மதுரை:

திமுக ஆ.ராசா மீதான தாக்குதல்! தமிழ்நாட்டில் மத வெறியை தூண்டும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! என்ற முழக்கங்களின் அடிப்படையில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தின் அருகில் செப்டம்பர் 29 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஜனநாயக முற்போக்கு சக்திகளும் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

தோழர் ராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.க.இ.க, தலைமை உரையில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தமிழகத்தில் எப்படி மதவெறியை தூண்டி கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். PFI அமைப்பை தடைசெய்தது பற்றியும், அண்ணாமலையின் திமிர் பேச்சு பற்றியும் பேசி ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதன் அவசித்தையும் வலியுறுத்தி பேசினார்.

SKM, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தோழர் சந்தானம் பேசும்போது “ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி தந்து நீதிமன்றம் கலவரம் நடத்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதுபோன்ற சம்பவம் தொடந்து நடந்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என பேசி முடித்தார்.

தமிழ் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர், பேரறிவாளன், அவர்கள் பேசும்போது உழைக்கும் மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி வைத்திருப்பதும் வேசி மகன்கள் என்று  சொன்னதும் மனுதர்ம வேதங்கள்தான் என்பதை விரிவாக அம்பலப்படுத்தினார்.

திராவிட விடுதலை கழக மாவட்டச் செயலாளர் மா.பா.மணியமுதன் அவர்கள் பேசும்போது, “அறிவு கெட்ட அண்ணாமலைக்கு எல்லாம் ஐ.பி.எஸ் பதவி யார் கொடுத்தா என்று தெரியவில்லை, ராமானுஜர் ஐயங்கார் எழுதிய புத்தகத்தை படித்துப் பார்த்திருப்பாரா? தைரியமாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுங்கள் மனுதர்மத்தில் எழுதவில்லை என்று அங்கு வந்து நிரூபியுங்கள். இல்லையென்றால் நேருக்கு நேர் விவாதிக்க வாருங்கள். எவ்வளவு பெரிய ஆளை வேண்டுமானாலும் கூட்டி வாருங்கள் என பேசி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் முகத்திரையை கிழித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவின் பொதுச் செயலாளர் தென்னரசு அவர்கள் உரையாற்றும்போது, சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி வைத்துள்ள மனுதர்ம வேத இதிகாச குப்பைகளை அம்பலப்படுத்தியும், ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பேரணிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நடத்தப்படும் மத நல்லிணக்க பேரணிக்கு அழைப்பு விடுத்தார்.

வழக்கறிஞர் அபுதாகிர், அவர்கள் பேசும்போது “மக்களுக்கு உரிமை மறுக்கப்படும்போதும், அவர்கள் ஒடுக்கப்படும்போதும் மக்கள் அதிகாரம் என்பதுதான் சரியானது. மக்கள் அதிகாரம் மேலும் வளர வேண்டும் என ஆரம்பித்து திருவள்ளுவரின் கற்க கசடற குறளின்படி ஆ.ராசா படித்தார் அதன் அடிப்படையில் ஆழமாக கற்றுக் கொண்டால் அதனடிப்படையில் நின்றார். அதனால் ஆ.ராசா அவர்கள் பேசியது சரியானது, இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் பிரமனும் பிராமணனும் ஒன்றுதான் என சொல்லி வைத்துள்ளார்கள் என்பதை பல்வேறு புத்தகங்களில் இருந்தும் உதாரணமாக எடுத்து காண்பித்தார். அப்படி என்றால் பார்ப்பனர்களை கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியுமா? என அனைவரிடமும் கேள்வி எழுப்பினார். இதுபோல பல பித்தலாட்டங்கள் செய்யும்  ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை விரிவாக அம்பலப்படுத்தினார்.

தோழர் குமரன், புரட்சிகர இளைஞர் முன்னணி, அவர்கள் பேசும்போது “தற்போது புதிதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது; ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விசிக நடத்தும் பேரணிக்கும் தடை என்பது சரியான அணுகுமுறை அல்ல. மதவெறியை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்தை தடை செய்வது சரியானது. அதே நேரத்தில் மத நல்லிணக்கத்திற்காக நடத்தப்படும் பேரணிக்கு அனுமதி மறுப்பது என்பது தவறானது” என சுட்டிக்காட்டினார்.

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் முகமது அலி அவர்கள் பேசும்போது “ஆ.ராசா அவர்கள் பேசியதை வைத்துக்கொண்டு மதவெறியை தூண்டுகிறார்கள் காவி பாசிஸ்டுகள். உரிமைகளுக்காகப் போராடக் கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்கிறார்கள். உரிமைகளுக்கான போராட்டத்தில் தொடர்ச்சியாக களத்தில் நிற்போம்” என உறுதி அளித்தார்.

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரத்தின் மண்டல இணைச் செயலாளர் தோழர் சிவகாமு அவர்கள் பேசும்போது, “ஆ.ராசா அவர்கள் பேசியது சரி. இதை பயன்படுத்தி மதவெறியை தூண்டுகிறார்கள். அதைத்தொடர்ந்து பேசும்போது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலே தங்கள் வீட்டில் பெட்ரோல் குண்டுகளையும், மண்ணெண்ணெய் குண்டுகளையும் வீசிக் கொள்கிறார்கள். உண்மையிலேயே குண்டு போட வேண்டும் என நினைத்திருந்தால் இவர்களுடைய வீட்டில்போட்டு இவர்களை காலி செய்து இருக்க மாட்டார்களா? என கேள்வி எழுப்பினார்.

