திமுக ஆ.ராசா மீதான தாக்குதல்!
தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் காவி பாசிஸ்ட்டுகளை முறியடிப்போம்!

தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்
செப்டம்பர் 29, 2022

♦ மனுதர்மத்தில் சூத்திரர், பஞ்சமர் என் மக்களை சாதி, தீண்டாமை சொல்லி இழிவுபடுத்தி வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்திய ஆ.ராசாவின் மீது பல்வேறு அவதூறு பொய் புரட்டுகளை கிளப்பி தாக்குதல் தொடுக்கும் இந்து முன்னணி பாசிஸ்ட்டுகள்.

♦ உழைக்கும் மக்களை சாதி ரீதியாக இழிவுபடுத்தி, விபச்சாரி மகன் என்று அழைத்தது ஆரிய பார்ப்பன வேதமே!

♦ பிரம்மனின் காலில் பிறந்தவன் சூத்திரன், அழுக்கில் பிறந்தவன் பஞ்சமன் என்றும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் இந்து சனாதன தர்மம் எனும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயம், இதுவே முதற்கடமை!

♦ பெரியார், வள்ளலார், சித்தர்கள் பலர் முன்னெடுத்த வேத எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு முழங்கிய தமிழக மரபினை உயர்த்திப் பிடிப்போம்!

♦ ஆரியத்தின் நான்கு வர்ணங்களுக்கு எதிராக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை படைத்தான் வள்ளுவன். “பறைச்சியாவது ஏதடா, பார்ப்பனத்தியாவது ஏதடா” என்றார்கள் சித்தர்கள். தமிழ்நாட்டில் வேதம் எப்போது திணிக்கப்பட்டதோ அன்று முதலே வேத எதிர்ப்பும் தொடங்கிவிட்டது.

♦ வேத, சனாதன, எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடித்த ஆ.ராசாவின் குரல் பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் கொண்ட தமிழ் மக்களின் குரல்தான்!

♦ ஆ.ராசாவிற்கு விடப்படும் மிரட்டல் தமிழ்நாட்டின் சுயமரியாதை பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்படும் சவாலாகும்.

♦ வேத எதிர்ப்பு பேசிய ஆ.ராசாவை சொந்த கட்சியே கைவிட்டாலும் தமிழினம் கைவிடாது என்பதை நிலைநாட்டுவோம்!

♦ இந்துமதவெறியை தூண்டி உழைக்கும் மக்களை துண்டாடவும், தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றவும் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி காவி பாசிஸ்ட்டுகளை விரட்டியடிப்போம்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு: 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க