உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவில் பெண்கள் தங்களது அடிப்படை உரிமைகளான கருக்கலைப்பு சட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெண்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவில் சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த சட்டப்பூர்வ கருக்கலைப்பு உரிமை என்பது தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பால் பறிபோய் உள்ளது. அமெரிக்காவில் உள்ள மாகாணங்கள் தனித்தனியாக கருக்கலைப்பு தொடர்பாக விதிமுறைகளையும் சட்டங்களையும் இயற்றிக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1973-ம் ஆண்டு வெயிட் என்பவர் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அமெரிக்க அரசியல் சாசனத்தின் பதினாறு திருத்தத்தின்படி கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனடிப்படையில் அமெரிக்காவில் கருக்கலைப்பு என்பது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
படிக்க :
♦ இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1
♦ இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள மிசிபிசி மாகாண அரசு கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்றியது. அந்த சட்டத்தின்படி, கருவுற்ற ஒரு பெண் 15 வாரங்களுக்கு அதாவது கிட்டத்தட்ட 4 மாதத்திற்கு பிறகு கருக்கலைப்பு செய்வது தடை செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாகாணத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் பெண்கள் அமைப்பு சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மிசிபிசி மாகாண அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மிசிபிசி மாகாண அரசு இயற்றிய சட்டம் என்பது ரோஸ் – வெஸ்ட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்றும் எனவே இந்த சட்டத்தை தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பின் வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் ஜூன் 25-ம் தேதி மிசிபிசி மாகாண அரசு இயற்றிய செல்லும் என்று கூறியது. மேலும், அந்தந்த மாகாணங்கள் கருக்கலைப்பு குறித்தான விதிமுறைகளையும் சட்டங்களையும் இயற்றிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் மாகாண அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 13 மாகாணங்கள் ஏற்கனவே கருக்கலைப்புக்கு தடை விதித்து சட்டங்களை இயற்றியுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அந்த 13 சட்டங்களும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. மேலும், 13 மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்து சட்டம் இயற்றும் நிலையும் உருவாகியுள்ளது. கர்ப்பிணி பெண்ணு மரணம் ஏற்படும் தருவாயில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் என்றும் அதற்கும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவர்களின் ஒப்புதல் வேண்டுமென்று மிசிபிசி மாகாண அரசு இயற்றிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து பெண்கள் தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த தீர்ப்பு என்பது பெண்களை வெறும் குழந்தையை சுமக்கும் இயந்திரமாக மாற்றும் என்றும் பெண்களின் நலன்களிலோ அல்லது அவர்களது உரிமைகளிலோ இந்த அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் எந்த அக்கறையும் இல்லை என்பது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று போராடும் பெண்கள் குற்றம் சாட்சி வருகின்றனர்.
அமெரிக்காவில் உடலுறவு மற்றும் இல்லற வாழ்க்கையை சுதந்திரமாக மாற்றிய காலம் மாறி ஒரு கட்டாயத்தின் பேரிலும் நிர்பந்தத்தின் பெயரிலும் இல்லறவாழ்க்கையை உறுதி செய்து, பெண்களின் சுதந்திரத்தை முழுமையாக பறித்து பெண்கள் என்பவர்கள் ஒரு அடிமை என்கிற ஒரு நிலையை இந்த சட்டம் உருவாக்கும் என்றும் போராட்டக்காரர்கள் கூறிவருகின்றனர்.
வாசிங்டன்னில் போராடிவரும் கல்லூரி மாணவி ஒருவர், தனது குழந்தையை பெற்றுக் கொள்ளும் உரிமையை கூட இந்த அமெரிக்க உச்சநீதிமன்றம் மறுக்கிறது. பெண்கள் குழந்தைகளை சுமப்பதற்காக படைக்கப்பட்டவர்கள் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது என்று கூறினார்.
இதேபோல், போராட்டக்களத்தில் இருக்கும் மூதாட்டி ஒருவர் கூறும்போது இந்த தீர்ப்பு பெண்களின் மீது தொடுக்கப்பட்ட உடல்ரீதியான மற்றும் உளவியல்ரீதியான மிகப்பெரிய போர் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண் கருவுறும் சூழல் ஏற்பட்டால் அதை கலைக்கும் உரிமையை கூட இந்த உச்ச நீதிமன்றம் தடுப்பதாக உள்ளது. இது பெண்களின் முழு சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் என்று உச்ச நீதிமன்றத்தின் மீது குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குடியரசு கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் இதில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மாகாணங்களிலும் உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாகவும் மாகாண ஆளுநர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், என்றார். மேலும் இந்த தீர்ப்பு இறுதியான தீர்ப்பு அல்ல என்றும் கூறியுள்ளார். தங்களது உரிமைக்காக போராடும் பெண்களிடம் தனது கட்சிக்கு வாக்களியுங்கள் அப்போதுதான் இதை தடுக்க முடியும் என்று ஒரு ஜனாதிபதி கூறுவது போராடும் பெண்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
படிக்க :
♦ இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !
♦ உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !
இந்த தீர்ப்புக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களில் பெண்கள் ஈடுபட போவதாகவும் கருக்கலைப்பு விவகாரத்தில் தங்களது உரிமையை நிலைநாட்ட போவதாகவும் கூறி களத்தில் இறங்கி பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பல்வேறு நாடுகளில் பெண்களின் கருக்கலைப்பு என்பது அவர்களின் உரிமை சார்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதேவேளையில் போலி கருக்கலைப்புகளையும் முழுமையாக தடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறனர்.
முதலாளித்துவம் கொஞ்சம் ஜனநாயகம் வழங்கியுள்ள அமெரிக்காவில் இந்தநிலை என்றால், பிற்போக்கு தனம் கொண்ட கோமாளிகள் கைகளில் சிக்கிக்கொண்ட இந்தியாவின் நிலை என்ன ஆகும்…?
வினோதன்