படிக்க :

காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !

இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !

புகாரின்படி, வழக்கறிஞர் “மெயின்லேண்ட் இந்தியன்” என்பதை தவறாக பயன்படுத்தியது மட்டுமல்லாமல், ஷாவிற்கு எதிராக “தவறான மற்றும் இழிவான” வார்த்தைகளையும் வழக்கறினர் சனோஜம் பயன்படுத்தினார் என்று கூறுகிறது. புகார்தாரர் மேலும் கூறுகையில், வழக்கறிஞர் வேண்டுமென்றே “இந்தியாவின் பிரதான நிலப்பகுதியின் இந்துக்களை” “மிருகங்கள்” என்றும் குறிப்பிட்டு “அவமானப்படுத்தினார்” மற்றும் “இழிவுபடுத்தினார்” என்றும், மற்ற குழு உறுப்பினர்கள் அவரை தடுத்தப் போதிலும் தொடர்ந்து கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்” என்று கூறுகிறது.
வழக்கறிஞர் சனோஜம் ஷியாம்சரண் சிங்
“குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பு, அவமதிப்பு மற்றும் அப்பாவி பொதுமக்களை உணர்வுகளை தூண்டிவிடுவது மற்றும் மணிப்பூரி இந்துக்கள் உட்பட இந்தியாவின் பிரதான நிலப்பகுதியின் இந்துக்களின் மத நம்பிக்கையின் மத உணர்வுகளை தூண்டி விடுவதையே நோக்கம் கொண்டது” என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் 12 அன்று மாலை சிங் கைது செய்யப்பட்டு இம்பால் போலீசு நிலையத்தில் அடைக்கப்பட்டர். வழக்கறிஞர் சனோஜம் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A (தேசத்துரோகம்), 295A (தீங்கிழைக்கும் செயல்கள், மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம்), 505 (பொது தீங்கு) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது.
இம்பாலில் இருக்கும் மணிப்பூர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சட்டப் பிரிவின் துணைத் தலைவரும் வழக்கறிஞர் ரவி கான், “ஏப்ரல் 12-ம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் இம்பால் வெஸ்டில் உள்ள டியூட்டி மாஜிஸ்திரேட் முன் சனு ஆஜர்படுத்தப்பட்டார். அவரது கைத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒன்றைரை மணி நேரம் வாதங்களை கேட்ட பிறகு இரவு 10 மணியளவில் மாஜிஸ்திரேட் அவருக்கு ஜாமீன் வழங்கினார். இந்த வழக்கு தொடரும் என்றும் அடுத்த ஏப்ரல் 27-ம் தேதி கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் சனூவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கான் கூறினார்.
ஷாவுக்கு எதிராக சானோ என்ன கூறினார் என்று கேட்டதற்கு, கான், “வடகிழக்கில் 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்காக அவர் கடுமையாக விமர்சித்தார். ஷாவை ஒரு தாடி குரங்குடன் ஒப்பிட்டார்” என்று கூறினார்.

படிக்க :

இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !

கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக விவசாயிகளை கொலை செய்யும் கெயில் நிறுவனம் !

வடகிழக்கு முழுவதும், பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்தியை திணிக்கும் வகையிலான அமித்ஷாவின் கருத்துக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. ஷாவின் கருத்துக்கு எதிர் விமர்சனம் வைத்தை வழக்கறிஞர் மீது தேசத்துரோக வழக்கும் பாய்கிறது என்றால், இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலே அன்றி வேறென்ன…
மோடி, ஷா போன்ற பாசிச கும்பலின் தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களை விமர்சித்தால் கைது, சிறை, சித்திரவதை கொலை என எதுவேண்டுமானாலும் நடக்கும். ஆர்.எஸ்.எஸ் – பாஜக உள்ளிட்ட சங் பரிவார கும்பல் ஜனநாயக விரோத செயல்களை தனது ஆட்சியில் மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகிறது என்பதற்கு மணிப்பூர் வழக்கறிஞர் மீதான தேசத்துரோக வழக்கு ஓர் துலக்கமான சான்று.

காளி
செய்தி ஆதாரம் : the wire, thefrontiermanipur, indianexpress

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க