பாட்னா: கேள்வி கேட்ட மாணவிக்கு கீழ்த்தரமாக பதிலளித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாம்ரா!

உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உழைக்கும் மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த அரசு கட்டமைப்பே நமக்கு எதிரானது.

0

செப்டம்பர் 28 அன்று பாட்னாவில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்வில் பெண் மாணவர்களின் கேள்விக்கு பீகாரின் மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மூத்த அதிகாரி மிகவும் கீழ்தரமான முறையில் பதிலளித்துள்ளார்.

கார்ப்பரேஷன் மற்றும் யுனிசெஃப் ஏற்பாடு செய்த ‘சஷக்த் பேட்டி, சம்ரித் பீகார்’ என்ற நிகழ்ச்சியில், நடந்த இந்த மாணவிகள் கேள்விக்கு அதிகாரியின் திமிர் தனமான பேச்சின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானது.

***

கார்ப்பரேஷன் மற்றும் யுனிசெஃப் சார்பில் ஏற்பாடு செய்த ‘சஷக்த் பேட்டி, சம்ரித் பீகார்’ என்ற நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு பள்ளி உடை, கல்வி உதவித்தொகை, சைக்கிள் உள்ளிட்ட பல வசதிகளை அரசு செய்து தருகிறது. மாணவிகளுக்கு 20 முதல் 30 ரூபாய்க்கு சானிட்டரி பேட் வழங்க முடியாதா? என்று மாணவி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு அரங்கமே கைத்தட்டுவதை காணொலியில் காணலாம். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் பீகார் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கார்ப்பரேஷன் எம்.டி. ஹர்ஜோத் கவுர் பாம்ரா, “அனைவரும் இந்த கேள்விக்கு கைதட்டுகிறார்கள், ஆனால் இவை முடிவற்ற கோரிக்கைகள்” என்று கூறினார்.

படிக்க : கவுதம் நவ்லகாவின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கும் நீதிமன்றம்!

“இன்றைக்கு அரசு உங்களுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு சானிட்டரி பேட்களை தரவேண்டும் என்பீற்கள். பிறகு ஜீன்ஸ் பேன்ட் மற்றும் அழகான ஷூக்கள் கேட்கிறீர்கள், குடும்பக் கட்டுப்பாடு என்று வரும்போது, ​​நாளை, நீங்கள் நிரோத் (ஆணுறை) கேட்பீர்கள். நீங்கள் ஏன் அரசாங்கத்திடம் இருந்து அனைத்தையும் இலவசமாகப் பெற விரும்புகிறீர்கள்? அதன் அவசியம் என்ன?” என்ற மிகவும் கீழ்தரமான பேச்சை பேசினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாம்ரா.

அப்போது, ​​அரசு தங்களிடம் வாக்கு கேட்க வருகிறது என்றார் அந்த மாணவர். “இது முட்டாள்தனத்தின் உச்சம். வாக்களிக்காதீர்கள், பான் ஜாவோ பாகிஸ்தான் (பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்)” என்று கோபமாக பதிலளித்தார் பாம்ரா. அதற்கு பதிலளித்த மாணவி, தான் ஒரு இந்தியர் என்றும், எதற்காக பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றும் பதிலளித்தார்.

“வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்துதான் அரசு வசதிகளை செய்து கொடுக்கிறது. வரி செலுத்துவோர் அரசுக்கு வரி செலுத்தினால், அவர்கள் ஏன் சேவைகளை கோர மாட்டார்கள்?” என்று மாணவி கேள்வி எழுப்பினார்.

***

மக்கள் வரி பணத்தை சம்பளமாக வாங்கும் அரசு அதிகாரிகள் மக்களை எள்ளளவும் மதிப்பதில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஓர் துலக்கமான சான்று. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங் பரிவார கும்பல், தனக்கு எதிராக யார் கேள்வி யெழுப்பினாலும் “பாகிஸ்தானுக்கு போ” என்று கூறுவது போல, மாணவியின் கேள்விக்கு பதிலளிக்காமல் மாணவியிடம் சங்கித்தனமாக நடத்து கொண்டுள்ளார் பாம்ரா.

உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உழைக்கும் மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த அரசு கட்டமைப்பே நமக்கு எதிரானது.

ஆகவே திமிர் பிடித்த அதிகாரிகள் நிறைந்த அரசு கட்டமைப்பையும், நாடுமுழுவதும் பரவிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தையும் மோதிவீழ்த்தி ஓர் மக்கள் ஜனநாயக கூட்டரசை உருவாக்க அனைவரும் ஒண்றினைய வேண்டியது அவசியம்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க