விபச்சார விடுதி நடத்திய மேகாலயா பாஜக துணைத் தலைவர் மரக் – குற்றவாளிகளின் கூடாரம்தான் பாஜக !

2000 ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து இப்போது கலைக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான அச்சிக் தேசிய தன்னார்வ கவுன்சிலின் தலைவரான மரக் மீது 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.

0

ஜூலை 23 அன்று துராவில் பாரதிய ஜனதா கட்சியின் மேகாலயா துணைத் தலைவர் பெர்னார்ட் என்.மரக் நடத்தி விபச்சார விடுதியில் இருந்து 6 குழந்தைகள் மீட்கப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசு தெரிவித்துள்ளது.

“மரக்கிற்கு சொந்தமான ரிம்பு பாகன் பண்ணை வீட்டில் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. பெர்னார்ட் என்.மரக் மற்றும் அவரது கூட்டாளிகள் விபச்சாரத்திற்காக நடத்தும் ரிம்பு பாகனில் உள்ள சுகாதாரமற்ற அறைகளுக்குள் பூட்டப்பட்டிருந்த ஆறு சிறார்களை – நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகளை நாங்கள் மீட்டுள்ளோம்” என்று மேற்கு கரோ ஹில்ஸ் போலீசுத்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த் சிங் கூறினார்.

சோதனையில், 27 வாகனங்கள், எட்டு இருசக்கர வாகனங்கள், சுமார் 400 மதுபாட்டில்கள், 500-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஆணுறைகள், குறுக்கு வில் மற்றும் அம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. 73 பேர் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். பண்ணை வீட்டில் 30 சிறிய அறைகள் இருந்தன.

மேகாலயா போலீசுத்துறை தலைமை இயக்குநர் எல்.ஆர்.பிஷ்னோய், பிப்ரவரியில் ரிம்பு பாகனில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் தொடர்ச்சிதான் இந்த சோதனை என்று கூறினார்.


படிக்க : உ.பி : 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசு !


தன்னையும் தனது தோழியையும் மரக் ரிம்பு பாகனுக்கு அழைத்துச் சென்றதாக பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஒரு வாரத்தில் சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்பது உறுதி செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 366A, 376, மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரோ பழங்குடியின தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான மரக், “முதலமைச்சர் தனது தெற்கு துரா தொகுதியை பாஜக கைப்பற்றவிறுப்பதை அறிந்ததால் விரக்தியடைந்துள்ளார். எனது பண்ணை வீட்டில் நடந்த சோதனையானது எனது இமேஜை கெடுக்க அவர் மேற்கொண்ட அவநம்பிக்கையான முயற்சி மற்றும் அரசியல் பழிவாங்கும் முயற்சியாகும்” என்று கூறினார்.

***

2014-ல் பிஜேபியில் சேர்வதற்கு முன்பு, மரக் ஆச்சிக் நேஷனல் வாலண்டியர் கவுன்சிலில் (ANVC) உறுப்பினராக இருந்தார். இந்த தடைசெய்யப்பட்ட குழுவானது “அச்சிக் லேண்ட்” என்று அழைக்கப்படும் கரோக்களுக்காக ஒரு தனி மாநிலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவின் மேற்கு காசி மலைகள் மாவட்டத்தின் கரோ மக்கள் வசிக்கும் பகுதிகளை ஒன்றிணைக்க ‘அச்சிக் லேண்ட்’திட்டமிடப்பட்டது.

டோரிக் மரக் என்ற மாற்றுப்பெயரால் அழைக்கப்பட்ட மரக் – 2012 வரை ANVC-ன் செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு அவர் பிரிந்த குழுவான ANVC-B இன் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இரண்டு காரோ போராளிக் குழுக்களும் – ANVC பின்னர் திலாஷ் மராக்கின் தலைமையின் கீழ் மற்றும் ANVC-B பின்னர் பெர்னார்ட் மராக்கின் தலைமையின் கீழ் – 2014 இல், பிளவுக் குழு உருவாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுதங்களைக் கீழே போட்டன. இதைத் தொடர்ந்து மரக் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத் தலைவராக இருந்த மரக், 2017-ம் ஆண்டு மத்தியில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மாட்டிறைச்சி விருந்து’தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகினார்.

பெயர் வெளியிட விரும்பாத மாநில பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், மரக் 2019 இல் மீண்டும் கட்சியில் இணைந்து துராவிலிருந்து செயல்படத் தொடங்கினார். “அவர் ஒரு நல்ல கட்சி ஊழியர் மற்றும் கரோ மலைகளில் கட்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று உறுப்பினர் கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம், முதல்வர் கான்ராட் சங்மா மற்றும் அவரது சகோதரியும் துராவின் NPP எம்.பி.யுமான அகதா சங்மா ஆகியோரின் தொகுதிககள் மீது சில குற்றச்சாட்டுகளை மரக் முன்வைத்தார்.

முதலமைச்சரின் தெற்கு துரா தொகுதியிலும், அகதா சங்மாவின் சொந்த ஊரான துராவிலும் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதாக மரக் கூறியிருந்தார்.


படிக்க : இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் !


2021-ல் நடைபெற்ற கரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் துராவிலிருந்து மரக் வெற்றி பெற்றார். அதே ஆண்டில், 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2020-2023 காலத்திற்கான கரோ ஹில்ஸ் பிராந்தியத்தின் பிஜேபியின் கன்வீனராக நியமிக்கப்பட்டார்.

2000 ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து இப்போது கலைக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான அச்சிக் தேசிய தன்னார்வ கவுன்சிலின் தலைவரான மரக் மீது 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.

குற்றவாளிகளின் கூட்டாரம்தான் பாஜக என்பது இந்த மேகாலயா பாஜக துணைத்தலைவர் மரக் ஆல் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரவுடிகளும் பொறுக்கிகளும், ஊழல் பெரிச்சாளிகளும் அடைக்கலம் அடையும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கட்சி போன்ற சங் பரிவார கிரிமினல் கும்பலை அடித்துவிரட்டவேண்டியது அவசியம்.


காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க