20.11.2022
பத்திரிகை செய்தி
20.11.2022 அன்று நடைபெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கீழ்க்காணும் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.
1)13.11.2022 ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ; அம்பானி – அதானி பாசிசம் முறிபடிப்போம் என்கிற முழக்கத்தின் அடிப்படையில் செப்.17 அன்று நடைபெற்ற மாநாட்டின் தொடர்ச்சியாக நவம்பர்- டிசம்பர் 2022-ல் இருமாத இயக்கம் மேற்கொள்வது, இந்த இயக்கத்தை தோழமை அமைப்புகளான ம.க.இ.க. பு.மா.இ.மு மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
2)கடந்த 16.4.2021 அன்று உருவாக்கப்பட்ட மாநில ஒருங்கிணைப்புக்குழு தனது செயல்பாடுகளை இடரின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு குழு கட்டமைப்பு உதவவில்லை. ஒரு சில மண்டலங்கள்/ மாவட்டங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வேறு சில மண்டலங்கள்/ மாவட்டங்களில் உற்சாகத்துடனும், முன்னேற்றம் காட்டும் வகையிலும் வேலைகள் நடந்துள்ளன. ஆனால், ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதித்துவத்தில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்வதன் மூலம் ஒருங்கிணைப்புக்குழுவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முடியும் என பரிசீலனையில் உணர முடிந்தது. அதே போல ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களில் சிலர் பொது முடிவுகளுக்கு கட்டுப்படாமல் எதிர்த்திசையில் பயணிப்பதும் பரிசீலிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாநில ஒருங்கிணைப்புக்குழு கீழ்க்காணும் விதமாக மாற்றியமைக்கப்படுகிறது.
1.தோழர் ஆ.கா.சிவா – ஒருங்கிணைப்பாளர்
2.தோழர் எஸ்.பரசுராமன் – இணை ஒருங்கிணைப்பாளர்
3.தோழர் ம.சரவணன் – ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்
4.தோழர் எஸ்.சுந்தர் – ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்
5.தோழர் து.லெட்சுமணன் – ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்
மாநில ஒருங்கிணைப்புக்குழு மாற்றியமைக்கப்பட்ட பிறகு கூடுதல் உற்சாகத்துடன் இயங்குவதற்கு மண்டல/ மாவட்டக்குழுக்கள் ஒத்துழைப்பு தர கோருகிறோம்.
இவண்,
(ஆ.கா.சிவா)
ஒருங்கிணைப்பாளர்.