அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
வரும் செப்டம்பர்17-ஆம் தேதி சென்னையில் ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில், முற்போக்கு ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி நாம் மாநாடு நடத்தவிருக்கிறோம். இம்மாநாடு தொடர்பான அறிவிப்பு மற்றும் மாநாட்டிற்கான துண்டறிக்கையை நம் இணையத்தில் வெளியிட்டுள்ளோம்.
மாநாடு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசியல் கட்சி தலைவர்கள் & அமைப்புகளிடம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் சார்பில் துண்டறிக்கை வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது மாநாடு தொடர்பான மைய முழக்கத்தின் அடிப்படையில், இந்த மைய இயக்கம் தொடர்பாக விரிவாக விளக்கும் வகையில், வெளியீடு ஒன்றை அச்சிட்டு வெளியிட்டுள்ளோம்! படியுங்கள்! பரப்புங்கள்!
வெளியீடு நன்கொடை : ரூ.10
இந்த வெளியீட்டை வாங்கி படித்து ஆதரவு அளிக்குமாறு, கேட்டுக்கொள்கிறோம்.
சுவரெழுத்து விளம்பரம்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு :- 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.
மாநாட்டில் கலந்து கொண்டு பாசிசத்தை வீழ்த்தும் பணியில் இணைந்து செயல்பட அறைக்கூவி அழைக்கிறோம். நன்றி!