கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் சாவர்க்கரின் படத்தை வைக்காமல் தாவூத் இப்ராஹிம் படத்தையா வைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

20.12.2022

கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு!
தென்னிந்தியாவில் இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையானது கர்நாடகா !

கண்டன அறிக்கை

ர்நாடக சட்டசபையில் நேற்றைய தினம் (19.12.2022) இந்து மகா சபா பயங்கரவாதி சாவர்க்கரின் படம் திறக்கப்பட்டு இருக்கிறது.  இதற்கு எதிராக அம் மாநில காங்கிரசு மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர் கட்சிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் துளியும் மதிக்காத மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் சாவர்க்கரின் படத்தை வைக்காமல் தாவூத் இப்ராஹிம் படத்தையா வைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், பெண்கள், இந்த நாட்டின் உழைக்கும் மக்கள், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சித்தாந்தத்தை  கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ், இந்துமகா சபா ஆகியவை  பயங்கரவாத அமைப்புகளே.

காந்தியை கொன்றது முதல் மாலேகான், சம்ஜவ்தா உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளிலும்  இந்துமகா சபா, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நேரடியாக பங்கு பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பின்  தலைவரான சாவர்க்கரின் படம்தான் கர்நாடக சட்டசபையில் இடம்பெற்று இருக்கிறது.


படிக்க : நம்ம ஸ்கூல் திட்டம்! நமக்கல்ல; கார்ப்பரேட்டுக்கு கல்வியை தாரை வார்க்கவே! | மக்கள் அதிகாரம் 


ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு அது தொடர்பான திட்டமிட்ட கலவரங்கள் உருவாக்கப்பட்டது கர்நாடகாவில் தான்,  சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு கலவரங்கள் இந்து மத வெறியர்களால் உருவாக்கப்படுவதும் கர்நாடகாவில் தான். ஹலால் இறைச்சிக்கு தடை விதிப்பதற்கான மசோதாவை கர்நாடக சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இவை அனைத்தையும் உற்று நோக்கும்போது வடஇந்தியாவைப் போலவே தென்னிந்தியாவில் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக கர்நாடகாவை மாற்றுவதற்கான முயற்சிகள் வெகு வேகமாக நடந்தேறி வருகின்றன என்பதே அறிய முடிகிறது. அதற்கு ஒரு முன்னோட்டமாகத்தான் சாவர்க்கரின் படம் சட்டசபையில் வைக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களையும் தலித்துக்களையும் பெண்களையும் ஒடுக்க வேண்டும், நாயகத்தை சிதைத்து மதச்சார்பின்மையை ஒழிக்க வேண்டும் என்ற பார்ப்பன – இந்து பாசிச  சித்தாந்தத்தின் தலைவனான சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டிருக்கிறது, இனியும் இந்த சட்ட மன்றத்தை ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று கூறுவதில் ஏதாவது துளியளவாவது நியாயம் இருக்கிறதா?

சட்டமன்ற நாடாளுமன்ற மாண்புகளை’ எல்லாம் தூக்கி குப்பைத் தொட்டில் வீசிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசாங்கங்களை சீர்குலைத்து ஆட்சிகளை கவிழ்ப்பதும், இன்னொரு புறம் ஆளுநர்கள் மூலம் ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதையும் மிகவும் சிறப்பாக செய்து வருகின்ற இந்த மோடி அமித்ஷா பாசிச கும்பலிடம் சாவர்க்கர் படம் குறித்து முறையிட முடியுமா?

இனியும் இந்த சட்டமன்ற, நாடாளுமன்றம்  மூலமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க  பாசிசத்தை வீழ்த்த முடியும் என்றும் நாம் நினைத்தால் அதைவிட மூடநம்பிக்கை எதுவும் இருக்க போவதில்லை.


படிக்க : குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !


ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் மக்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் மக்களையும் தலித்துகளையும் பெண்களையும் மீனவர்களையும் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் அடுத்தடுத்து தன்னுடைய காவி- கார்ப்பரேட் பாசிச ஆட்சிக்காக பலி கொடுக்க தயாராக வைத்திருக்கிறது மோடி – அமித்ஷா பாசிச கும்பல். அடுத்த ஆட்சி வந்தால் இந்த நிலைமை மாறிவிடும் என்று இனியும் நினைப்பதற்கு துளியும் இடமில்லை.

இந்து ராஷ்டிரத்தை அறிவிப்பதற்கான தேதியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பாசிஸ்டுகள். தேர்தல் பாதைக்கு வெளியே மாபெரும் பாசிச எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை கட்டி அமைத்து, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை உருவாக்கி இந்து மதவெறி பாசிஸ்டுகளை களத்தில் – தெருவில் எதிர்கொள்ள வேண்டும்.

அம்பானி-அதானி பாசிசம் வீழ்த்தப்படுவதே நம்முடைய முதல் இலக்காக இருக்க வேண்டும் என்றும் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9963266321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க