2050 ஆண்டிற்குள் கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் – IPCC அறிக்கை !

எங்கள் நாடுகளை நவீனமயமாக்க போகிறோம் என்று கூறிக்கொண்டு உலகையே சுடுகாடாக்கி கொண்டிருக்கிறார்கள் இந்த கார்ப்பரேட் முதலாளிகள்.

0
2050-ம் ஆண்டிற்குள் கடல் ஓரமாக இருக்கும் பெரு நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என RMSI என்ற நொய்டாவை தளமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம் மற்றும் IPCC இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்திலுள்ள புதிய கடற்கரை மற்றும் அதிக அறையுடன் கூடிய கடற்கரை காரணமாக 349 மற்றும் 387 கட்டிடங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 2050-ல் உயரும் கடல் மட்டத்தின் காரணமாக திருவனந்தபுரம் மட்டுமில்லாமல் கொச்சி, மும்பை, சென்னை, மங்களூர் போன்ற நகரங்களும் நீரில் மூழ்கி விடும் அபாயம் உள்ளது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன நகரங்களிலுள்ள நட்சத்திரத்தை விமான நிலையம் – வலியத்துரா சாலை, லானா சாலை மற்றும் கோவா ப்லம் கடற்கரை சாலை ஆகிய பகுதிகளும் நீரில் முழுக்க கூடும். அத்துடன் கொச்சிக்கு அருகிலுள்ள செல்லனம் கிராமத்தில் கடல் ஊடுருவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
படிக்க :
♦ இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !
♦ ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
கடல் மட்டத்தின் உயர்வானது 1874-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை 1.06 மிமீ – 1.75 மிமீ என்ற விகிதத்தில் இருந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக 3.3 மிமீ வேகத்திலும் உயர்ந்து வருகிறது. வட இந்தியப் பெருங்கடலின் கடல் மட்ட உயர்வு மற்றும் வெள்ளப் பெருக்கினால் இந்த இடத்தில் உள்ள கட்டிடங்கள் நீரில் மூழ்கக் கூடும் என RMSI-ன் தமிழ் மூத்த துணைத்தலைவர் புஷ்பேந்திர ஜோஹரி இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பகுப்பாய்வு படி கொச்சியில் சாத்தியமான கடல் மட்ட உயர்வால் 464 கட்டிடங்கள் பாதிக்கப்படும் எனவும் கடல் மட்ட உயர்வு மற்றும் உயர் அலைகளை கருத்தில் கொண்டு 1502 கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதில் 91 சதவீத குடியிருப்புகள், 6 சதவீத வணிகம், 2 சதவீத துறைமுகங்கள் அங்குள்ள படகுகள் பாதிக்கப்படக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இன்று பல விவசாய நிலங்களையும் காடுகளையும் சூறையாடி நிறுவன மயமாக்கி கொண்டிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் தான் இதற்கு காரணம்.
வாகனங்களாலும் தொழிற்சாலைகளாலும் விமான போக்குவரத்தாலும் ஏற்படும் கார்பன் உமிழ்வின் காரணமாக புவி அதிக வெப்பமடைகிறது. இதன் நீட்சிதான் மேற்சொன்ன விளைவு. ஆக எங்கள் நாடுகளை நவீனமயமாக்க போகிறோம் என்று கூறிக்கொண்டு உலகையே சுடுகாடாக்கி கொண்டிருக்கிறார்கள் இந்த கார்ப்பரேட் முதலாளிகள்.


தேன்மொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க