அருணாச்சலப்பிரதேசம்: மாட்டிறைச்சி என்று ஹோட்டல் பெயர்பலகையில் குறிப்பிடத் தடை!

அருணாச்சலப்பிரதேசத்தில் மாட்டுக்கறி என்று உணவகங்களில் பெயர் பலகை வைப்பது மதவுணர்வுகளை புண்படுத்துகிறது என்று கூறி, பொதுவான உணவு நடைமுறையை ஒழித்து கட்ட எத்தனிக்கிறது.

1

ருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் இட்டாநகர். இதன் மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் உள்ள அனைத்து “ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு” ‘மாட்டிறைச்சி’ என்ற வார்த்தையை கொண்ட பலகைகளை அகற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நஹர்லகுன் மாஜிஸ்திரேட் தாமோ தாதா ஜூலை 13 அன்று பிறப்பித்த உத்தரவில், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் பெயர் பலகைகளில் ‘மாட்டிறைச்சி’ என்ற வார்த்தை “சமூகத்தின் சில பிரிவினரின் உணர்வுகளை புண்படுத்தும் மற்றும் பல்வேறு குழுக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று கூறுகிறது.

எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட், இதுபோன்ற அனைத்து உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் அடையாள பலகைகளில் இருந்து இந்த வார்த்தையை அகற்றுமாறு உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றத் தவறினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அந்த ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த உத்தரவுக்கு பதிலளித்த அருணாச்சல கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் டோகோ டெக்கி இந்த உத்தரவு தேவையற்றது என்று கூறினார்.


படிக்க : மாட்டிறைச்சி தடையால் காலாண்டில் இறைச்சி விலை 45% உயர்வு !


முந்தைய காலங்களில், இட்டாநகர் முனிசிபல் கார்ப்பரேஷன் (IMC) வங்கி தினாலி சுரங்கப்பாதையில் சர்ச்சைக்குரிய பெயர் பலகை ஒன்றை வைத்தது. அது இட்டாநகரை ‘வடகிழக்கு இந்தி தலைநகரம்’ என்று விவரித்தது. இந்த செயல்பாடு சமூக ஊடகங்களில் பரவலாக ட்ரோல் செய்யப்பட்டதை அடுத்து, பெயர் பலகையை மாற்ற வேண்டிய கட்டாயம் IMC தள்ளப்பட்டது.

பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் நாட்டின் சில பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. இதற்கு எதிராக நாட்டில் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புகள் – போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆளும் பாஜக “முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து அவர்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற முயற்சிக்கிறது”என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இப்போது சில ஆண்டுகளாக, அருணாச்சலத்தின் தவாங் பகுதியில் உள்ளூர் மக்களில் ஒரு பகுதியினரால் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அந்த கடைகளை தங்கள் பகுதிகளில் ‘வெளியாட்கள்’ நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. பல சமயங்களில், வெளியூர்களில் இருந்து உள்ளூர்வாசிகள் கொண்டு வந்த மாட்டிறைச்சிக்காக, உள்ளூர் குடிமக்கள் அமைப்புகளால் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது பொதுவான நடைமுறையாகும். இட்டாநகர் முழுவதும் ‘மாட்டிறைச்சி ஹோட்டல்’ என்று குறிப்பிடும் பலகைகள் பொதுவாகவே நடைமுறையில் இருந்து வருகிறது.

மாட்டிறைச்சி உண்பதை எதிர்க்கும் வடகிழக்கில் பாஜகவின் சித்தாரந்த அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மிக முக்கியமான – மிகவும் ஆழமான ஊடுருவல் மாநிலத்திலும் உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தனது பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல், அம்மாநிலங்களில் சிறப்பு தன்மைகளை அழித்து ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் நிகழ்ச்சி நிரலை திணித்து வருகிறது. அதற்கு ஓர் நல்ல உதாரணம் இலட்சத்தீவுகள் பகுதி. அங்கு அம்மக்களின் கலாச்சாரத்தில் பெருவாரியான மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக முஸ்லீம் மக்களை ஒடுக்கவே இவற்றை செய்துள்ளது. மேலும் மதுவிலக்கு இருந்த அப்பகுதியில் மதுவிலக்கை தளர்த்தியுள்ளது. இதுபோன்று இன்னும் என்னென்ற வகையில் திருத்தங்களை செய்து வருகிறது.

தற்போது வடகிழக்கும் மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக அரசு படையை கொண்டு பழங்குடி மக்களை ஒடுக்கி வருகிறது. மேலும் அருணாச்சலப்பிரதேசத்தில் மாட்டுக்கறி என்று உணவகங்களில் பெயர் பலகை வைப்பது மதவுணர்வுகளை புண்படுத்துகிறது என்று கூறி, பொதுவான உணவு நடைமுறையை ஒழித்து கட்ட எத்தனிக்கிறது. எனவே, பெருவாரியான மக்களின் உணவு முறையின் மீது தாக்குதல் தொடுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் இந்த பாசிச நடவடிக்கைகளை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியது அவசியம்.


காளி

1 மறுமொழி

  1. மாட்டிறைச்சி என பெயர் பலகை வைக்கக்கூட தடை விதிக்கிறது என்றால்… உத்தரவிட்டது சங்கிகளின் கூட்டம்தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க