த்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் நபரை ‘லவ் ஜிஹாத்’ மற்றும் பாலியல் வன்கொடுகை வழக்கில் சிக்க வைக்க ஓர் நாடகம் அறங்கேற்றப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

டெல்லியை சார்ந்த ராதா(23) என்ற பெண்ணை இந்த செயலை செய்ய பாஜகவை சார்ந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் பணம் கொடுத்து பணியமர்த்தியுள்ளது. இது தொடர்பாக அப்பெண் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அமன் சௌஷான், ஆகாஷ் சோலங்கி ஆகிய இருவரும் தற்போது இடைக்கால ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

இளவரசர் குரேஷி என்ற ஒரு முஸ்லீம் நபர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும், பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் ராதா முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஜூலை 16 அன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376, 323, 506 ஆகியவற்றின் கீழ் குரேஷி மீது கஞ்சதுந்த்வாரா போலீசு வழக்கு பதிவு செய்தது. தான் செட்டப்செய்த ராதா என்ற பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த 200 உறுப்பினர்கள் காஸ்கஞ்சில் உள்ள கஞ்சதுந்த்வாரா போலீசு நிலையம் அருகே போலித்தனமான போராட்டம் நடத்தினர்.


படிக்க : ம.பி : தலித் சிறுமி பள்ளிக்கு செல்வதை தடுக்கும் ஆதிக்க சாதிவெறி!


குரேஷி மீது அளித்த பாலியல் வன்கொடுகை புகாரை வாப்ஸ் பெற்றுள்ளார் ராதா. தற்போது அமன் சௌஹான் மற்றும் ஆகாஷ் சோலங்கி ஆகிய இருவர் கும்பல்தான் தன்னை பாலியல் புகார் கொடுப்பதற்கான வேலையில் ஈடுபட வைத்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் ராதா. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 164-ன் கீழ் ராதாவின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டது.

“எங்கள் விசாரணையில் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக பெண் அளித்த அனைத்து விவரங்களும் தவறானவை என்று கண்டறியப்பட்டது. அவள் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல விரும்பவில்லை. அதன் பின்னரே அந்த பெண் தவறை ஒப்புக்கொண்டார். இரண்டு பேர் இதைச் செய்யச் சொன்னதாகக் கூறினார்” என்று காவல்துறை கண்காணிப்பாளர் பிபிஜிடிஎஸ் மூர்த்தி கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில், பெண்ணின் புகாரின் அடிப்படையில் முஸ்லீம் நபர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் கோரும் காட்சி.

3 பேர் மீதும் கிரிமினல் சதி செய்ததாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சௌஹான் மற்றும் சோலங்கி கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. பாஜகவின் இளைஞர் அணி தலைவர் அமன் சௌஹான் கட்சியில் இருந்து நீக்கப்பட்விட்டதாக பாஜகவின் காஸ்கஞ்ச் தலைவர் கேபி சிங் கூறியுள்ளார். மேலும் சோலங்கியை தனக்கு தெரியாது என்றும், இந்த வழக்குக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

முஸ்லீம் ஆண்கள் இந்துப் பெண்களை நியாயமற்ற வழிகளில் ‘கவர்ந்து’ இறுதியில் முஸ்லீம் மக்கள் தொகையை அதிகரிக்கிறார்கள் என்ற ஓர் கொச்சையான பொய் கதையை மையப்படுத்தி காவி பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட சொல்தான் ‘லவ் ஜிஹாத்’. 2020-ம் ஆண்டின் பிற்பகுதியில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘லவ் ஜிஹாத்’ என்று கூறப்படும் ஒரு சட்டத்தையே கொண்டு வந்தது யோகி தலைமையிலான பாஜக அரசு.


படிக்க : மோடி ஆட்சியில் அதிகரித்த பணமோசடி வழக்குகள்!


இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகள் கட்சி சார்புடையவை என்று பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் குறித்த தரவுகள் எதுவும் தன்னிடம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே கூறியுள்ளது.

போலியாக ஓர் குற்றத்தை உருவாக்கி அதற்கான சட்டத்தையே வடிவமைத்திருக்கிறார்கள் அரசாலும் காவி பயங்கரவாதிகள். தற்போது முன்விரோதம் காரணமாக குரேஷி என்ற முஸ்லீம் நபரை லவ் ஜிஹாத் செய்தவராகவும், பாலியல் வன்கொடுகை செய்தவராகவும் குற்றம் சுமத்த பாஜகவின் இரண்டு பேர்கொண்ட பயங்கரவாதிகள் குழு முயற்சித்துள்ளது. தான் செய்ய நினைக்கும் குற்றங்களை சட்டபூர்வமாகவே செய்து முடிக்க எத்தனிக்கிறார்கள் காவி பயங்கரவாதிகள். முஸ்லீம் சிறுபான்மை மக்கள் மீது என்னெற்ற அவதூறுகளை பரப்பி தாக்குதல் தொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் காவி பயங்கரவாதிகளை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டியது அவசியம்.


கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க