கொடூர குற்றவாளிக்கு ஒப்பாரியா? எலிசபத் ராணியின் உண்மை முகம் | மருது வீடியோ

எலிசபத் ராணிக்கு புகழாரம் சூட்டுவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை RED SEA என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

பொதுவாக யாராவது இறந்துவிட்டார்கள் என்றால், அவர் கடைந்தெடுத்த பிழைப்புவாதியாக இருப்பினும் அவருக்கு, மன்னவரே சின்னவரே என்று ஒப்பாரி பாடுவார்கள்.

ஜெயலலிதா இறப்பில் கூட, ஜெயலலிதாவை இதுவரை யார் கேவலமாக விமர்சனம் செய்தார்களோ, அவர்களில் பலபேர் அவரை இரும்பு மனிதர், அந்த அம்மா மாதிரி யாரேனும் இருக்க முடியுமா என்று கூறினார்கள்.

சோ ராமராமி எவ்வளவு இழிவானவர் என்றால், இங்கிருக்கக்கூடிய சனாதனத்தை – பார்ப்பனீயத்தை ஆதரித்து மீண்டும் ஒரு இந்துராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்று தீவிரமாக பேசியவர். அப்படிப்பட்ட சோ ராமராமி இறந்தபோது, மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார். அதையும் தாண்டி பலபேர் சென்று அவர் மிக சிறந்தவர், மிக சிறந்த ஆளுமை என்று பேசினார்கள்.

இவர்கள் போன்றோரை ஆளுமை என்று பேசுவதே தவறு. எலிசபத் ராணிக்கு என்ன யோக்கிதை இருக்கு…! அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் கூட 15 நாடுகளுக்கு ராணியாக இருந்துள்ளார். தற்போது இருப்பது ஒரு நாகரிக உலகம் என்று நாம் சொல்கிறோம். ஓர் முதலாளித்துவ அரசுமுறை வந்துவிட்டது. இப்போதும் கூட 15 நாடுகளுக்கு ராணியாக இருந்து ஒரு அம்மையார் சாகிறார்கள் என்றால் இதைவிட கேவலம் வேறு ஏதேனும் இருக்க முடியுமா?

பலபேர் அவர் சிறந்த ஆளுமை! எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் என்கிறார்கள். அவர் எதில் சிறந்து விளங்கினார்? இதற்கு பதில் தெரிந்தாக வேண்டும்.

செய்தி ஊடகங்களை திறந்தால் அந்த அம்மையார் இறந்த மூன்று நாட்களுக்கு புகழ் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய நாட்டிற்கு விடுதலையை கொடுத்தார் என்கிறார்கள். இதை சொல்வதற்கு குறைந்த பட்சம் சூடு சுரணை வேண்டுமல்லவா? அந்த அம்மையார் தானாக சுதந்திரம் கொடுத்து விட்டாரா? இங்கு யாரு போராடவில்லையா? பகத்சிங் சுகதேவ் ராஜகுரு போன்ற எத்தனையோ தியாகிகள் தங்கள் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றார்களே! அவை அனைத்தும் பொய்யா அது எல்லாம் நாடகமா?

இந்த அம்மையாருக்கு எதிராகத்தான் பகத்சிங், வ.உ.சி போன்ற அனைவரும் போராடினார்கள். இவரை தற்போது புனிதர் போல காட்டுவதற்கான அவசியம் என்ன? இந்த அம்மையாருக்கு புனிதர் பட்டம் சூட்டுபவர்கள் எல்லாம் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்!

எலிசபத் ராணிக்கு புகழாரம் சூட்டுவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை RED SEA என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

  1. “இந்த அம்மையாருக்கு எதிராகத்தான் பகத்சிங், வ.உ.சி போன்ற அனைவரும் போராடினார்கள்” அப்பொழுது இவுங்க வயசு 5 or 6 இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க