உ.பி: ஊதிய முரண்பாடுகள் மற்றும் மின்துறை தனியார்மயமாவதை எதிர்த்து மின் ஊழியர்கள் போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் ஒருவரான சந்தீப், மாதம் ரூ.8,000 சம்பளம்தான் கிடைத்ததாகவும், கடந்த 6 ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் கூறினார்

0

திய முரண்பாடுகள் மற்றும் ‘பவர் கார்ப்பரேஷனின் சர்வாதிகாரப் போக்கை’ கண்டித்து உத்தரப்பிரதேசம் முழுவதும் ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் நவம்பர் 18 அன்று சாலைகளில் மறியலில் போராட்டம் நடத்தினர்.

500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் லக்னோவில் உள்ள சக்தி பவனில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

நிர்வாகத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால் பொறியாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் “அனைத்து மின்வாரியங்களிலும் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு ஏற்கனவே கூடுதல் தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த காலத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்று கூறியுள்ளனர்.

ஊதிய முரண்பாடுகள் மற்றும் ‘பவர் கார்ப்பரேஷனின் சர்வாதிகாரப் போக்கை’ கண்டிப்பது மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும், அனைத்து அவுட் சோர்ஸ் ஊழியர்களையும் முறைப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அகில இந்திய பவர் இன்ஜினியர்ஸ் ஃபெடரேஷன் (AIPEF) தலைவர் ஷைலேந்திர துபே கூறினார்.

படிக்க : உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

“லோக்சபா மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ எரிசக்திக்கான நிலைக்குழுவுக்கு பரிந்துரைத்தாலும், இன்றுவரை, நிலைக்குழு மின் ஊழியர்கள் அல்லது மிகப்பெரிய பங்குதாரர்களான மின்சார நுகர்வோருடன் எந்த விவாதத்தையும் நடத்தவில்லை” என்று துபே கூறினார்.

அனைத்து மின்துறை ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் கூட்டமைப்பு நிர்வாகி கோரிக்கை விடுத்தார். மின்துறை ஊழியர்களின் குறைகளை தீர்ப்பது தொடர்பாக அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்று விமர்சித்ததுடன், ஊதியம் வழங்குவதற்கான வாக்குறுதியையும் அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் ஒருவரான சந்தீப், மாதம் ரூ.8,000 சம்பளம்தான் கிடைத்ததாகவும், கடந்த 6 ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் கூறினார். “நான் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் ஈடுபட்டிருந்தாலும், நான் அவுட் சோர்ஸின் வேலைமுறையில் இருந்து, முறைப்படுத்தப்பட ஊழியராக மாற்றபடவில்லை” என்று அவர் கூறினார்.

தலைவர், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்வு முறையின் கீழ் தேர்வு நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்ரா மற்றும் கிரேட்டர் நொய்டா விநியோகத்தை தனியார்மயமாக்குவதை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மின்வாரிய ஊழியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வசதியும், 9 ஆண்டுகள் – 14 ஆண்டுகள் – 19 ஆண்டுகள் பணியாற்றிய மூன்று பதவி உயர்வு ஊதிய விகிதங்கள் வழங்க வேண்டும். ஊழலை தடுக்க சுமார் ரூ.25,000 கோடி மதிப்பிலான மின் மீட்டர்கள் கொள்முதல் உத்தரவுகளை ரத்து செய்து, ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் போராடும் மின்துறை ஊழியர்கள்.

மேலும், மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்புக்காக மின்வாரிய ஊழியர் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்மாற்றி பணிமனையை தனியார்மயமாக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், 765/400/220 ஆகிய துணை மின் நிலையங்களை அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் இயக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். என்ற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டமான தனியார்மய-தாராளமய-உலகமயத்திட்டத்தின் அடிப்படையில், உத்தரப்பிரதேச மாநில மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது யோகி ஆதித்யநாத் அரசு.

கல்பனா
செய்தி ஆதாரம் : நியூஸ்கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க