சாமானிய மக்களை சாதி ரீதியாகவும் வர்ணங்களின் அடிப்படையிலும் இழிவுபடுத்தியது ஆரிய பார்ப்பன மதமே! ஆ.ராசா அல்ல!

இது வெறும் ஆ.ராசா-வின் தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுங்கி விட முடியாது; இது தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால்.

ந்து மத வேதம் மக்களை நான்கு வர்ணங்களாக்கி தலையில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன், அழுக்கில் பிறந்தவன் பஞ்சமர் என்றும் மக்களை இழிவுபடுத்தி வைத்தது இந்து மத மனுவே, இதை அம்பலப்படுத்தியதில் என்ன தவறு?

ஆ.ராசா சொல்வது பொய் என்று கூறலாமே ஏன் இழிவுபடுத்தினர் என்று சொல்கிறார்கள்?

இப்போது கலவரத்தை தூண்டுகிற பாசிச சக்திகள் ஆ.ராசா சொல்வது பொய் இந்து மதம் இதைதான் சொல்கிறது இதோ ஆதாரம் என்று அவர்கள் ஆதாரப்பூர்வமாக உண்மையை கூறலாமே?

தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, தேவதாசி முறை, ஆணவப் படுகொலை இந்த குற்றங்களை எல்லாம் சரி என்று கூறுவதே மனு சாஸ்திரம். இதெல்லாம் மனு சாஸ்திரம் கூறவில்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்!

யூதர்களுக்கு எதிராக நாசிக் கோட்பாட்டை ஹிட்லர் அறிமுகப்படுத்தினார். அதுபோல இங்கிருக்கும் உழைக்கும் மக்கள் மீது இந்துத்துவ கோட்பாட்டை அறிமுகப்படுத்துகிறது இந்து மத மனுஸ்மிருதி.

படிக்க : தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்

தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர் அதில் ஒன்று ‘வேசி மகன்’. (source: மனுஷ்ரிமிதி அத்.8 சு.415)

சூத்திரர்கள் மற்ற மூன்று உயர் சாதிகளுக்கும் சேவை செய்ய வேண்டும் அவர்களிடம் அடிமையாக இருக்க வேண்டும் (source: Aitreya Brahmana of the Rig Veda 1992).

பார்ப்பனிய எதிர்ப்பு, வேத எதிர்ப்பு என்பது தமிழகத்தின் மரபாகும் தமிழகத்தில் எப்பொழுது பார்ப்பனியம் காலூன்றியதோ அப்போதிலிருந்தே அதை எதிர்ப்பது வழக்கமாக ஆரம்பித்தது அதற்கு சான்றுதான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் குறள்.

இந்து மத நூலான மனுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தார் முடிந்தால் அவரை இந்துக்களுக்கு எதிரானவர் என்று கூறுங்கள் பார்ப்போம்?

அம்பேத்கர், பெரியார் மட்டுமல்ல சித்தர்கள் முதல் வள்ளலார் வரை அனைவரும் பார்ப்பனிய எதிர்ப்புடையவர்கள் இவர்களெல்லாம் இந்துக்களின் விரோதியா?

இந்த பாசிச கும்பல்களின் கடையடைப்பு முதல், கலவரங்கள், கையெழுத்து இயக்கம் (அதாவது மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும்) இப்பொழுது திருச்சியில் போடப்பட்டிருக்கும் தடை உத்தரவு வரை நமக்கு வெட்ட வெளிச்சமாக காட்டுவது என்னவென்றால் இந்த பாசிச கும்பல் தமிழ்நாட்டிலும் காலூன்றியுள்ளது என்பதுதான்.

இவை அனைத்தும் நடைமுறையில் எங்கே இருக்கிறது ஏன் இவர்கள் இல்லாததை சொல்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நம் கண் முன்னே தினந்தினம் தீண்டாமை கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் இரு பிள்ளைகளை கடைக்காரர் தின்பண்டங்களை தொடக்கூடாது என்று சொன்னது, கிராமங்களில் சேரி மக்களை கோவிலுக்கு உள்ளே விடாமல் தடுப்பது, இதெல்லாம் untouchability act-இன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்! ஆனால் “கோவில் கருவறைக்குள்ளே நீங்கள் போகக்கூடாது பிராமணர்களை தொடக்கூடாது” இவையெல்லாம் எந்த சட்டத்தின் கீழ் வரும்?

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

உழைக்கும் மக்களை நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன், இவர் இவர் இந்த வேலையை தான் செய்ய வேண்டும், அவர்களின் பிள்ளைகள் தான் படிக்க வேண்டும் என மனு நீதி, ஆகம விதி என்று வரையறுத்து மக்களை இழிவு படுத்துவது நீ(மனு ஸ்மிருதி, பார்ப்பனியம்)! ஆ.ராசா அல்ல!!

இது வெறும் ஆ.ராசா-வின் தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுங்கி விட முடியாது; இது தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால்.

எனவே, இந்த பாசிச கும்பல்களை விரட்டியடிக்க நாமும் பாசிச எதிர்ப்பு படையாய் களமிறங்க வேண்டியது அவசியமாகும்!!


ஆசாத்

1 மறுமொழி

  1. இனிமேல் பேசிப் பயனில்லை. அடி மேல் அடி வைக்க வேண்டியது தான். ஒண்ட வந்த பிடாரிகளிடம் தர்மம் எதிர்பார்ப்பதும் தப்பு. கருணை காட்டுவதும் தப்பு..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க