உத்தரகாண்ட்: நீர் சடங்கு செய்ய அரசு ஊழியர்களுக்கு கட்டளையிடும் சங்கி அமைச்சர்!

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில், சிவன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்படுகிறது அரசு. அனைத்து ஊழியார்களும் கட்டாயம் வழிபாடு நடத்தி புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

0

த்தரகாண்ட் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா, அனைத்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் அவரது துறை ஊழியர்கள், அங்கன்வாடி மற்றும் மினி அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள சிவன் கோவில்களில் ‘ஜலாபிஷேக’ (நீர் சடங்கு) செய்ய வேண்டும். புகைப்படங்களை அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் – வாட்ஸ்அப் குழுக்களில் இடுக்கையிடவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

“கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவா’ திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஜலாபிஷேக’ பணியை நிறைவேற்ற வேண்டும். 2015 ஜனவரியில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டத்தின் கீழ் மஹோத்ஸவா கொண்டாடப்படுவதாகவும், இதன் ஒரு பகுதியாக, “முஜாய் பி ஜனம் லெனே தோ, ஷிவ் கே மஹ் மைன் சக்தி கா சங்கல்ப் ஹை” (நான் பிறக்கட்டும், இது சிவன் மாதத்தில் சக்தியின் தீர்மானம்) என்ற செய்தியுடன் ‘கன்வர் யாத்திரை’ திட்டமிடப்பட்டுள்ளது. அவரது அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்க வேண்டும்” என்றார் ஆர்யா.


படிக்க : உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !


உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் கரண் மஹாரா, “அரசு வேலையில் மதத்தை கலப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இம்மாநிலத்தில் இதற்குமுன் எந்த அமைச்சராலும் இதுபோன்ற அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. சிவபெருமான் சனாதன தர்மத்தின் சின்னம், அதன் மரபுகளின்படி வணங்கப்படுகிறார். எனவே அங்கன்வாடி பணியாளர்களை சிவலிங்கத்தின் மீது தண்ணீர் ஊற்றுவது மட்டுமின்றி, அவர்கள் செய்யும் புகைப்படங்களையும் வெளியிடுமாறு அமைச்சர் கூறியது தவறானது. இந்த ஆணை சனாதன மரபுகள், பெண்களின் உரிமைகள், பல்வேறு சாதிகளை மீறுகிறது” என்று கூறினார்.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான அகில இந்திய கூட்டமைப்பு (AIFAWH) ஆர்யாவின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறக் கோரி ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. இது “இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மையை மீறுகிறது. இந்த உத்தரவு ‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டத்தின்கீழ் வருகிறது” என்று குற்றம்சாட்டியது அறிக்கை. மேலும், “பிப்ரவரி முதல் நிலுவையில் உள்ள கூடுதல் ஊட்டச்சத்துக்கான ஊதியம் மற்றும் நிதியை “பேட்டிகளைக் காப்பாற்ற” வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

அந்த அறிக்கை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு மதப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் மற்றும் மாறுபட்ட நம்பிக்கை அமைப்புகளைக் கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடுகிறது.

உத்தரகாண்டில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஊதியம் மற்றும் கூடுதல் சத்துணவுக்கான நிதி ஆகியவை பிப்ரவரி, 2022 முதல் நிலுவையில் உள்ளது. அனைத்து நிலுவைத்தொகைகளையும் உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


படிக்க : உத்தரகாண்ட் பாஜக அலுவலகத்தில் சிறுமுதலாளி பிரகாஷ் பாண்டே தற்கொலை !


AIFAWH-ன் பொதுச் செயலாளர், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளுக்கு (ஐசிடிஎஸ்) மிகவும் தேவையான நிதி உதவியை வழங்குவதை விட, “பிரச்சாரத்தை” பரப்பியதற்காக பயன்படுத்துகிறது என்று சாடினார். மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்யாவின் உத்தரவை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில், சிவன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்படுகிறது அரசு. அனைத்து ஊழியார்களும் கட்டாயம் வழிபாடு நடத்தி புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இதன்மூலம் இது இந்துக்களுக்கான நாடு என்ற இந்துராஷ்டிரா திட்டத்தை தான் நடைமுறை படுத்துகிறது என்பதை நாம் உணரமுடிகிறது.


புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க