ஊரில் ஒரு பெரும பீத்த புடிச்ச நபர்(பிஜேபி) இருந்தானாம். அவன் தன் கைகளில் அனைத்து விரல்களிலும் மோதிரத்தை போட்டுக்கொண்டு திரிந்தானாம். ஊரில் உள்ள அனைவரிடமும் அதை காட்ட வேண்டும் அதை பார்த்து ஊரில் உள்ள அனைவரும் தன்னைப் புகழ்ந்து பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு மக்களிடம் போயுள்ளான். மக்கள் வயல் வெளிகளில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கே போய் விரல்களை நீட்டி நீட்டி பேசியுள்ளான், மக்கள் கண்டு கொள்ளவே இல்லை. அடுத்ததாக ஆற்றங்கரைக்கு சென்றானாம் அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களிடம் அதேபோல விரல்களை மேலே காட்டியும் கீழே காட்டியும் நீட்டி நீட்டியும் பேசியுள்ளான். மக்கள் கண்டு கொள்ளவே இல்லை.

ஒரு நாள் ஊரே பத்தி எரிந்து கொண்டிருந்ததாம் அங்குள்ள மக்கள் எல்லாம் தங்கள் வீடுகளை பற்றியுள்ள நெருப்புகளை அணைப்பதற்கு பல வேலைகளை செய்துள்ளனர்; இந்த பெருமை பீத்தக்காரன் அங்கேயும் போய் விரல்களை நீட்டி நீட்டி அந்த வேலையை செய் இந்த வேலையை செய் என பேசியுள்ளான். கொதித்துப் போய் மக்களில் சிலர் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம் நீ என்னவென்றால் இங்கு நின்று வெட்டியாக பேசிக் கொண்டிருக்கிறாய் என கண்டித்துள்ளார்கள். பிறகு தான் தெரிந்தது தன்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக வீடுகளை கொளுத்தியது அவன்தான் என்று, இதேபோல்தான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தங்கள் வீடுகளிலேயே பெட்ரோல் குண்டுகளை போட்டுக் கொண்டு தன்னை எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதற்காக வேலை செய்து கொண்டுள்ளார்கள். இதற்காக எவ்வளவு மோசமான விஷயத்தையும் செய்வார்கள் என எளிமையாக இந்த விஷயத்தையும் அம்பலப்படுத்தினார். இறுதியாக, ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியிலிருந்து நின்று காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும் என பேசி முடித்தார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ரவி அவர்கள் நன்றி உரையாற்றினார்.

உசிலை, திருமங்கலம் போடி, மதுரையைச் சேர்ந்த தோழர்களும் ஆதரவாளர்களும்  முற்போக்கு ஜனநாயக சக்திகளும் பரவலாக உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் பெண்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தொடக்கத்திலும் இறுதியில் முழக்கங்கள் போடப்பட்டது.

ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த நேரம் காலை சரியாக 10.30 அதற்கு ஒரு 15 நிமிடத்திற்கு முன்பு தான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என போலீசு தரப்பில் கூறப்பட்டது. காரணம் கேட்டால் பி.ஜே.பி – ஆர்எஸ்எஸ்காரர்கள் தினம் தோறும் பிரச்சினையை கிளப்புகிறார்கள். நாங்கள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஒரு வாரம் கழித்து நடத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். எந்த பிரச்சினை வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என நாம் பேசிய பிறகு பத்து நிமிடம் நடத்திக் கொள்ளுங்கள் என கூறினார்கள். நாமும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கூட்டத்தை நடத்தினோம்.

உற்சாகத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

தோழமையுடன்,

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

000

சென்னை:

தமிழகத்தில் மதவெறியைத் தூண்டும் காவி பாசிஸ்ட்டுகளை முறியடிப்போம்! என்கிற தலைப்பில் ம.க.இ.க., பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு), மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்பில் 29.9.2022 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ஆ.கா.சிவா தலைமை தாங்கினார்.

பெரியார் தி.க-வின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் நாகராசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல இணைச் செயலாளர் தோழர் புவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சனாதன தர்மத்தை திரைகிழித்த ஆ.ராசாவுக்கு விடப்பட்ட மிரட்டல், பெரியார், வள்ளலார், சித்தர்கள் வழியில் தமிழகத்தில் கட்டியமைக்கப்பட்ட சனாதன எதிர்ப்பு மரபுக்கு எதிராக விடப்பட்ட மிரட்டல் என்பதையும், அம்பேத்கர் தனது பல்வேறு நூல்களில் அம்பலப்படுத்திய மனுதர்மத்தை தூக்கி எறிவது அவசியமானது என்பதை தோழர்கள் தமது கண்டன உரையில் குறிப்பிட்டனர்.

This slideshow requires JavaScript.

அந்த மனு தர்மம் – சனாதனத்தின் பெயரால் இந்து ராஷ்டிரத்தை கட்டியமைக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலானது அம்பானி – அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு செய்யும் சேவையையும், கார்ப்பரேட் கொள்ளையையும் மூடிமறைக்கவே நாடு முழுவதும் மதவெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்திய பேச்சாளர்கள், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க” பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி” யை கட்டியமைக்க அறைகூவல் விடுத்தனர்.

திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டமானது, ஆவடி மாநகரின் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் மத்தியில் சிந்தனையை தூண்டும் விதமாக நடந்தேறியது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்.

000

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு: 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க