ர்நாடகாவைச் சேர்ந்த பல அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் மாநிலத்தில் நடந்து வரும் கல்வி “காவிமயமாக்கலுக்கு” எதிர்ப்பு தெரிவித்து, மாநில அரசுக் குழுக்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சமூக அறிவியல் மற்றும் மொழிப் பாடப் புத்தகங்களை ஆய்வு செய்வதற்காக 2020-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான மறுசீரமைப்புக் குழு, சமீபத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்களையும், 1-ம் வகுப்பு முதல் கன்னட மொழி பாடப் புத்தகங்களையும் திருத்தியது. புரட்சியாளர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், மைசூர் ஆட்சியாளர் திப்புசுல்தான், லிங்காயத் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா, திராவிட இயக்க முன்னோடி பெரியார் மற்றும் சீர்திருத்தவாதி நாராயண குரு ஆகியோரின் அத்தியாயங்கள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரின் உரை 10-ம் வகுப்பு திருத்தப்பட்ட கன்னட பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
படிக்க :
♦ கர்நாடகா : 10-ம் வகுப்பு பாடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரை புகுத்தும் காவிகள் !
♦ கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !
எழுத்தாளர்கள் எஸ்.ஜி சித்தராமையா, ராஷ்ட்ரகவி டாக்டர் ஜி.எஸ்.சிவருத்ரப்பா பிரதிஷ்டானாவின் தலைவராக இருந்தவர்; எச்.எஸ். ராகவேந்திர ராவ், நடராஜ புடாலு மற்றும் சந்திரசேகர் நங்லி ஆகியோர் தாங்கள் வகித்த பல்வேறு பதவிகளை ராஜினாமா செய்வதாக மே 30 அன்று முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
“மாநிலத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் அரசியல் துறைகளில் சமீபத்திய அரசியலமைப்பு விரோத தாக்குதல் மற்றும் ஒடுக்குமுறை எங்களை கவலையடையச் செய்துள்ளது. அரசு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் வகுப்புவாத வெறுப்பை வெளிப்படையாகத் தூண்டி வருபவர்கள் மீது பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எங்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த செயல்பாடு எங்களை அச்சமடைய செய்கிறது” என்று அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியாளர் வி.பி. நிரஞ்சனாராதியா, “மாநில அரசு கல்வியை வகுப்புவாதமாக்கி, காவிமயமாக்கி வருகிறது, இந்த செயல்பாட்டில், பாடத்திட்டக் கட்டமைப்பு, அரசியலமைப்பு மற்றும் கல்விக் கொள்கை எதுவும் பின்பற்றப்படவில்லை. இந்த பயிற்சி மற்றும் நான் அழைக்கப்பட்ட நிகழ்ச்சி இரண்டும் கல்வி அமைச்சரால் வழிநடத்தப்படுவதால், நான் அதைப் புறக்கணிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பல மாணவர் குழுக்களும் இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இரண்டு முக்கிய கன்னட எழுத்தாளர்கள் – தேவனூரா மகாதேவா மற்றும் ஜி. ராமகிருஷ்ணா – கர்நாடகாவில் பள்ளிக் கல்வி காவிமயமாக்கப்படுவதைக் கண்டித்து, பாடப்புத்தகங்கள் தங்கள் எழுத்துக்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை ரத்து செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மகாதேவாவும் ராமகிருஷ்ணனும் இரண்டு தனித்தனியாக தங்கள் முடிவை விளக்கி, பாடப்புத்தகத்தை மறுஆய்வு செய்யும் முறையை ‘ஜனநாயக விரோதம்’ மற்றும் ‘நெறிமுறையற்றது’ என்று அழைத்தனர்.
“பள்ளி பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்ட விதம் மிகவும் நெறிமுறையற்றது. கல்வி என்பது மோசமான அரசியலுக்கு இலக்காகி குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கிறது” என்று ராமகிருஷ்ணா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

படிக்க :

♦ தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்

♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு

அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள், பெண்கள் அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மே 31-ம் தேதி கல்வியில் ‘காவிமயமாக்கலுக்கு’ எதிராக மாநில அளவிலான போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளன.
கர்நாடக கல்வி துறையில் காவிகளின் புராணக்குப்பைகள் அரசால் திணிக்கப்பட்டு வருகிறது. முற்போக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் அரசு குழுக்களில் இருந்து ராஜினாமா செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். கல்வியில் புகுத்தப்படும் காவிக்கொள்கைக்கு எதிரகாவும், முற்போக்கு பாடங்களை நீக்குவதற்கு எதிராகவும் பெற்றோர்கள் – ஆசிரியர்கள் – மாணவர்கள் ஓர் அணியாக திரண்டு மாபெரும் போராட்டத்தை கட்டியமைக்க வேண்டியது அவசியம்.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க